புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
69 Posts - 52%
heezulia
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for Ho_Chi_Minh

Topics tagged under ho_chi_minh on ஈகரை தமிழ் களஞ்சியம் Yzco_y10

இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி அல்லது புரட்சியாளன் யார்? என்பதில் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது வியட்நாமின் ஹோ சி மின். உலகம் உள்ள காலம் வரை நிற்கும் அவரது சாதனை.


காரணம் யாரும் எளிதில் அந்த சாதனை சிகரத்தின் அடிவாசலை கூட நெருங்குவது சிரமம்.

சோழர்கள் காலத்திலே நாம் வியட் அல்லது வியட் நாம் என அழைக்கபட்ட நாடு, பின் பிரான்சின் காலணியாக மாறி இந்தோ சீனா என அழைக்கபட்டது, அந்த அடிமைநாட்டில்தான் ஹோ பிறந்தார், இன்றுவரை அவரின் சொந்தபெயர், பிறந்த சரியான நாள் என எதுவும் தெரியாது, புனை பெயர்கள் 100க்கும் மேல் உண்டு.

மக்கள் அழைத்த பெயர் ஹோ சி மின் அதாவது வியட்நாமிய மொழியில் இருளை விரட்டியவர்.

பெரும் படிப்பு படித்தவரில்லை, ஆனால் தந்தையின் எதிர்ப்பினையும் மீறி பிரென்ஞ் கற்றார், ஒரு சமையல்காரனாகத்தான் கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். உலகினை சுற்றினார், அதுதான் அவரது சிந்தனையினை மாற்றிற்று.

எஜமான் நாடு பிரான்ஸ், சுதந்திர தேவி சிலையினை கொண்டாடும் அமெரிக்கா, பொதுவுடமை ரஷ்யா, சன்யாட்சனின் சீனா என முதல்சுற்று 1927க்குள் முடிந்தது, லெனினை மட்டும் அவரால் சந்திக்க முடியவில்லை.

ஆனால் கம்யூனிச அமைப்புகளில் பங்கெடுத்தார்.

அவருக்கு கம்யூனிசம் தெரியாது, தொழிற்சங்கம் தெரியாது, மார்க்ஸிசம் தெரியாது உலகெல்லாம் சுற்றியதில் அவர் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். வியட்நாம் சுரண்டபடுகின்றது, மக்களை திரட்டி அதற்கு விடுதலை கொடுக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஒரு கம்யூனிச கட்சியை நிறுவினார், அக்காலத்தில் ஏழைகளை ஒருங்கிணைக்க அது மட்டுமே சாத்தியம், மக்களிடம் துப்பாக்கியினை கொடுத்து அதோ பிரென்ஞ் வீரன், சுடு அல்லது குண்டுகட்டி சாவு என அவர் போராடவில்லை, அவரது முதல் அடி எது தெரியுமா?

மக்களுக்கு எழுத படிக்க்க சொல்லி கொடுத்து சிந்திக்க செய்வது, அதனைத்தான் செய்தார் 5 ஆண்டுகாலம் அவரது பணி இப்படித்தான் இருந்தது.

ஒரு வழியாக மக்களை திரட்டி பிரான்சினை எதிர்க்க தொடங்கினார், முதல் வியட்நாம் போராட்டம் அப்பொழுதுதான் வெடித்தது, பிரான்ஸ் முதல் எதிர்ப்பினை சந்திக்க ஆரம்பித்த‌பொழுதுதான் சிக்கல் இரண்டாம் உலகப்போர் வடிவில் வந்தது. 1941ல் ஜப்பான் வியட்நாமினை ஆக்கிரமித்தது.
நரிக்கு தப்பி புலியின் வாயில் விழுந்தது வியட்நாமிய நிலை.

இம்முறை மூர்க்கமான ஜப்பானியரை எதிர்த்து அவர் போராட்டம் திரும்பிற்று, சொல்லிகொள்ளும்படியான உதவிகள் இல்லை. பெரும் அமெரிக்காவே ஜப்பானை கண்டு அஞ்சிய காலங்கள் அவை. ஆனாலும் வியட்நாமிய காடுகளில் இருந்துகொண்டு கடும் கொரில்லா தாக்குதல்களை தொடுத்தார் ஹோ.

அந்தகால ஜப்பானியபடை மகா கொடூரமானது, அதனிடம் சிக்காமல் ஹோ ஆடிய ஆட்டம்தான் அவரது மகத்தான முதல் இன்னிங்க்ஸ். ஒரு வழியாக அணுகுண்டு அடி வாங்கி ஜப்பான் பின் வாங்க, வியட்நாம் சுதந்திரமானது, அந்த பிரகடணத்தை அறிவிக்க அவரை அழைக்கபொழுது, அவர் அவசரமாக செய்தது என்ன தெரியுமா?

அவரிடம் நல்ல துணி கிடையாது, உலகினர் முன் பேசுவதற்கு முதல்முறையாக நல்ல ஆடை தைத்துகொண்டிருந்தார்.

ஆனால் மறுபடிவந்து ஆக்கிரமித்து, விட்ட இடத்தினை பிடித்தது பிரான்ஸ். ஹோ வின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆரம்பமாயிற்று
ஏற்கனவே 8 வருட போராட்டம், பின் ஜப்பானியருடனான 3 வருட யுத்தம், இம்முறை மறுபடியும் பிரான்ஸுடன் யுத்தம் ஆரம்பம், கொஞ்சமும் அசரவில்லை ஹோ, மக்கள் கொஞ்சமும் சளைக்காமல் அவருடன் இருந்தார்கள், அந்த அளவிற்கு அவரை நம்பினார்கள்.

இம்முறை சோவியத் மற்றும் மாவோவின் சர்வதேச பலம் இருந்தது, யார் இருந்தால் என்ன? களத்தில் சாவது வியட்நாமியர்கள். 8 ஆண்டுகால போருக்கு பின் 1955ல் பிரான்ஸ் கொஞ்சம் இறங்கி வந்தது,

அதாவது வியட்நாமினை இரண்டாக பிரித்து வடக்கு வியட்நாம் ஹோ சி மின் கட்சிக்கு, தெற்குவியட்நாம் பிரான்சுக்கு.

சுதந்திரம் என்றால் அது வியட்நாமின் மக்களுக்கு, வடக்கு வியட்நாமியரை சுதந்திரமாகவும், தெற்கு வியட்நாமியரை அடிமைகளாகவும் விடமுடியுமா? என்றார் ஹோ, எப்படிபட்ட உன்னத தலைவன்.

போராட்டம் ஆரம்பித்து 25 ஆண்டுகளில் வடக்கு வியட்நாம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒதுங்காத ஹோ, வியட்நாமினை ஒருங்கிணைக்கும் போராட்டத்திற்கு தாவினார், மிக முக்கியமான காலகட்டம் இது. ஒரு தலைவன் எப்படி சிந்திக்கவேண்டும் என்ற தொலைநோக்கு ராஜதந்திரம் இது.

அதாவது ஜெர்மனை பிரித்தது போல, கொரியாவினை பிரித்தது போல மேற்குலகம் வியட்நாமினையும் பிரித்திரிந்தது, இதோடு ஹோ ஈசிசேரில் படுத்திருந்தால் இன்று வடக்கு வியட்நாம் வடகொரியா போல தரித்திர தாதா தேசமாக இருந்திருக்கும், தென் வியட்நாம் அமெரிக்க அடிமையாக இருந்து தீரா மோதல்களை இன்றுவரை தொடர்ந்திருக்கும்.

கொரிய நிலவரம் போல வியட்நாம் நிலையும் ஆகியிருக்கும்

இந்த தொலைநோக்கில்தான் அடுத்த கட்ட யுத்தத்தினை தொடர்ந்தார் ஹோ, பலவீனமான பிரான்சினால் ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை, அதுவரை பிண்ணணியில் இருந்த அமெரிக்கா, அந்த நொடியில் அவமானத்தில் “சனியனே விலகு”, என பிரான்சை விரட்டி, தானே களமிறங்கியது.
35 ஆண்டுகள் போராட்டம் இரு நாட்டு ராணுவங்களை விரட்டிய ஹோ, இம்முறை உலகமாகா வல்லரசினை எதிர்த்து நிற்கும் தருணம், அமெரிக்காவோ 5 லட்சம் வீரர்களுடன் நவீன ராணுவத்துடன் களமிறங்கி நிற்கின்றது.

ஹோ வின் மூன்றாம் இன்னிங்க்ஸ் ஆரம்பமாயிற்று

ஹோவின் தாக்குதல் முன் அமெரிக்கபடைகள் சிக்கின, அவமானத்தில் அமெரிக்கா கண்மூடித்தனமாக தாக்கியது.

உடனே அமெரிக்க அதிபரை கொல்ல மனிதவெடிகுண்டினை அனுப்பவில்லை ஹோ, ராஜதந்திரமாக தாக்கினார்., அடிக்கடி அவரது உரைகள் அமெரிக்க பத்திரிகையில் வருமாறு பார்த்துகொண்டார்.

மக்கள் சிந்திக்கும் முன் ஹோ வின் கதையினை முடிக்க விரைவாக கிளம்பியது அமெரிக்க ராணுவம், அவர்கள் வாங்கி இருந்த அடி அப்படி.

உளவுதுறைகளும் சறுக்கின, ஹோ யார்? எப்படி இருப்பார், அவர் அலுவலகம் எது? அல்லது எந்த காடு என்று கூட தெரியாது, காரணம் தனி ஆளாக கிராமத்து வயல்களில் ஹோ உழுதுகொண்டிருந்த அதிசயமும் நடந்தது, எப்படி கண்டுபிடிப்பது, ஆனால் யுத்தம் நடந்துகொண்டு இருந்தது.

சேற்றில் புதைந்த யானை நிலையில் இருந்தது அமெரிக்கா, யார் எதிரி என தெரியாது,

வயலில் களைவெட்டிகொண்டிருக்கும் பெண்கள் கூட சிறிய அமெரிக்க குழுவினை கொன்றுவிட்டு அமைதியாக களைபறிக்கும் அளவிற்கு ராணுவம் அடிவாங்கி இருந்தது.

ஆனாலும் அமெரிக்க மக்களிடம் ஹோ இப்படி பேசினார்

“அமெரிக்க சுதந்த்திரத்தினை அங்கீகரித்து, சுதந்திர தேவி சிலையினை கொடுத்தது பிரான்ஸ், அவர்கள் எங்கள் சுதந்திரத்தை ஏன் பறித்தார்கள்?

சுதந்திரத்தின் மேன்மையினை உணர்ந்தவர்கள் அமெரிக்கர்கள். அப்படிபட்ட அமெரிக்கா, இந்த சின்னஞ்சிறிய தேசத்தை அடக்குவது எவ்வகை நியாயம்?

அமெரிக்கர்களே, கொஞ்சம் அந்த சுதந்திர தேவி சிலையினை உற்றுநோக்கிவிட்டு அரசிடம் கேளுங்கள், நான் அமெரிக்க சட்டத்தினை மிக நேசிக்கின்றேன், முழுக்க முழுக்க மனித சுதந்திரத்த காப்பாற்றும் சட்டமது” என பேசி அமெரிக்க மக்களையே சிந்திக்க வைத்தார்.

அமெரிக்க மக்களின் மனநிலை மாற ஆரம்பித்த தருணம் அது, வெளிப்படையாக கேட்டார்கள். வியட்நாம் சுதந்திரத்தில் உங்களுக்கு என்ன சிக்கல்?

மக்கள் வீதிக்கு வருமுன் ஹோ வின் கதையினை முடித்துவிட தீர்மானித்தது அமெரிக்கா, ராணுவபலத்தை பலமடங்கு அதிகரித்தும் அது முடியவில்லை.

சீனாவினையோ அல்லது ரஷ்யாவினையோ அழைத்திருந்தால் ஓடிவந்து அமெரிக்காவுடன் மோதியிருப்பார்கள், சாத்தியம் இருந்தது, ஹோவிடம் அந்த யோசனை வைக்கபட்டபொழுது அவர் சொன்னார்,

“உலகில் யாரும் சும்மா உதவமாட்டார்கள், உதவி கேட்டால் விலை அதிகம் கொடுக்கவேண்டும் அதாவது அமெரிக்கா வெளியேறினால் நாளையே இவர்களுடனும் போராட வேண்டும், அது நீளும்.

அந்த நீண்ட போராட்டத்தை அமெரிக்காவோடு மட்டும் நடத்தலாம், இன்னும் 30 ஆண்டுகாலம் இந்த போர் தொடரலாம்”

35 ஆண்டுகால யுத்தத்தில் கிஞ்சித்தும் கலங்காமல் ஹோசிமின் வியட்நாம், அமெரிக்க படைகளை எதிர்த்து அடுத்த நீண்ட யுத்தத்திற்கு தயாரானது, ஆனால் ஹோ சி மின்னின் உடல்நிலை மோசமானது, செப்டம்பர் 2ம் நாளும் வந்தது.

யுத்தம் நடந்துகொண்டே இருந்தது, ஹோ சி மின் படுக்கையில் வீழ்ந்தார்.

அமெரிக்க படைகளுக்கெதிரான யுத்ததம் தொடங்கி 4 ஆண்டுகளில் ஹோ சி மின்னின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

1945ல் ஜப்பானிய படைகளை விரட்டிய ஹோ செப்டம்பர் 2ம் தேதிதான் வியட்நாம் சுதந்திர பிரகடனத்தை வாசித்தார்.

அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க யுத்த காலத்திலே செப்டம்பர் 2ல் வடக்கு வியட்நாமில் காலமானார் ஹோ.

அவ்வளவுதான் அமெரிக்கா துள்ளி எழும்பியது இன்னும் 10 மணிநேரத்தில் வியட்நாம் யுத்தம் முடிந்துவிடும் என அறிவித்துவிட்டு கிளம்பியது,

ஆனால் ஹோ உருவாக்கி இருந்த கொள்கையும் விடுதலை வேட்கையும் கொண்ட வியட்நாமியர் முன் அமெரிக்க படைகளால் நிற்கமுடியவில்லை.

காரணம் தனக்கு பின் ஒரு நல்ல தலைவனை உருவாக்கிவிட்டு செல்பவனே உன்னத போராளி, அதாவது உண்மையான‌ மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டு ஒருவன் உண்மையாக போராடினான் என்றால் அதன் பின் அவன் இடத்தினை நிரப்ப நிச்சயம் ஆயிரம் பேர் வருவார்கள், அதில் ஒருவன் நிச்சய்ம் இடம் பிடிப்பான்.

லெனினுக்கு பின் ஸ்டாலினும், மார்த்திக்கு பின் காஸ்ட்ரோவும், சன்யாட்சனுக்கு பின் மாவோவும் அப்படித்தான் எழும்பி வரலாற்றில் இடம் பிடித்தார்கள், ஒரு போராளி தான் மட்டும் அனைத்தையும் கையில் வைத்திருந்தான் என்றால் அவனுக்கு பின் போராட்டம் என்ன ஆகும்?

இலங்கை தமிழர் நிலையே சாட்சி

நிச்சயம் வியட்நாமியர்களால் 3 வல்லரசுகளை விரட்ட முடிந்ததென்றால் இலங்கையில் ஏன் விடுதலை கிடைக்கவில்லை என்றால்? அந்த நிலை எப்படியானது என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். அதாவது மாவோ போலவோ ஹோ போலவோ மக்களை திரட்டி பெரும் எழுச்சி போராட்டம் அங்கு நடைபெறவில்லை, அல்லது நடைபெறவிடவில்லை.

அப்படி 1969ல் ஹோ மறைந்தாலும் அவரின் இடத்தினை ஜெனரல் கியாப் பிடித்துகொண்டார், ஹோவின் அற்புதமான தயாரிப்பு அவர். ஹோ சொல்லிகாட்டிய அரிச்சுவடி வழியே போராடினார். காரணம் ஹோ சொன்னது அப்படி.

“இந்த போராட்டம் 40 வருடம் கூட நீடிக்கலாம், மனம் தளரகூடாது, நிச்சயம் ஒருநாள் வியட்நாம் விடுதலை அடையும், ஒதுங்க ஒரு இடம் இல்லாமல் தொடங்கபட்ட போராட்டம், நான் வடக்கு வியட்நாம் எனும் அங்கீகாரம் வரை கொண்டுவந்தாயிற்று, இனி உங்கள் கையில்.”

தலைவன் இல்லாவிட்டாலும் ஆயிரம் ஹோ உருவானார்கள், அமெரிக்க ராணுவம் அடிவாங்கிற்று, ஆத்திரத்தில் நேப்பாம் எனப்படும் ரசாயாண குண்டுகளை வீசியது அமெரிக்கா, ஆடையின்றி ஓடிவரும் சிறுமியின் படம் பார்த்திருப்பீர்கள்,

அது அமெரிக்க மக்களை உருக்கிற்று, கூடவே ஹோ கேட்டிருந்த அதே கேள்விகள் “சுதந்திரதேவி சிலையினை வைத்துகொண்டா, எமது சுதந்திரத்தினை தடுக்கின்றீர்கள்?”

இங்குதான் ஹோ நின்றார், 5 லட்சம் வியட்நாமியர்கள் பலியான காலத்திலும் அமெரிக்காவில் புகுந்து தற்கொலை குண்டு, துப்பாக்கி சூடு என அவர்கள் இரங்கவில்லை (அதாவது பதிலுக்கு பதில் என்பதல்ல போராட்டம், விவேகமான ராஜதந்திரமும் வேண்டும்). அப்படி இறங்கி இருந்தால் நிலை விபரீதம்.

ஆனால் அடித்துகொண்டே, அடிவாங்கி கொண்டே அமெரிக்க மக்களின் அனுதாபத்தினை வியட்நாமியர்கள் பெற்றார்கள், அமரிக்க மக்கள் பொங்கினால் அரசு அசையும் எனும் சாதாரண தத்துவம், அது வேலை செய்தது.

விளைவு அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

“சின்னஞ்சிறு தேசத்தில் 10 ஆண்டுகளாக வெற்றிபெறாவிட்டால் வந்துவிடுங்கள்” என்ற கோஷங்கள் பெருகின, அமெரிக்கா பெரும் அவமானத்தில் சிக்கியது, ஒரு கட்டத்தில் வியட்நாமிய படைகள் சைகோனை (இன்று ஹோ சி மின் சிட்டி) கைபற்றின, அமெரிக்க படைகளை திரும்ப அழைத்தது.

அமெரிக்கா இன்றுவரை எத்தனையோ போர்களை நடத்தியே தேசமது, ஆனால் முதல் மற்றும் இந்நாளை வரை ஒரே தோல்வியை அங்குதான் சந்தித்தது. அவர்களின் பத்திரிகைகளே சொன்னது, “இந்த நூற்றாண்டின் பெரும் ராஜதந்திரி ஹோ, கம்யூனிஸ்டாக இருந்திருந்தால் இந்தவெற்றியினை பெற்றிருக்கமாட்டார், அவர் நாட்டுபற்றில்தான் கம்யூனிசம் கலந்திருந்தது, அது மக்களை ஈர்த்தது, பெரும் புரட்சி அவரால் செய்யமுடிந்தது, அவரே மாபெரும் புரட்சியாளன்”.

இணைந்த வியட்நாம், ஹோ எழுதியிருந்த சட்டங்களையே நாட்டின் சட்டமாக்கிற்று, ஆச்சரியமாக அவர் அமெரிக்க சட்டங்களை படித்திருந்தார்,

போராட்ட காலத்திலே வருங்கால வியட்நாமிய சட்டங்களை எழுதியிருந்தார், அது பெரும்பாலும் அமெரிக்க சட்டங்களை சார்ந்தது.

ஹோ சொன்னது போல “அமெரிக்க ராணுவம் அபாயகரமானது, அரசியல் பொல்லாதது ஆனால் தனிமனித சுதந்திரத்தை அவர்கள் சட்டமல்லாமல் எதனாலையும் காப்பாற்ற முடியாது, முழுக்க முழுக்க சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம், நாம் அதற்குத்தான் போராடுகின்றோம்”.

எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாரோ, தயக்கமே இல்லாமல் அவர்களின் நல்ல விஷயங்களை ஏற்றுகொண்டார், இதுதான் ஹோ.

அந்த ஒப்பற்ற தலைவனின் உடலை வியட்நாமியர்கள் பதபடுத்தி லெனின்,மாவோ போல இன்றும் பாதுகாத்து வருகின்றார்கள். அமெரிக்க படைகள் வெளியேறும் வரை அதனை கண்டுதான் தான் உத்வேகம் பெற்றதாக ஜெனரல் கியாப் சொல்வார்.

வியட்நாமின் சைகோன நகரினை ஹோ சி மின் சிட்டி என பெயர் மாற்றம் செய்து அங்கு இன்றளவும் அவரின் உடல் வைக்கபட்டிருக்கின்றது, புரட்சியின் தாக்கம் அப்படி.

உயிரினை பணயம் வைத்து லட்சகணக்கான மக்களை திரட்டி, நாட்டை மட்டும் நேசித்து,காடும்,மலையும் கடந்து உணவில்லாமல் ஓடி, உலகினை படித்து, உறுதியுடன் நொடிக்கு நொடி போராடி, ஆளும் வர்க்கத்தினை தூக்கி எறிவது எவ்வளவு சிரமம், அதுதான் புரட்சி.

ரஷ்யாவும்,சீனாவும்,வியட்நாமும் கண்டது அது. அண்ணா தலமையில் தமிழகம் கண்ட புரட்சி வேறு

1975ல்தான் வியட்நாம் ஒன்றினைந்தது, மெல்ல எழுந்தது. ஜப்பானும், தென்கொரியாவும்,தைவானும் அமெரிக்க பார்டனர்கள் அவர்கள் வளர்ந்தது விஷயமே அல்ல, ஆனால் இன்று வளரும் நாடு வியட்நாம், இதுதான் அதிசயம்.

அரிசி உற்பத்தியில் முதல் 3 நாடுகளுக்குள் வந்துவிட்டார்கள்.

கடந்தவருடம் சீனா எல்லை மீறி கடலுக்குள் கச்சா எண்ணெய் எடுக்கவந்தபொழுது மிக தைரியமாக விரட்டினார்கள், 40 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவே வியட்நாமிய முக்கிய தலைவரான குயெனை வெள்ளை மாளிகக்கு அழைத்தார். (சீனாவினை எதிர்த்தபின் விடுவாரா? )

ஒன்றுபட்ட வியட்நாமின் அதிபராக குயான் அமெரிக்காவிற்கே விருந்தினராக சென்றார் அல்லவா? இதுதான் ஹோ வின் வெற்றி. நிலைத்து நிற்கும் வெற்றி.

இன்று ஹோ சி மின் பிறந்த நாள். பதபடுத்தபட்ட அந்த புரட்சியாளன் உடலினை தன்மானமிக்க, கவுரமவமான வியட்நாமிய குடிமக்களாக வியட்நாமியர்கள் வணங்கி செல்கின்றார்கள்,

கல்வியில் வியட்நாம் மிக முன்னேற்றம் அடையவேண்டும் என்பது ஹோவின் கொள்கை, அதன்படி இன்று உலகின் ஏராளமான‌ ஆங்கில ஆசிரியர்களுக்கு வாய்பளிக்கும் நாடு வியட்நாம், அவ்வகையில் அக்குழந்தைகள் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை எல்லாம் இதுதான்
அங்கிள் ஹோ இஸ் அவர் ரோல் மாடல்.

ஒரு மெழுகுவர்த்தி ஆயிரம் தீபங்களை ஏற்றுவது போல, ஒரு நல்ல தலைவன் ஆயிரமாயிரம் அற்புத தலைவர்களை உருவாக்கலாம், ஹோ அதனைத்தான் சொல்லி சென்றிருக்கின்றார்.

3 வல்லரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வரலாற்றின் பெரும் போராளி வரலாற்றில் என்றும் ஹோ சி மின் ஒருவர்தான்.

குறிச்சொற்கள் #Ho_Chi_Minh #ஹோ_சி_மின்


Back to top