புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
72 Posts - 53%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

1 என்னுடைய பசி இந்தியாவின் பசி


காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

2. கடமை மறந்தால்….


டிரான்ஸ்வாலின் தலைநகரமான பிரிடோரியாவில் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிந்து, அரசாங்கத்துடன் சமரசப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலில் இருசாராரும் விதி முறைகளைப்பற்றி விவாதித்தனர். அதன் பின் முதற்குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டது. இறுதிக்குறிப்பு ஒன்று தயார் செய்யவேண்டியது தான் இப்பொழுது பாக்கி. இதற்கிடையில் போனிக் ஆசிரமத்திலிருந்து காந்திஜீக்கு, ”கஸ்தூரிபாய் உடல் நலம் மிகவும் குன்றிவிட்டிருக்கிறது. அவருடைய நிலைமை மோசம் அடைந்துவிட்டது. உடனே வாருங்கள்” என்று தந்தி கிடைத்தது.

காந்திஜி அந்தத் தந்தியைத் தீனபந்து ஆண்டுரூஸ் அவர்களிடம் கொடுத்துவிட்டார். அவர் அதைப் படித்துவிட்டு ”நாம் இங்கிருந்து உடனே போயாகவேண்டும்” எனக் கூறினார்.

”இது எப்படி முடியும்? இங்கு சமரச வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 24 மணி நேரத்தில் தஸ்தாவேசுகளின் பரிமாற்றம் ஆகக்கூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்ன காரணம் இருந்தாலும் சரி, இந்நிலையில் எனக்கு இங்கிருந்து செல்ல அதிகாரம் கிடையாது. எல்லோரின் நன்மையை உத்தேசித்து உருவாகும் இந்த சமரச உடன்படிக்கையில் ஒருவருக்காக முடிவு ஏற்படும்படி செய்யும் இந்தப் பாபத்தொழிலைச் செய்ய நான் தயாராக இல்லை. என்னுடைய கடமையை மறந்து ஒருவேளை ஒருநாள் முன்னதாக நான் அங்கு போனாலும் அவள் பிழைத்து எழுந்து விடுவாள் என்ற நம்பிக்கை என்ன இருக்கிறது? எந்தக் காரியத்தைக் கையில் எடுத்திருக்கிறேனோ அதை முடித்த பிறகு தான் நான் இங்கிருந்து செல்ல முடியும்” என்று காந்திஜி பதிலுரைத்தார்.

காந்திஜீயின் திடமான முடிவை எண்ணி ஆண்ட்ரூஸ் மிகவும் வருத்தம் அடைந்தார். அவர் உடனே ஜெனரல் ஸ்மட்ஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ”நாங்கள் ஓர் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறோம். திருமதி காந்தி உடம்பு சௌகரியமில்லாமல் இருப்பதாக பினிக்ஸிலிருந்து தந்தி வந்திருக்கிறது. காந்திஜி உடனே வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.”

ஜெனரல் ஸ்மட்ஸ் பதிலளித்தார்: ”காந்திஜீ சந்தோஷமாகச் செல்ல்லாம். நம்முடைய உடன்படிக்கை நிச்சயமானது தான்”

காந்திஜீயின் முடிவு பற்றி ஜெனரல் ஸ்மட்ஸ் அவர்களிடம் விவாதிக்கொண்டே ஆண்ட்ரூஸ் ‘மாலை நேரமதான் இருந்தாலும் காந்திஜீ தயார் செய்திருக்கும் குறிப்பைத்தங்களிடம் கொண்டு வருகிறேன். தாங்கள் தங்கள் குறிப்பைத் தயார் செய்து வைத்துக்கொள்வீர்களானால் நலமாக இருக்கும் என்றார்.

”மிகவும் நேரமாகிவிடுமே! நான் இன்னும் முக்கியமான காரியங்கள் கவனிக்கவேண்டியிருக்கிறது. இருந்தாலும் தாங்கள் காந்திஜீயின் குறிப்பை எடுத்துக் கொண்டுவாருங்கள் நானும் என்குறிப்பை தயார் செய்யச் சொல்லிவிடுகிறேன்” என்று ஜனரல்ஸ்மட்ஸ் கூறினார்.

திட்டப்படி காரியங்கள் அனைத்தும் நடைப்பெற்றன. ஜெனரல் ஸ்மட்ஸின் குறிப்பை எடுத்துக்கொண்டு ஆண்ட்ரூஸ் திரும்பும்போடு இருவு பத்து மணி அடித்துக்கொண்டிருந்தது. வேலை முடிந்த பிறகுதான் காந்திஜீ பினிக்ஸூக்கு புறப்பட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

3. நீ என்னை நன்றாக பார்க்க முடிகிறதா?


வருஷம் 1934, ஒரிஸா யாத்திரை, ஒரு நாள் மாலை காந்திஜி தம் கூட்டத்தினருடன் யாத்திரை தொடங்கியிருந்தார். வழிநெடுக உற்சாகம் மிகுந்து காணப்படும் கிராமவாசிகள் வரிசை வரிசையாக நின்றுக்கொண்டு காந்திஜியின் வரவை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் மிகப்பெரிய கூட்டம். ஜனங்கள் தெரு முழுவதும் பரவி இருந்தார்கள். இதன் மத்தியில் குழிவிழுந்தகண்களும், மங்கலான பார்வையும், தலை நரைத்தும் இருந்த ஓர் கிழவி அங்குமிங்கும் ஓடிக்கொண்டே ”எங்கே அவர்? நான் அவரைக் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்” என்று கூறிக்கொண்டிருந்தாள்.

கிழவி உற்சாகமாகவும் திடநம்பிக்கையுடனும் இருந்த போதிலும் சந்தர்ப்பச்சூழ்நிலையால் காந்திஜீயை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டாமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் காந்திஜி அந்த ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் கிழவியைப் பார்த்துவிட்டார். அவர் உடனே நின்று அவளைக் கூப்பிட்டார். மிக ஆர்வத்துடன் அவள் காந்திஜியின் பக்கத்தில் வந்து தன் மங்கலான பார்வையை அவர்மீது செலுத்தினாள்.. காந்திஜீ கலகலவென்று சிரித்து ‘எப்படியிருக்கிறாய்!’ என வினவினார். மேலும் அவள் முதுகைத் தடவிக்கொடுத்துக் கொண்டே ”நீ என்னை நன்றாகப் பார்க்க முடிகிறதா?” எனக்கேட்டார்.

கிழவியின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமற்போய்விட்டது. கலக்க முற்ற நிலையில் அவள் தன் கைகளை காந்திஜீயின் கழுத்திலும் தலையை அவர் மார்பிலும் வைத்து தன்னையே மறந்த நிலையில் காணப்பட்டாள்.

மெதுவாக காந்திஜீ அவள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டார். அவளும் கனவுலகத்திலிருந்து சுய உணர்ச்சிக்கு வந்து அக்கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டாள். ஆனால் அவளுடைய சுருங்கிப்போன முகத்தில் இன்னும் இன்னொளி படர்ந்திருந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:05 am

4. தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை


பீகார் பூகம்பத்தின்போது காந்திஜி முஜப்பூர் சென்று அங்கு புகழ் பெற்ற மகாராஜா திரு. மகேஷ்பிரவித்சிங் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.

குளித்தப்பின் சாப்பிடும் நேரம் வந்தது. திரு. சிங் அவர்களின் மகள் எல்லாச்சாமான்களையும் மளமள வென்று கொண்டு வந்து பரப்பிக்கொண்டிருந்தாள். ”உன்னுடைய தாயாரை அனுப்பு” என்று காந்திஜி அந்தச் சிறுமியைப் பார்த்து கூறினார்.

வெள்ளாட்டுப்பால் எடுத்துக்கொண்டு திரு.சிங் அவர்களின் மனைவி வந்தாள். கையில் வளையல்களும் மோதிமும், கழுத்தில் தங்க அணிகலன்களும் இருந்தன. பாலை எடுத்துக் கொண்டே காந்திஜி ”இந்தத் தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை. தங்க நகைகள் இல்லாமலேயே நீ மிகவும் நன்றாக இருக்கிறாய். இவைகளை என்னிட் கொடுத்துவடு. கஷ்ட்டபடும் மக்களுக்கு இதனைகொண்டு உதவி செய்கிறேன்” எனக்கூறினார்.

திரு.சிங் அவர்களின் மனைவி எல்லா அணிகலன்களையும் உடனே கழற்றி காந்திஜிக்கு முன் சமர்ப்பித்தாள். காந்திஜி கலகலவென்று சிரித்தார். நகை வாங்கிக்கொண்டு ”இதோ, பார்! நான் உன்னை நகைகளின் மீதே வெறுப்படையச் செய்துவட்டேனே! என்று திருமதி சிங்கிடம் கூறினார்.

”தாங்கள் எங்கள் வீட்டில் வருந்தாளியாக இருந்ததே நாங்கள் செய்த பாக்கியம். நகைகளைத் தங்களிடம் கொடுத்தப்பின் நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்” என திருமதி சிங் கூறினாள்.

மூன்று மணிக்கு காந்திஜி ரயிலடிக்குச் செல்லவேண்டும்.நேரம் செல்ல செல்ல கூட்டம் மிகுந்து விட்டது. ரயிலடிவரை எங்கு பார்த்தாலும் ஜத்திரள். இந்தக்கூட்டத்தினிடையில் திரு.சிங் அவர்களின் குடுப்பத்தினர் காந்திஜீயிடமிருந்து விடுபட்டனர். ஆனால் வண்டியில் உட்கார்ந்தவுடன் தம் சிநேகிதர்களிடம் ”அடேய், மஹேஷ்பாபுவைத்தான் கூப்பிடுங்களேன். நான் அவருடைய மனைவிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். மிக்க அன்புடன் அவள் என்னை உபசரித்திருக்கிறாள்” என்று காந்திஜி கூறினார்.

திரு. சிங்கின் மகளை முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்து விட்டும், திருமதி சிங்கிற்குத் தம் ஆசிர்வாத்த்தைத் தெரிவித்த பிறகும் தான் காந்திஜி அவ்விடமிருந்து புறப்பட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:05 am

5. இதே மாதிரி கிராமத்தாருக்குச் சேவை செய்வீர்களா?


திரு. கன்ஷியாமதாஸ் பிர்லா டெல்லியிலிருந்து சுமார் 5 மைல் தூரத்தில் ஓர் தோல் நிலையத்திற்காகவும் ஹரிஜன மாணவர்களின் விடுதி கட்டுவதற்காகவும் நிலம் வாங்கியிருந்தார். ஹரிஜன முன்னேற்றச் சங்கத்திற்கு இந்த நிலத்தை அன்பளிப்பாக்க்கொடுத்திருந்தார். இந்த நிலத்தில் மற்ற காரியங்களை தொடங்குவதற்கு முன் காந்திஜி முதன் முதலில் ஒரு இரவாவது தங்கியிருந்து ஓர் ஆரம்பவிழாவாக நடத்த வேண்டுமென்பது திரு. பிர்லா அவர்களின் ஆசை. காந்திஜி அவருடைய ஆசையை நிறைவேற்ற சம்மதித்தார். அங்கு சிறிய குடிசை ஒன்று கட்டப்பட்டது. குடிசையைப் பார்த்துவிட்டு ”இது குடிசையா அல்லது அரண்மனையா? இதை கட்டிமுடிக்கக் குறைந்துத் ஆயிரம் ரூபாயாவது ஆகியிருக்காதா? ஹரிஜனங்களின் பிரதிநிதி என்பதை நீங்கள் மறந்து பிர்லா அவர்களின் பிரதிநிதிய்யாகத் தென்படுகிறீர்கள். மண்சுவர் மேல் காய்ந்த சருகுகளைப் போட்டு கூரையாக வேய்ந்திருந்தால் ஏழை வசிக்கும் குடிசைக்குப் பொருத்தமாக இருந்திருக்குமே” என காந்திஜி கேட்டார்.

எப்படியோ அன்று நாள் கழிந்தது. மாலையில் காந்திஜீக்கு முன் பித்தளையினால் செய்யப்பட்ட ஓர் எச்சில் செம்பு வைக்கப்பட்டருந்தது. கிராமத்துநடப்புக்கு இந்த எச்சில் பாத்திரம் வேறு கேடா! ”இதை யார் வாங்கிவரச் சொன்னது?” என திரு. ப்ருஜ்கிருஷ்ணசாந்திவாலாவிடம் காந்திஜி கேட்டார்

”நான்தான் கேட்டு வாங்கிவரச்சொன்னேன் என் வீட்டிலேயே ஒன்று இருப்பதாக நினைவு. இல்லையென்றால் யாரிடமாவது வாங்கிவருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் வாங்கின நண்பரோ ஓர் சிறு தவறு செய்துவிட்டார்” ப்ரூஜ்கிருஷ்ணஜி பதிலளித்தார்.

”பாத்திரம் எங்கும் கிடைக்கவில்லையென்றால் அந்த நண்பர் கடையிலிருந்து விலைக்கு வாங்கி அனுப்புவார் என்று உங்குளுக்கு தெரியாதா, என்ன? என காந்திஜி வினவினார்.

”தெரியும்தான்; ஆனால் பார்க்கவரும் நாலைந்து பேர்கள் சேர்ந்து வாங்கிக்கொடுத்தனுப்புவார்கள் என நினைத்தேன்” என்றார் ப்ரூஜ்கிருஷணாஜி.

”நான்குபேர்கள் ஒன்று சேர்ந்து வாங்கினால் மட்டும் இதன் விலை அதிகமாகிவிடாது என் நினைத்தீர்கள்; அப்படித்தானே? இதேமாதிரி கிராமத்திலுள்ள எல்லோருக்கும் சேவை செய்வீர்களா? இந்த கிராமத்திலோ ஒரு பைசா இரண்டுபைசாவுக்கு நல்ல பெரிய மண்பாத்திரம் கிடைக்கும். அதைவாங்கிவத்திருக்கலாம். சரி, சரி, இந்தப் பித்தளைப் பாத்திரத்தைத்த திருப்பி அனுப்பிவிட்டு மண்பாத்திரத்தைக் கொண்டு வாருங்கள்” என காந்திஜீ அன்புக்கட்டளையிட்டார்.

இரவானது. காந்திஜி தூங்குவதற்காக ஒரு மெத்தை கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன்மேல் தூங்குவதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும், ”பாயின்மேல் விரித்திருக்கும் விரிப்பே எனக்குப் போதுமானது” என்றார்.

இதைக்கேட்டு எல்லோரும் திகிலடைந்தனர். ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னார், ”பாபு, மிக ஏழையும் ஓர் சிறு மெத்தையை உபயோகப்படுத்துகிறான்”

”நானும் அறிவேன்; ஆனால் இந்த சிறு காரியத்தில் மட்டும் ஏழை கிராமவாசிகள், சம்ம் என்று எண்ணுகிறீர்களா? அப்படி ஏழை எண்ணுவதானால் உணவு, உடையைப் பொறுத்த விஷயங்களிலும் சம்மாக இருக்கட்டும். அவர்கள் மாதிரி சாப்பிடுங்கள், அவர்களைப்போல் உடையும் உடுத்துங்கள். நாம் பாய் மீதுபடுப்பதை விட்டுவிட்டால் ஏதோ நாமும் அவருக்காக சிறிது தியாகம் செய்தோம், என்று நிமிர்ந்து சொல்ல்லாம். இப்படியொரு கிராம்புனருத்தாரணம் செய்வதற்கு அநேக காலம் பிடிக்கும்” என்று காந்திஜி விரித்துரைத்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:05 am

6. என்னையே இதை செய்யவிடுங்கள்!


தென் ஆப்பிரிக்கச் சத்தியாக்கிரக இயக்கத்தில் தன் உடம்பு பூறாவும் நொய்ந்து தேய்ந்து சீரழிந்து மைத்திஸ்பர்க் சிறையிலிருந்து வெளியே வரும்போது அன்னை கஸ்தூரிபாவுக்கு வியாதி முற்றி படுத்தபடுக்கையில் இருக்க வேண்டியதாயிற்றுழ. சிறிதுசிறிதாக உடல் நலிந்து நாலாபக்கமும் மக்களை மிக்க துயரத்தில் ஆழ்த்திவிட்டது. அங்கோ டாக்டர் கூட இல்லை. ‘பா’வின் உடல் நிலையறிந்து எப்படியோ டர்பனிலிருந்து ஓர் டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

அப்பொழுது காந்திஜி டிரான்ஸ்வால் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பியவுடன் காந்திஜி ‘பா’வின் உடல்நிலையைகவனிக்கும் முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். இச்சமயம் நாட்டுப்பிரச்சனையோ, சத்தியாகிரக சம்மந்தமான விஷயமோ, ஆசிரமக்காரியங்களோ, அல்லது ணர்க்காருடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உடன்படிக்கைச் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளோ ‘பா’விற்குச் சேவை புரிவதில் குந்தகம் விளையாமல் பார்த்துக்கொண்டார். அப்படியிருந்தும் சகன்லால் காந்தியின் மனைவி எப்போதும் ‘பா’வின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். விஷயம் சிறிதோ, பெரிதோ எல்லாவற்றையும் அவளே கவனிக்கும் நிர்பந்தமும் இருந்தது. ஆனால் காந்திஜி அங்கு வந்தவுடன் அவளை எந்தக்காரியத்தையும் செய்யவிடமாட்டார். அவள் ஏதாவது வேலை செய்ய முயற்சிக்கும்போது காந்திஜி நெருங்கி, ”என்னையே இதைச் செய்யவிடுங்கள். ‘பா’வை எப்படிச் சந்தோஷப்படுத்துவது என்பதில் எல்லோரைக் காட்டிலும் எனக்கு மிக அக்கறை. இந்த நேரத்தை நான் ‘பா’வுக்குச் சேவை செய்யவேண்டுமென்பதற்காகவே ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேன். நான் எப்பொழுத் வர முடியவில்லையோ, அப்பொழுது தாங்கள் செய்யலாம்” என்று பணிந்துரைப்பார்.

நாள் பூறாவும் உபயோகித்த எச்சில் பாத்திரத்தையும் மலஜலம் கழிக்கும் பாத்திரத்தையும் வெளியில் எடுத்துக்கொண்டு வந்து கொட்டி, பின் நன்றாக்க் கழுவி சுத்தம் செய்து கொண்டு போய் வைப்பார். யாராவது அந்த வேலையைச் செய்ய முற்பட்டால் அவர்களைத்தடுத்து விடுவிப்பார். குடிப்பதற்குச் சுடுதண்ணீர் ஆக்கவேண்டுமென்றாலோ அல்லது இம்மாதிரி வேறு ஏதாவது வேலை செய்யவேண்டியிருந்தாலோ அவைகளை காந்திஜி தாமே செய்வார். மேலும் தண்ணீரில் சிறிது அழுக்குத் தென்பாட்டாலோ, அலது பாத்திரத்தில் எண்ணைவழவழப்பு அல்லது கரைபடிந்திருந்தாலோ அவைகளை மறுபடியும் மிக ஜாக்கிரதையாக்க் கழுவிச்சுத்தப்படுத்துவார். எப்போதும் படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டிருப்பார். நாற்காலிபெஞ்சு முதலியவை போட்டு உட்காரவும் மாட்டார்; முகத்தில் களைப்புக்குறியோ வேதனைக்குறியோ காட்டிக்கொள்ள மாட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:05 am

7. கேலியாகவும் பொய் பேசக்கூடாது


1926ம் வருடத்தில் அப்பொழுதுதான் குடும்பஸ்தராகியிருக்கும் ஓர் இளைஞர் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்க்வந்திருந்தார். குழந்தைகளிடத்தில் அவர் பிரபல்யமாகிவிட்டார்.
ஒரு நாள் அவர் எட்டுவயது பெண் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் எலுமிச்சம் பழம் ஒன்று இருந்தது. அதைத்தான் எடுத்துக்கொள்ளலாமென்று அக்குழந்தை நினைத்தது. மேலும் கீழும் தடவிப்பார்த்தாள், சிரித்து கையிலுள்ளதை பிடுங்குவதற்கும் எத்தனித்தாள். ஆனாலும் வாலிபரிடமிருந்து அப்பழத்தை எடுத்துக் கொள்ளமுடியவில்லை. மிகவும் களைப்படைந்து அழ ஆரம்பித்துவிட்டாள். ஆஸ்ரமத்திலுள்ள ஓர்வியாதியஸ்தருக்காக அந்த எலுமிச்சம் பழம் இருந்தது. வாலிபருக்கு இப்பொழுது தர்மசங்கடமான நிலை. இந்தப்பழத்தை அக்குழந்தைக்கு கொடுத்துவிட்டால் வியாதியஸ்தரின் கதி என்ன ஆவது?

திடீரென்று நாடகபாணியில் அவ்வாலிபர் கையை சுழற்றினார். ‘பழத்தை நான் ந்தியில் வீசிவிட்டேன்” என்று குழந்தையிடம் கூறினார்.

அனால் உண்மையில் அப்பழ்த்தை தன் சாமர்த்தியத்தினால் சட்டைப்பையில் மறைத்துவைத்துக்கொண்டார். ”இப்பொழுது ந்தியில் அப்பழம் என்ன ஆகும்? நான் அதை தேடமுடியுமா?”

”இல்லை, அப்பழம் மூழ்கிவிட்டது” என்று வாலிபர் பதிலளித்தார்.

அவர்களுக்குள் மறுபடியும் சிநேகம் ஆகிவிட்டது. இருவரும் சேர்ந்தே வியாதியஸ்தர் தங்கியிருக்கும் குடிசை வரை சென்றனர். வழியில் வாலிபர் கைக்குட்டையை பையிலிருந்து எடுக்கும்போது எலுமிச்சம் பழமும் சேர்ந்து கீழே விழுந்து விட்டது. இதைப்பார்த்து குழந்தை அவரை கோபித்துக்கொள்ளவில்லை. மாறாக, துக்கமிகுதியால் அவரைப்பார்த்து ”நீங்கள் என்னிடம் பொய்பேசினீர்களா! பையில் பழத்தை மறைத்து வைத்துக்கொண்டு மூழ்கிவிட்டது என்று கூறினீர்களே! பாபுஜயிடம் நீங்கள் பொய்பேசுபவர் என்று சொல்வேன்” என்றாள்.

உண்மையாகவே காந்திஜியிடம் எல்லாவிஷயத்தையும் அக்குழந்தை கூறிவிட்டது. மாலைபிரார்த்தனைக்குப்பின் அவ்வாலிபரை காந்திஜி கூப்பிட்டார். விளையாட்டாக செய்த காரியம் இது என காந்திஜி புரிந்துகொண்டார். இருந்தாலும் வாலிபரிடம், ”நீ இவ்விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கேலியாக்க்கூட பொய் பேசிவிடக்கூடாது. சிரிப்பும் குதூகலத்தோடும் ஆரம்பமாகும் இச்சிறுவிஷயம் பின் வழக்கமாகவே ஆகிவிடக்கூடும்,” என அறிவுரை கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:05 am

8. சந்தோஷம் மனதைப் பொருத்திருக்கும்


ஏர்வாடா சிறையில் தங்கியிருந்தபோது ஒரு சமயம் கனடாவிலிருந்து குல்சேன் லம்சுடேன் என்ற பெயருள்ள ஓர் மாதுவிடமிருந்து கடிதம் வந்தது. அவள் எழுதியிருந்தாள், சர் ஹென்ரி லாரன்ஸ் தம் நாட்டில் வந்து தங்களைப்பற்றிக்கூறும்போது பூனாவில் தங்களை அவர் சந்தித்ததாக்க் கூறினார். தங்களைத்தனி அறையல் பூட்டி வைத்திருந்ததாகவும், அறையின்முன் ஓர் தோட்டம் இருந்ததாகவும் அவர் கூறினார். அப்போது கிபன் எழுதிய ‘ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்னும் பத்தகத்தைப்டித்துக்கொண்டிருந்தீர்களாம். தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும் இருந்ததாகவும் அவர் கூறினார். நான் அவரிடம் ‘இது கட்டுக்கதை போலிருக்கிறுது’ என்றேன். சர்ஹென்றி ‘நீ வேண்டுமானால் பத்துவருடத்திற்கு முன்னால் நடந்த இந்தச் சந்திப்பு உண்மைதானா இல்லையா என்று காந்திஜீக்கே கடிதம் எழுதிக் கேள், ஆம், ஒருவேளை காந்திஜீயின் ஞாபகசக்தி குறைந்து போயிருந்தால் அது வேறு விஷயம். ஏனென்றால் அவருக்கோ வயது 62 ஆகிவிட்டது’ என்று கூறினார். தங்களுடைய ஞாபகசக்தி எப்பொழுதும் குறைந்திருக்காது என்பது என் திடமான நம்பிக்கை. ஆகையால் சர் ஹென்றி லாரன்ஸ் சொன்ன செய்தி எவ்வளவு தூரம் உண்மை என தங்களைக் கேட்கிறேன்.”

காந்திஜி கடித்த்திற்கு பதில் எழுதச செய்தார். ‘தாங்கள் இந்தமனிதர் சொல்லும் உண்மையில் சந்தேகப்படகிறீர்களா?” என்றார் மகாதேவதேசாய்.

அப்போது சர்தார் வல்லபாய் படேல் அங்குதான் உட்கார்ந்திருந்தார். அவர், ”இந்த மனிதர் அங்கு பிரசாரம் செய்து கொண்டிருந்திருக்கலாம். இங்கு ஒன்றும் தோட்டம் கிடையாது. கைதிகள்தான் இருக்கிறார்கள்” என்று அந்த மாதுக்குப்பதில் எழுதிவிடுவோம். சம்பவம் நடந்த ஆண்டில் நான் இங்கு தனித்திருந்தேன். தாங்கள் புத்தகம் படித்துக்கொண்டும் நூற்றுக்கொண்டும் இருந்தீர்கள். ஞாபக சக்தியின் மீது சந்தேகப்பட வேண்டியது சர்ஹென்றி தான்; ஏனென்றால் அவருடைய வயது என்னைக்காட்டிலும் அதிகம்” என்று கூறினார்.

மகாதேவ தேசாய், ”இம்மாதிரியான பதில் பெர்னாட்ஷா கொடுக்கலாம். நாம் எழுதும் பதிலில் சந்தோஷ அறிகுறியே புலனாகக்கூடாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:06 am

9. இந்த பாஷை எனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை


இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ”யங் இந்தியாவின்” பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் காந்தியடிகளின் பொருப்பில்வருமுன் அது ‘பம்பாய் க்ரானிகல்’ என்னும் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. அதன் பதிப்பாளர் அப்போது திரு. ஜனம்தாஸ் துவாரிகாதாஸ். உண்மையில் வெளியீட்டின் முழுப்பொறுப்பும் திரு. ஆர்.கே. பிரிபுவிடம் இருந்தது. ஒருநாள் தன் நண்பருடன் திரு. பிரபு காந்திஜியை சந்திக்கச் சென்ஆர். பம்பாயிலுள்ள ”மணி பவன்” கட்டிடத்தில் காந்திஜி தங்கியிருந்தார். தங்களை அறிமுகபடுத்திக்கொண்டு வெளியீட்டின் மாதிரிப் பிரதி ஒன்றை அவர்கள் காந்திஜியிடம் கொடுத்தார்கள். தலையங்கத்தின் மீடு தம்ஆர்வையைச் செலுத்தி, குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி காந்திஜி ”இது யார் எழுதினது?” எனக்கேட்டார். திரு. ஆர். கே. பிரபு ”இதை நான்தான் எழுதினேன்”

இரண்டாவது கட்டுரையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே ”இது யார் எழுதினது?” என வினவினார்.

ஆர்.கே.பிரபுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ”நான் எழுதின கட்டுரை” என்றார்.

காந்திஜியும் ஒருகணம் திகைத்தார். ‘முதலாவது கட்டுரை எனக்குப் பிடித்திருக்ககிறது. ஆனால் இரண்டாவதோ, முற்றிலும் பிடிக்கவில்லை. முதலாவதில் தான் சொல்ல வேண்டியதை நேரிடையாக்க் கூறியிருக்கிறார். ஆனால் இரண்டாவதிலோ கட்டுரை ஆசிரியர் விதவிதமான ஏளன முறைகளால் விவரித்திருக்கிறார். யார் ஏளனமாகவும் குதர்க்கமாகவும் எழுதுகிறாரோ அவர் உண்மையைச் சொல்ல விரும்பவில்லை எனப்பொருள்படும்’ என்றார் காந்திஜி.

ஆர்.கே.பிரபுவின் நண்பர் பக்கம் காந்திஜி திரும்பி, ”நாங்கள் அஞ்சுகிறோம்’ என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் எனக்கு இந்த பாஷை சிறிதும் பிடிக்கவில்லை. தங்களுக்கு உண்மையிலேயே பயம் இருக்கிறதென்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க நீங்கள் விரும்பவில்லை. எனவே நீங்கள் எழுதியுள்ளதற்கு நேர்மாறான பொருள் கொள்ள வேண்டியிருக்கிறுத். இப்பேச்சு சரியில்லையா? உருட்டல் பிரட்டல் பேச்சுக்களை எப்போதும் வைத்துக்கொள்ளாதீர்கள். கடுமையான விஷயத்தை மென்மையாகச்சொல்லுதல், அல்லது சொல்லாமலே விட்டுவிடுதல் - இம்மாதிரியானவை செய்ய வேண்டாம். மாறாக, சொல்ல வேண்டியதை எளிமையாகவும், நேரிடையாகவும் சொல்லுங்கள்” என்று கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:06 am

10. இவர்களே மனிதர்கள் ஆகட்டும்.


1924 - ஆம் வருடம் இந்து- முஸ்லீம் கலவரத்தினால் அதிருப்தி அடைந்து காந்திஜி டெல்லியில் மௌலானா முகம்மத் அலியின் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலை நேரம் அலிகாரிலிருந்து வந்த நண்பர் காந்திஜியைப் பார்க்கலாமா என பண்டிட் சுந்தர்லால்ஜியிடம் கேட்டார்.

காந்திஜி அவ்வமயம் அறையில் தனியாக உட்கார்ந்து இருந்தார். கதவு மூடப்பட்டிருந்தது. சுந்தர்லாலும் அவர் நண்பரும் கதவைத் திறந்ததும், சுந்தர்லாலின் பார்வை காந்திஜியின் முகத்தில் பட்டது. அடிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாரென்பதை அவர் உணர்ந்தார். அவர்களுடைய கால்கள் பின்சென்றன. அதேசமயம் ஓசைகேட்டு, காந்திஜி அவர்களைத் திரும்பி வருமாறு கூறினார். இருவரும் முன்னால் போய் உட்கார்ந்தனர். நாட்டில் நடைபெறும் இந்து முஸ்லீம் கலவரத்தினால் அவர் எழுப்பியவாறே சுந்தர்லால், ”பாபு, இந்த முறையில் தாங்கள் இந்து-முஸ்லீம்களை ஒன்றாக்க முடியம் என நினைக்கிறீர்களா?” எனக்கேட்டார்.

”நீ சொல்வதின் பொருள் என்ன?” என வினவினார் காந்திஜி.

பண்டிட்ஜீ, ”இந்து இந்துதான்; முஸ்லீம் முஸ்லீம்தான்; இவர்கள் எப்படி ஒன்று சேரமுடியும்?”

காந்திஜி பதில் கூறினார், ”உன் பொருள் என்ன என்பதை நான் அறிந்தேன். நீ ஜூஹூவில் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தாய், என்னிடம் கேட்பானேன்? எல்லோரும் நாஸதிகர்களாகிவிட்டால் மிக நன்றாக இருக்கு என்றதான் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்கள் மறுப்பதால் எந்தக் கடவுளரும் அழிந்து விடுவாரா, என்ன? ஆனால் இவர்களோ மனிதர்களாகட்டும்! நான் கூறுவதை யார்கேட்கிறார்கள்! கபீர் சொல்லிவிட்டுச் சென்றார். நானக் சொல்லிவிட்டுச் சென்றார். நான் சொல்லுவதை யார் கேட்கிறார்கள்? மேலும் நீ என்ன ஓர் சாதாரண வஸ்துதானே? உலகம் தன் பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.”

இதைச் சொல்லி விட்டு காந்தியடிகள் மௌனமாகிப் பின் மறுபடியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார். இருவரும் எழுந்து வெறியே வந்தார்கள். மௌலானா முகம்மது அலியும் ஹகீம் அஜ்மல்கானும் வெளியே இருந்தார்கள் பண்டிட்ஜி அவர்களிடம் ” காந்தியடிகள் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார். ஏதோ மிக முக்கியமான முடிவு ஒன்று எடுப்பார்போல் தோன்றுகிறது.” என்றார்.

மறுதினமே காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக இருபத்தோரு நாட்கள் உண்ணாவிரத்த்தை மேற்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக