புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
67 Posts - 64%
heezulia
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
3 Posts - 3%
Barushree
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 2%
cordiac
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
194 Posts - 57%
heezulia
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
108 Posts - 32%
T.N.Balasubramanian
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
12 Posts - 4%
prajai
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
குறுநாவல் - அசோகவனம் Poll_c10குறுநாவல் - அசோகவனம் Poll_m10குறுநாவல் - அசோகவனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுநாவல் - அசோகவனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:00 am

-சுபா


அம்மாவும் அப்பாவும் சேர்ந்து அவளுக்குப் பெயர் வைத்தார்கள். புவன மோகினி. அம்மா …புவனீஈஈ† என்று கூப்பிடுவாள். அப்பா …புவனாம்மா† …புவனாம்மா† என்று அழைப்பிற்கு அழைப்பு அன்பையும் சேர்த்துக் குழைத்துக் கூப்பிடுவார்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகும் பாதையில் நடுவில் இடர்ப் பட்ட ஒரு கிராமத்தில் அவர்கள் வீடு இருந்தது. கல், கான்க்ரிட் என்ற அளவுகோல் வைத்துப் பார்த்தால் அந்த வீடு அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்க தில்லை. ஆனால் புவனமோகினி யைப் பொறுத்தவரை அந்த வீடு மகத்தான வீடு.

புவனமோகினியே வேண்டி வேண்டிப் பிறந்த குழந்தை. அவளுக்கு முன்னாலும், பின்னாலும் வீட்டில் யாரும் இல்லை. அம்மாவின் அன்பும் அப்பாவின் பரிவும் முழுக்க முழுக்க அவள் மேல் வெள்ளமாகக் கொட்டியது.

சண்டை போட, சேர்ந்து சிரிக்க, பகிர்ந்து உண்ண வீட்டில் தான் அவள் வயதொத்த யாரும் இல்லையேயொழிய வீட்டுக்கு வெளியே தோழிகள் நிறைய பேர் இருந்தார்கள் எப்போதும் கலகலப்பு எப்போதும் சிரிப்பு.

தோழிகள் பட்டாளம் புவன மோகினி என்ற அவளது பெயரை புவனா, புவனீ, புவன் என்று விதவிதமாக அழைத்துப் பார்த்துக் கடைசியில் மோகினி என்று அழைப்பதில் ஆனந்தம் பெற்றது.

மோகினீ, மோகினி, மோகினீஈஈ எந்நேரமும் கலகலப்பு கலீர் கலீர் சிரிப்பு ஆனந்தம் கும்மாளம். அந்தப் பட்டாளம் குளத்தில் இறங்கினால் குளித்துக் கொண்டிருக்கும் மற்ற பெண்கள் எல்லாம் அவசர அவசரமாகக் கரையேறி விடுவார்கள். அந்தப்பட்டாளம் மாந்தோப்பில் நுழைந்தால் தோட்டத்துக் காவல் காரன் அவர்கள் முன் நின்று தோப்புக் கரணம் போடத் தொடங்குவான்.

மோகினி இடக்கல் குகையின் கல் சிம்மாசனத்தில் உட்கார்ந்து தர்பார் நடத்தி யதைப் பார்த்த தொல்பொருள் ஆராய்ச்சி அலுவகத்தின் அதிகாரி, ……ஏ... குரங்குங்களா... எப்படி (இவ்வளவு உயரத்திலிருந்து அந்த குகைக்குப் போனீர்கள் என்று பயமும், பிரமிப்புமாய் கேட்டு அவர்கள் மறுக்க மறுக்க தீயணைப்புப் படையினரை அழைத்து அவர்களைப் பத்திரமாக மேலேற்றி இருக்கிறார்.)

மலம்புழா அணைக்கட்டில் தண்ணீர் வந்து மோதிய பகுதியில் மிதந்த டிரம் கட்டிய மிதவை ஒன்றின் மீது போட்டோவிற்குப் போஸ் கொடுத்த மோகினியைப் பார்த்து விட்டுக் காவல்காரன் வாயிலும் வயிற்றுலுமாக அடித்துக் கொண்டு அவர்களை நெருங்க, கரையோரம் மோதிய தெப்பம், கரையை விட்டு விலகி விலகி ஆழப்பகுதியை நோக்கி மிதந்து சென்று விட, காக்கி டிராயரை நனைத்துக் கொண்டு கீழே விழுந்து மயங்கி இருக்கிறான். மோகினி சிரித்தப்படி நீரில் குதித்து நீந்திக் கரையேறி வந்து அவன் மயக்கத்தைத் தெளிவித்திருக்கிறாள்.

மோகினியின் விடலைப்பருவம் அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. அற்புதமாய் இருந்தது. சிரிப்பும், பேச்சும், கூச்சலும், சண்டையுமாய் யாருக்குமே வாய்க்காத அலாதியான அனுபவமாய் இருந்தது.

அதன் பின்தான் மோகினியின் வாழ்க்கை தடம் புரண்டது. நடந்தது எதுவுமே எதிர்பாராதது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:01 am

பன்னிரெண்டாவது வயதில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய போது அம்மாவைக் கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். அம்மாவின் வாயில் சிறு சிறு முத்துக்களாய் உருவாகி வெளிப்பட்டுக் கொண்டிருந்த நுரை.

உடலில் நீலம் பரவியிருந்தது.

அண்டை வீட்டுக்காரர்கள் திகில் முகத்தோடு சற்றுத்தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மலையாள மாந்த்ரிகர் வந்து மந்திரித்துக் கொண்டிருந்தார். தாழம்பூ பறிக்கச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து விட்டது என்று சொன்னார்கள்.

விஷம் மாந்த்ரிகத்திற்குக் கட்டுப் படவில்லை. ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனால் கையை விரித்து விட்டார்கள்.

அம்மா அவ்வளவுதான். மோகினியால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் இறப்பு என ஒன்று இருக்கிறது என்பதும், மிக மிக அன்போடு, பரிவோடு, பாசமோடு இருக்கும் நெருங் கிய உறவுகளை எல்லாம் அந்த இறப்பு விழுங்கி ஏப்பம் விடும் என்பதும் யார் யாருக்கோ நிகழக்கூடியதே தவிர தனக்கு இல்லை என்று எண்ணி இருந்தவளுக்கு அது மாபெரும் இடியாக விழுந்தது.

அம்மா உண்மையிலேயே செத்து விட்டாளா என்ன?

அதன் பின் வாழ்க்கை மோகினியின் கைமீறி எங்கோ போய்விட்டது. பதினெட்டு வயதில் சுகுமார் புயல் போல் புகுந்து அவளை ஆக்கிரமிப்பான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.

சுகுமாருடனான வாழ்க்கை காற்றுக் காகிதம் போல் மேலேறி அப்படியே பாதாளத்தை நோக்கிப் பாயும் என்று அவள் நினைக்கவில்லை.

யாவற்றுக்கும் மேலாக சந்திரனை அவள் மறுபடி சந்திப்பாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

ஓடி விட்டான் என்றும், நிறைய ஏமாற்றி ஜெயிலில் இருக்கிறான் என்றும் ஏதோ ஒரு அயல்நாட்டில் இருக்கிறான் என்றும் சொல்லப்பட் டவன் இப்படி வதந்திகளில் இருந்து மீண்டு, ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர்க்கொண்டு தன் எதிரே வந்து நின்று சிரிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

இவனா?

இவன் எப்படி வந்தான்?

இவ்வளவு நாள் கழித்து இந்த நிலையில் இவனை எதற்கு சந்திக்க வேண்டும்?

கண்ணெதிரே நின்று படம் விரித்தாடும் ராஜநாகம்.

மோகினி நடு நடுங்கிப் போனாள்.
***
மோகினியின் அம்மா மீது அவளு டைய அப்பாவிற்கு அபாரமான பிரியம், காதல், நேசம், பரிவு. அப்பா அம்மாவை விட்டு ஒரு நிமிஷம் கூடப் பிரிந்து இருந்ததே இல்லை. இத்த னைக்கும் அம்மாவும், அப்பாவும் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட வர்கள் இல்லை. கல்யான மண்டபத்தில்தான் அம்மாவின் முகத்தையே அப்பா பார்த்திருக்கிறார். ஆனாலும் அம்மா மேல் அவருக்கு அப்படி ஒரு ஆசை.

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து தான் காய்கறி வாங்குவார்கள். சேர்ந்துதான் சமைப்பார்கள். கோயிலுக்கு, சினிமா விற்கு என்று எல்லா இடங்களுக்கும் சேர்ந்துதான் போவார்கள். நேரம் இருந்தால் சதுரங்கப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு செஸ் விளையாடுவார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:01 am

ராத்திரி நேரத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் படுக்க அடம் பிடிக்கும் மோகினியை என்னவோ மாய்மாலச் சொற்களால் ஏமாற்றி ஓரமாக ஒதுக்கி விட்டு சேர்ந்துதான் படுப்பார்கள்.

இப்படிப்பட்டதொரு வாழ்க்கை யாருக்கும் அமையாது என்று மோகினி நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து அம்மா செத்துப்போனாள்.

அப்பா நீரில் நனைத்து உலர்த்தப்பட்ட மக்கிப் போன காகிதம் போல் ஆகிவிட்டார். அம்மாவை மறக்க முடியவில்லை. மறக்க நினைத்து எதில் ஈடுபட்டாலும் அம்மாதான் முன்னால் வந்தாள். அம்மாவை மறக்க அப்பா …மருந்து† சாப்பிட ஆரம்பித்தார். …மருந்து† அவரை லேசாக்கியது. வானத்தில் பறக்க விட்டது. (பார்த்தால் பக்கத்தில் அம்மா பறந்து கொண்டிருந்தாள்.)

இப்படிப்பட்டதொரு அனுப வத்தைக் கொடுக்கும் …மருந்தை† அப்பாவால் எப்படி விட முடியும்?

ஒரு பக்கம் சமையல் இன்னொரு பக்கம் வேலை கூடவே மருந்து. மருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவர் உடலை உருக்கியது. கன்னங்கள் ஒடடிப்போயின. மார்புக்கூடு புடைத்துக் கொண்டது. மூச்சு, கொல்லன் உலைத்துருத்தி போல் புசு, புசு வென்றது. அப்பா மருந்தை விடுவதாயில்லை. மோகினி அவரை எவ்வளவு தூரம் மிரட்டியும்.

பதிமூன்றாவது வயதில் எங்கோ சாக்கடையில் விழுந்து கிடத்த அப்பாவை சிலர் தூக்கி வந்தார்கள்.

டாக்டர் அப்பாவின் நரம்புகள் அத்தனையும் தளர்ந்து போயிருப்பதைச் சொன்னார். அப்பா கண்களை மூடியிருந்தார். இதழோரம் கொழ கொழவென ஏதோ வழிந்து கொண்டி ருந்தது. கட்டியிருந்த வேட்டி சேற்றில் புரட்டியெடுக்கப்பட்ட மாதிரி அழுக்கு. கூடவே மனிதக் கழிவின் நாற்றம்.

அப்பா கண் திறப்பாரா, மாட்டாரா என்று தெரியாத பதற்றத்தில், திகிலில் அவளது அடிவயிறு வலித்தது. சுளீர் என்று சாட்டையால் அடித்த மாதிரி வலி. ……அப்பா என்று மோகினி அலறினாள்.

அப்பா அந்த அழைப்பில் கண் திறந்துவிட்டார். மோகினியைப் பார்த்துப் புரிந்துக் கொண்டார். ஒரு கணம் சந்தோஷம், மறுகணம் துக்கம்.

……ஐயோ... அம்மா இல்லாமப் போய்ட்டாளே என்று அரற்றினார்.

அப்பா எழுந்து உட்கார்ந்துவிட்டார். தோழிகள் எல்லாம் அதுதான் என்றார்கள். தோழிகளின் அம்மாக்கள் வந்து அவளை உட்காரவைத்து, அம்மா செய்ய வேண்டிய அத்தனையும் செய்தார்கள்.

மோகினியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பா மருந்தைத் தள்ளி வைத்து விட்டார். சுத்தமாக மருந்தின் நினைவே அவருக்கு இல்லாமல் போயிற்று. அவரா ஒரு பாட்டிலை அப்படியே வாயில் வைத்துக் கவிழ்த்துக் கொண்டவர்? அவரா சாக்கடைகளில் புரண்டவர்? அவரா வாந்தியெடுத்து, எடுத்து உடலின் ரத்தத்தை எல்லாம் வெளியே கொட்டி யவர்?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:01 am

எப்படி நடந்தது அந்த ரசவா சதம்? மோகினிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அம்மாதான் அப்பாவை மாற்றி விட்டாள் என்று அவள் நம்பினாள்.

மோகினிக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சி. அப்பாவை அது கவலைப் பட வைத்தது. இருந்தும் என்ன? இயற்கை அதன் கடமையைச் செய்தது.

மோகினி தெருவில் தனியாகப் போனால் பையன்கள் தங்களுடைய வேலையை மறந்து நின்று திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். அவளது உடல் அமைப்பு அவர்களைப் பெரு மூச்சு விடச் செய்தது.

மோகினி ஒரு நாள் குளிப்பதற்காக குளத்திற்குப் போனபோது அந்தச் சம்பவம் நடந்தது.

குளத்தில் பாவாடை புஸ்ஸென்று நீர்ப்பரப்பில் மிதக்க அமிழ்ந்து அவள் முகத்தில் மஞ்சள் தேய்த்துக் கொண்டி ருந்தப்போது, யாரோ அவள் காலைத் திடீரெனப் பற்றி இழுத்தது தெரிந்தது.

மோகினி கத்துவதற்கு வாய் திறப்பதற்குள் அவள் முகம் நீருக்குள் இழுக்கப்பட்டு அவள் வாய் பொத்தப்பட்டு-

மோகினி மயங்கிப் போனாள்.

அடுத்து வினாடி அந்த வாலிபன் மோகினியைத் தோளில் போட்டுக் கொண்டு திகிலுடன் படியேறினான்.

அவன் பெயர் சந்திரன். அரசாங்க அலுவலகத்தில் கிளார்க் வேலைக் காக என்று வேற்று ஊரில் இருந்து வந்தி ருந்தவன். நாகர்கோவிலில் தங்கி தினமும் ஆபீஸ் வந்து சென்று கொண்டிருந்தவன் மோகினியைப் பார்த்து மயங்கி அந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருந்தவன்.

……என்ன ஆச்சி? என்ன ஆச்சி? என்று குளக்கரையில் இருந்தவர்கள் பதட்டத்துடன் வினாவினார்கள்.

……ஆழந் தெரியாம காலை விட்டு கொளத்தில மூழ்கித் தத்தளிக்க ஆரம்பிச்சிடிச்சி அதான் தூக்கிட்டு வந்தேன் என்றான் சந்திரன். குளக்கரை அரசமரத்தடி மேடையில் மோகினியைப் படுக்க வைத்து, இடுப்பிலும் மார்பிலும் அழுத்தி நீரை வெளியேற்றினான். வாயோடு வாய் அழுத்தி செயற்கை சுவாசம் கொடுத் தான்.

கரையில் இருந்தவர்கள் எல்லாம் அவனுடைய செய்கைகளை இமைக் கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மோகினி கண்விழித்தாள்.

மலர்ந்த முகத்துடன் தெரிந்த சந்திரனைப்; பார்த்தாள். தான் இருந்த நிலைக்காக வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

அன்று மாலை சந்திரன் மோகினியின் வீட்டிற்குப் போனான். அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்து நின்ற சந்திரனைப் பார்த்தார். உட்காரச் சொல்லி ஜாடை காட்டினார்.

அவன் உள்ளே வருவதை முன்பே பார்த்துவிட்ட மோகினி, சமையல் அறைக்குச் சென்று அவனுக்காக என்று …சுக்கு காப்பி† போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.

சந்திரன் மோகினி நீட்டிய டம்ளரைப் பெற்றுக் கொண்டப் போது அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

மோகினியின் முகத்தில் என்ன விதமான உணர்ச்சி இருக்கிறதென்று அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

……என்ன? என்று அப்பா கேட்டார்.

……மோகினி... என்று திணறினான் சந்திரன்.

……மோகினிக்கு என்ன?

……இன்று காலை நான் அவளைக் காப்பாற்றி இருக்காவிட்டால் அவளை நீங்க இன்னேரம்; உயிரோட பார்த்திருக்க முடியாது

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:01 am

……அப்படியா? என்று அப்பா கேட்ட கேள்வியில் இருந்த எக் காளத்தைச் சந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ……அவ உயிரைக் காப்பாத்தினதுக்கு ஏதாவது பணங், காசு வேணுமா? என்று அப்பாவே அவனை வினாவினார்.

……ஐயையோ, என்னங்க என்னைப் போய் இவ்வளவு கேவலமா நெனைச்சிட்டிங்க? நான் ரெவின்யூ டிபார்ட் மென்ட்ல இருக்கேன். அம்மா, அப்பா இல்லை, அதனால பெரிய வங்க யாரும் வரலை. நானே வந்திருக்கேன்

……எதுக்கு?

……எனக்கு மோகினியை ரொம்பப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசை. உங்க பொண்ணை எனக்குக் கட்டித் தருவீங்களா?

அப்பா சடார் என்று நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்படி அவர் நிமிர்ந்து உட்கார்ந்ததைப் பார்த்து விட்டு சந்திரன் முதலில் பயந்துதான் போனான். குப்பென்று வியர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

அப்பா அவனைப் பார்த்து உதடுகளை விரித்து அகலமாகச் சிரித்தார்.

……என் பொண்ணுக்கு இஷ்டம் இருந்தா எனக்கும் இஷ்டந்தான் என்றார்.

சந்திரன் சந்தோஷமாக உணர்ந்தான். சொர்க்கம் அப்போதே அவன் மடியில் வந்து விழுந்த மாதிரி உணர்ந்தான்.

……மோகினி, நீ என்னம்மா சொல்றே? என்று அப்பா கேட்டார்.

சந்திரன் ஆவலோடு மோகினி யின் முகத்தைப் பார்த்தான்.

……அப்பா இங்க கொஞ்சம் வாங்க என்று மோகினி அப்பாவை உள்ளே அழைத்தாள்.

அப்பா எழுந்து போனார்.

மோகினி தன் சம்மதத்தை வெளிப் படையாகத் தெரிவிக்க வெட்கப்படு கிறாள். அப்;பாவை உள்ளே அழைத்து தன் சம்மதத்தைத் தெரிவிக்கப் போகிறாள். பின்னே சும்மாவா? அவள் உயிரையே காப்பாற்றி இருக் கிறேனே.

வாழ்நாள் முழுவதும் மோகினியை வைத்து அவளைக் கண் கலங்கால் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இந்நேரம் மோகினியிடம் ஊற்று போல் பீறிட்டுக் கிளம்பியிருக்காது?

அப்பா வெளியே வந்தார்.

……உங்க பேரென்ன சொன்னீங்க தம்பி?

……சந்திரன்

……சந்திரன், மோகினி கொஞ்சம் வேடிக்கையான பொண்ணு. அவளை நீங்க தண்ணில மூழ்கிடாமக் காப் பாத்தியிருக்கீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச நீச்சல் அவளுக்குத் தெரியலேங்கறது அவளுக்கு அவமானமா இருக்காம். அதனால் நாளைக்குக் காலையில நீஞ்சக் கத்துக்கப் போறாளாம். சாயங்காலம் குளத்துல இக் கரையில் இருந்து அக்கரை வரைக்கும் நீங்களும் அவளும் நீந்தணுமாம். நீங்க அதில ஜெயிச்சிட்டா மோகினியை நீங்க தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்

……ஃப்பூ அவ்வளவுதானே? நாளைக்கு சாயங்காலம் கண்டிப்பா வரேன். இன்னொரு தடவை அவ மூழ்கிப்போனா காப்பாத்தணும் பாருங்க என்று சொல்லிவிட்டு விசிலடித்துக்கொண்டே வெளியேறினான் சந்திரன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:02 am

மறுநாள் சாயங்காலம் சந்திரன் சாயம் வெளுத்துவிட்டது. குளத்தின் பாதித் தூரத்தைக் கடப்பதற்குள் அவனுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. மோகினி வாளை மீன் போல இக்கரையில் இருந்து அக்கரை சென்று, மறுபடி சந்திரன் நீந்திக் கொண்டிருந்த இடத்தை அடைந்து அவனுக்குப் போக்கு காட்டி, போக்கு காட்டி நீந்தினாள்.

மோகினியின் காலை உள்ளே இழுத்து அவள் வாயை மூடி காப் பாற்றியது போல் நடித்ததெல்லாம் சுற்றியிருந்த கூட்டத்தின் முன் வெளிப் பட்டு விட்டது. சந்திரன் தலை குனிந்துக் கொண்டான்.

மோகினி அவனை …போனால் போகிறது† என்று மன்னித்து விடத் தயாராய் இருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் அவனை மன்னிக்கத் தயாராய் இல்லை. ஊர்ப்பஞ்சாயத்தில் அவனை நிறுத்தி, மொட்டையடித்து, முகத்தில் செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலம் விட்டார்கள்.

சந்திரன் எப்படியோ நாகர்கோவிலுக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டான்.
***
மோகினிக்கு மனித நேயம் அதிகம். யார் மனதையும் நோகடிக்கக் கூடாது. எல்லோருக்கும் உதவ வேண்டும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட குணங்கள் எல்லாம் கொண்டவள் நர்ஸ் வேலைக் குத்தான் போக வேண்டும் என்று அப்;பா சொன்னார்.

ப்ளஸ்டூ முடித்தவுடன் செவிலித் தாயாகும் வேலைக்கு ஒரு மின்னல் வேக பயிற்சி பெற்றாள். பயிற்சியை முடித்த கையோடு கீரிப்பாறையில் ஒரு தனியார் ரப்பர் எஸ்டேட்டின் ஆஸ்பத் திரியில் நர்ஸ் வேலை கிடைத்தது

கீரிப்பாறை மிக அழகான ஊர். நாகர்கோவிலை ஒட்டி இருக்கிறது. வான் நோக்கி உயர்ந்த ரப்பர் மரங்களும், ஓடைகளும், கீச்-கீச் பறவை களும், கீக்கீக் அணில்களும், இயற்கை யும் ஒன்றாக இணைந்த ஊர்.

அந்த ஊர் ஓடைகளும், ஓடை களின் குறுக்கே எழுப்பப்பட்ட வளைந்த வில் போன்ற பாலங்களும் மயன் வரைந்த சித்திரங்களாகத் தெரியும்.

மோகினிக்கு ஊர் மிகவும் பிடித் திருந்தது. அப்பாவும் அவளோடு வந்துவிட்டார். ஊர் மக்கள் மோகினியைக் கன்றுக்குட்டி என்றும், மான் என்றும் சொன்னார்கள். அவளைப் பரிவோடு பார்த்தார்கள்.

ஆஸ்பத்திரியில் சம்பளம் குறைவு தான். ஆனால் வேலை பிடித்திருந்தது. அங்கே வருபவர்கள் எல்லாம் அடம் பிடிக்கும் குழந்தைகள் மருந்து சாப்பி டப் பிடிவாதம் ஊசி குத்திக் கொள்ளப் பிடிவாதம் கட்டு போட்டுக் கொள்ளப் பிடி வாதம். மோகினி வார்டுக்குள் நுழைந்தால் போதும். பிடிவாதம் மறைந்து போகும்- ஒளியைக் கண்ட இருள் போல.

சுகுமார் அந்த ஆஸ்பத்திரியில் தான் வந்து அட்மிட் ஆனான். மயங்கிய நிலையில், கால் எலும்பு முறிந்த நிலையில். ரப்பர் எஸ்டேட்டின் சூப்பர் வைசர். முதல் நாள் மழையின் காரண மாக அவன் வந்த மோட்டார் சைக்கிள் சேற்றில் வழுக்கி-

சுகுமார் அழகாய் இருந்தான்.

இருபத்து நான்கு வயது இளமை கலைந்த தலை கட்டில் பற்றாத அளவு உயரம் நீளமூக்கு, சிவந்த உதடுகள், லேசாகப் பெண்மை ததும்பும் முகம் லேசான செம்பட்டையுடன் மீசை அந்த மீசையைப் பற்றி உலுக்க வேண் டும் போல் இருந்தது மோகினிக்கு. பெண் களுக்கு அமைவது போல் அகன்ற மடல்களுடன் அமைந்திருந்த காது களில் தோடுகளை மாட்டிவிட வேண் டும் போல் இருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:03 am

சுகுமார் வந்து சேர்ந்த இரண்டாம் நாள் கண் விழித்தான் சிரித் தான் அவளும் சிரித்தாள். அப்பாடி அவ்வ ளவு ரத்த இழப்பிற்குப் பின்னும் செத்துப் பிழைத்து விட்டான்.

சுகுமார் ஓர் உற்சாகப் பந்து என்பது அவன் கண் விழித்தபின்தான் தெரிந்தது. பந்தயக் குதிரையைக் கொட்டடி யில் அடைத்து வைக்கிற மாதிரி அவனைக் கட்டி லோடு பிணைத்து விட்டார்கள் என்று துடித்தான். மோகினியிடம் நிறைய கடி ஜோக்குகளைச் சொன்னான். மோகினி அவற்றை ரசித்தாள். அவன் பேச்சில் ஒரு வசீகரம் இருந்தது ஈர்ப்புத்தன்மை இருந்தது. உலகில் எதுவுமே தப்பு இல்லை என்பது அவன் சித்தாந்தம்.

அந்த ஆஸ்பத்திரியில் இருந்து அவன் குணமாகிப் புறப்பட்ட போது அவளுக்குத் துக்கமாய் இருந்தது. அழுகை, அழுகையாய் வந்தது. பாத்ரூமிற்குப் போய் அழுதுவிட்டு வந்தாள். எதனால் அழுகை? அவளுக்குத் சொல்லத் தெரிய வில்லை.

அவனுடைய அழகு அவள் இதயத்தில் ஏற்படுத்திய படபடப்பு இனிமேல் நிகழப்போவதில்லை என்பதாலா? அவனுடைய முகத்தைப் பார்த்தாலே அவளுக்குள் பிரவாகமாய்ப் பொங்கி எழுந்த ஆசை இனிமேல் கிளர்ந் தெழாது என்ப தாலா? சொல்லத் தெரிய வில்லை. நான்கு நாட்கள் வாழ்க்கை மங்கலாய் மஞ்சள் விளக்கெரியும் பஞ்சாயத்துத் தெரு போல் இருந்தது.

ஐந்தாம் நாள்.

அவள் வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். ஓடையின் மேல் போடப் பட்டிருந்த வளைந்த பாலத்தின் மேல் பயந்த ஆட்டுக்குட்டி போல் நிதான மாக ஏறிக்கொண்டிருந்த நேரத்தில் அவள் பக்கத்தில் சத்தமில்லாமல் ஒரு மோட்டார் பைக் வந்து நின்றது.

திடுக்கிட்டுப் பார்த்தால் சுகுமார்.

……ஐ லவ் யூ மோகினி என்றான்.

……என்னது?

……ஐ லவ் யூ மோகினி

……ஐயோ நான்... நீங்க...

……ஐ லவ் யூ மோகினி

……எங்க அப்பா... நர்ஸ் வேலை

……ஐ லவ் யூ மோகினி

……நான் என்ன சொல்லணும்கறீங்க?

……ஐ லவ் யூ மோகினி

……ச்சே. சுத்த மோசம்பா நீங்க. இப்படி வேலைக்குப் போற போது வழில வந்து

……ஐ லவ் யூ மோகினி

……ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... போதுமா?

……அப்பாடா?

……என்ன அப்பாடா?

……மனசுல வெச்சிருக்கிறதை சொல்றதுக்கு என்னடி?

……என்னது …டீயா?

……ஆமா. லவ்வு அதிகமானா …டீ தான். நீ சாமியை …டா போட்டுப் பேசமாட்டே? பொம்பளை சாமியை …டீ போட்டுப் பேசறதில்ல? அதை விடு. நான் என்ன ஒன்னைத் தின்னுடவா போறேன்? எதுக்கு இப்படி கை, கால் எல்லாம் உதறுது?

……சந்தோஷத்தால

……அப்படி வா வழிக்கு. ஏறு பின்னால

மோகினி முதன் முறையாக பைக்கின் பின்புறம் ஏறி அவன் தோளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:03 am

சுகுமார் அப்;பாவைச் சந்தித்தான். மோகினியைக் காதலிப்பதை நேரடி யாக, நேர்மையாகச் சொன்னான். அவனும் அவளுமாகச் சேர்ந்து சுத்தியதையும், பேசியதையும் பரிமாறிக் கொண்ட முத்தங்களையும் மறைத்து விட்டான்.

அப்பா சுகுமாரை பெறுமையாகப் பார்த்தார். பதில் எதுவும் சொல்ல வில்லை மவுனம்.

சுகுமாருக்குள் படபடப்பு அதிகரித்தது. உள்ளே மறைந்து நின்றிருந்த மோகினிக்கும் அவரது மவுனம் நடுக்கத்தை அளித்தது.

கடைசியாக ஒரு பெருமூச்சுடன் அப்பா மவுனத்தை விலக்கினார்.

……என்னைக்கிருந்தாலும் மோகி னியை நான் பிரிஞ்சித்தான் ஆக ணும்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா அதை எதிர்பார்க்கலே. எங்கிட்டேர்ந்து எம்பொண்ணைப் பிரிச்சிக்கிட்டுப் போக நீ வந்துட்டி யேன்னு உம்மேல எனக்குக் கோபம் வந்தது அது என் சுயநலத்தால அத விடு. மோகினிக்கு உன்னைப் பிடிச்சிருக்கா?

……ரொம்ப என்றாள் மோகினி உள்ளேயிருந்து.

……அப்ப சரி. சிம்பிளா கல் யாணம்

……எனக்குச் சம்மதம் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க உங்க மகளைப் பிரிஞ்சிருக்க வேணாம்.

……அது எல்லா மாப்பிள்ளைங்களும் சொல்றதுதான் அதை அப்புறம் பாத் துக்கலாம். அப்பா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று அப்போது புரிய வில்லை.
***
கல்யாணம் எளிமையாக முடிந்தது தேனிலவிற்குக் கொடைக்கானல் என்று சுகுமார் முடிவெடுத்திருந்தான். கொடைக்கானல் ஏரி, பில்லர் ராக்ஸ், தற்கொலை முனை, …குணா குகை மற்றும் கொச்சியோ கூடலு}ருக்கோ போகும் ஆரவாரமற்ற பாதை என்று தனிமை கிடைத்த நேரங்களில் எல்லாம் சுகுமார் மோகினியைப் படாத பாடு படுத்தினான். ஒரு முத்தம் அந்த ஆனந்த அதிர்ச்சி முடிவதற்குள் ஓர் அணைப்பு அப்புறம் ஒரு கிள்ளல் ஒரு கிச்சு கிச்சு. மோகினி வாழ்க்கையில் இவ்வளவு இன்பம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் அருவி வெள்ளத்தில் குளிக்கும் போது ஆனந்தம் மூச்சு முட்டுகிற மாதிரி மூச்சு முட்டியது.

தேனிலவு முடிந்து அவர்கள் திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடங் கிய நேரத்தில் ராத்திரி தூங்கப்போன அப்பா, காலையில் எழுந்து கொள்ளவே இல்லை.

தூக்க மாத்திரை பாட்டில் காலி யாக இருந்தது. அம்மாவோடு சேர்ந்து கொள்ளப்போகிறேன் என்று ஒரு கடிதம்.

அப்பாவின் அந்த முடிவை மோகினி எதிர்பார்க்கவே இல்லை. அப்பாவைப் பொறுத்த வரைக்கும் அது சரியான முடிவாய் இருக்கலாம்.

ஆனால் அவளுக்குத் தலையில் இடி.

சுகுமார் தேற்றினான் அவன் மார்பில் சாய்ந்து தேற்றிக்கொண் டாள். அவன் உயிரேடு கலந்து, உடலோடு சேர்ந்து தன்னை மறந்தாள். அவள் வாழ்க்கையில் அடுத்த எதிர்பாராத இடி அப்போது தான் விழுந்தது.

ஒரு மாலையில் வீட்டுக்கு வந்த சுகுமார் வீட்டுக்கூரை இடிந்து விழுந்து விடுகிற மாதிரி இருமினான். கோழையில் ரத்தம்.

சுகுமார் மறுக்க மறுக்க ஆஸ்பத் திரிக்கு அழைத்துப் போனாள். பரி சோதனைகளுக்கு அப்புறம் அவனுக்குக் காசநோய் என்று தெரிந்தது.

டி.பி.யுடன் கூடிய ஒரு ஆளை சூப்பர்வைசர் வேலையில் வைத்துக் கொள்ள ரப்பர் எஸ்டேட் முதலாளிக்கு விருப்பம் இல்லை வேலை போனது அது முதல் கட்டம். மொத்தமாக வந்த பணம் கரைந்த மாயம் தெரியவில்லை. அவளுடைய நர்ஸ் வேலை சம்பளம் மிகச் சொற்ப மானது போதவில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:03 am

அவனுக்கு மருந்துகள் வேண் டும் நல்ல உணவு வேண்டும் சானிடோரியத்தில் சேர்க்க வேண்டும். ஆயிரம், ஆயிரமாகப் பணம் வேண்டும் மோகினி திகைத்தாள்.

அம்மா மேல் அதிக ஆசை வைத்ததால் அப்பாவுக்கு அம்மாவை ஒரே யடியாகப் பிரிந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மோகினிக்கு சுகுமார் மேல் பிரபஞ்ச ஆசை அதனாலேயே அவளுக்குப் பயமாக இருந்தது. சுகுமார் அவளை விட்டுப் போய் விடக் கூடாது எப்படியாவது சுகுமாரைக் காப்பாற்ற வேண்டும் எவ்வளவு செலவானாலும் சரி.

நாகர்கோவில் டாக்டரைப் பார்த்து விட்டு வீடு திரும்பப் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களை ஒட்டி டாக்ஸி ஒன்று வந்து நின்றது.

……எங்க இந்தப்பக்கம்? என்ற ஒரு குரல் கேட்டது.

மோகினி டாக்ஸியினுள்ளே பார்த்தாள். சந்திரன் குளத்தில் அவள் காலைப் பிடித்து இழுத்ததற்காக செம்புள்ளி, கரும்புள்ளி குத்தப்பட்டு கழுதை மேல் ஊர்வலமாக அனுப்பப்பட்டவன் சிரித்துக் கொண்டிருந் தான்.

……நீங்க... சந்திரன்.... என்று மோகினி தடுமாறினாள்.

……ஆமா... ஆமா...பழைய சந்திரன் இல்லே புது சந்திரன். நம்ம வண்டித்தான் ஏறுங்க மொதல்ல எவ்வளவு நாளாச்சி பாத்து? டாக்ஸி கதவைத் திறந்துவிட்டான் ஏறிக் கொண்டார்கள். நான் கவர்ன்மென்ட் வேலையை விட்டு விட்டேன் டூரிஸ்ட் டாக்ஸி பிஸினஸ் ஒன்று தொடங்கி அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னான்.

மறுக்க மறுக்க ஹோட்டலுக்குக் கூட்டிப் போனான் மோகினிக்கு உறுத்தலாக இருந்தது. அவனை ஊருக்கு முன்னால் அவமானப் படுத்தி அனுப்பிய பிறகும் சந்திரன் அதை யெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத மாதிரி பழகியது ஆச்சரியமாக இருந்தது.

மோகினி சந்திரனைப் பற்றி சுகுமாரிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தாள். அவன்தான் இவன் என்று இப்போது எப்படிச் சொல்வது என்று தெரி யாமல் விழித்தாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், அந்த விவரத்தை சந்திரனே சொல்லி விட்டான். சுகுமாரை அதிர்ஷ்டசாலி என்று பாராட்டினான்.

இப்படிப்பட்ட சந்திரனையா அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினோம் என்று தோன்றியது மோகினிக்கு மனம் கூசியது. முதலில் அவன் கேள்விகளுக்கு விட்டேற்றியாய் பதில் சொல் லிக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று அந்த எண்ணம் வந்தது ஏன் அவனிடம் சொன்னால் என்ன?

சொன்னாள்.

……என்ன மோகினி இது? இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? மனசில இவ்வளவு பாரத்தை வெச்சிக்கிறப்ப நான் என்னவோ விளையாட்டுத்தனமா எல்லாம் பேசிட்டு இருந்துட்டேன். மாப்பிள்ளை ஒடம்பு முக்கியம்மா... அவர் இருந் தாத்தானே சித்திரம் வரைய முடியும்?

……எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சந்திரன் மூளை மரத்துப் போச்சி

……பரவாயில்லை, இப்பவாவது சொன்னியே டி.பி.யா? ரெண்டு, மூணு லட்சம் செலவாகுமே, பாக்கலாம். ஏதாவது வழி கெடைக்கும். பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். உயிர் ஒரு தடவை போனா திரும்ப வருமா?

……சந்திரன், நீங்க வேற என்னைப் பயமுறுத்தாதீங்க என்றாள் மோகினி திகிலுடன்.

……ஒரு வழி இருக்கு மோகினி. நிறைய பணம் கெடைக்கும்

……சொல்லுங்க, என்ன வழியா இருந்தாலும் சொல்லுங்க

……துபாயில நர்ஸ் வேலைக்கு ஆள் தேவைப்படுது. கேரளாவிலேர்ந்து ஒரு இருவது பேர் போறாங்க. நீயும் போறேன்னு சொன்னா அவங்களோட சேத்து விடறேன். சுகுமாரை இங்க ஏதாவது ஒரு சானிடோரியத்தில சேத்திட்டுப்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:04 am

போய்டு. பணம் அனுப்புனாப் போதும். ஆஸ்பத்திரில எல்லாம் கவனிச்சிப்பாங்க. ரெண்டு வருஷம் கான்ட்ராக்ட் மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் என்ன சொல்றே?

……சுகுமார்... எனக்கு நீங்க வேணும் சுகுமார் என்று உலர்ந்து போன அவன் உதடுகளை முத்த மிட்டப்படி மோகினி அழுதாள். ……அதனால நான் துபாய் போய்ட்டு வரேன். இங்க யார் தருவாங்க மாசம் நாப்பதாயிரம்? ரெண்டு வருஷம் தானே? ஓடிப் போய்டும். உங்களுக்கு ட்ரிட்மென்டும் அவ்வளவு நாள் ஆய்டும்

……மோகினி... எனக்காக நீ அவ்வளவு தூரம் போய்க் கஷ்டப்படணுமா?

……நெருப்புலயா குதிக்கப் போறேன்?

……என்னை நீ லவ் பண்ணாமலே இருந்திருக்கலாம்

……அடிச்சிடுவேன் ராஸ்கல், என்ன பேச்சு இது?

……சரி போய்ட்டு வா நேரா நேரத்துக்கு சாப்புடு வெள்ளிக் கெழமை, வெள்ளிக்கிழமை எண்ணெய் தேச்சிக் குளி. வாரத்துக்கு ஒரு லெட்டர் போடு சிரித்தார்கள்.

உள்ளுக்குள் இருவருக்குமே பிரிவு அளிக்கப்போகும் வேதனை கை கொட்டிச் சிரித்தது.
***
துபாய் நோக்கி விமானமேறிச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் அங்கே போனபின் வேறொரு அரபு நாட்டிற்கு ஏ.ஸி செய்யப்பட்ட வேனில் கூட்டிக் கொண்டு போனார்கள். வேன் கண்ணாடி வழியாக வெளியே தெரிந்த காட்சிகளால் மோகினிக்கு எங்கு அழைத்துச் செல்லப்படுகிறொம் என்பதெல்லாம் புரிய வில்லை.

ஏதோ ஒரு இடத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடன் அவளது பாஸ் போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொண்டு விட்டார்கள். அவளுடன் வந்த கேரளப் பெண்கள் மிக இயல்பாக இருந்தார் கள். அவர்கள் அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தே வந்திருந் தார்கள்.

……பின்னே? நர்ஸ் வேலை மாத்ரம் செய்ய மாச மாசம் நாப்பதாயிரம் யாரு தரும்?

ஐயோ... ஐயோ.... ஐயோ....

இப்படி என்று சொல்லியிருந்தால் அவள் சந்திரனை நாகர்கோவிலிலேயே காறித்துப்பியிருப்பாள்.

அவன் முகத்திற்கு செம்புள்ளி, கரும்புள்ளி குத்தியதற்கு பழி வாங்கு வது போல் அவள் உடலெங்கும் செம் புள்ளி, கரும்புள்ளி குத்தவைத்து விட்டான்.

……ஏய்... மோகினி பிடிவாதம் பிடிக்காதே, ஒத்துக்கோ இது பாம்பே மாதிரி இல்ல. தெருவில் போய் நிக்க வேண்டாம். மிஞ்சி, மிஞ்சிப் போனா இந்த ரெண்டு வருஷத்தில நீ ரெண்டு, இல் லன்னா மூணு ஷேக் வீட்டில இருப்பே. ஒன் அழகுக்கு உன்னை கௌரவமா வச்சிருப்பான் ஷேக்கு. சும்மா இல்ல, நாப்பதாயிரம். உனக்கு சாமர்த்தியம் இருந்தா அம்பது, அறுபது, எழுபது கூட சம்பாதிக்கலாம்

மோகினி தற்கொலை பண்ணிக் கொள்ளக்கூடத் தயாராக இருந்தாள். ஆனால் சுகுமாரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்தபின் தற்கொலை என்பது முட்டாள்தனமாகத் தோன்றியது.

காற்றில் அலையும் மேகம் ஒரு இலக்கை மனதில் கொண்டு அலை கிறதா என்ன? துளைக் கொண்ட மூங்கில் ஒரு ராகத்தை மனதில் கொண்டு இசைக்கிறதா என்ன?

மோகினி பணிந்து போனாள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக