புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
Jenila
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இராம காவியம் - Page 2 Poll_c10இராம காவியம் - Page 2 Poll_m10இராம காவியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 12:52 am

அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும்,bமண்ணுலகத்தையும் கவர்ந்துகொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியக அவதரித்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். பெருங்கொடையாளியாகிய அவனை வலிமையால் அடக்க முடியாது. அவனைத் தானத்தில் வெல்ல வேண்டும் என்று கருதி யாகசாலையை அடைந்தார். அவருடைய குறுகிய வடிவத்தைக் கண்டு எல்லாரும் எள்ளி நகையாடினார்கள்.

அசுர குரவாகிய சுக்கிராசாரியார், மகாபலி! இந்தக் குறளன் திருமால் என உணர்வாய். உன்னை மாயம் செய்து அடக்க வந்திருக்கிறான். எச்சரிக்கை! என்றார்.

மகாபலி, குருவே! மாய்ந்தவர் - மாய்ந்தவர் அல்லர். ஈந்தவர்தான் என்றும் வாழ்ந்தவர்கள். கொடுக்கும்போது தடுக்கின்றவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று கூறி வாமன மூர்த்தியை வந்தனை வழிபாடு செய்து, உமக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டான். வாமன மூர்த்தி, அள்ளிக் கொடுக்கம் வள்ளலே! என் காலால் மூவடி மண்தானம் வேண்டும் என்றார்.

மகாபலி புன்முறுவல் பூத்து. மூவுலகத்துக்கும் தலைவனாகிய என்னிடம் மூன்று நகரங்களை கேட்கலாமே ? உமது காலால் மூவடி என்றால் அது சிறிய பொருள்தானே ? என்றான்.

வாமனர், என் காலால் மூவடி மண் கொடுத்தால் போதும் என்றார். அவர் கையில் தண்ணீரைத் தாரை வார்த்து, மூவடி மண் அளந்த கொள்ளும் என்றான்.

சிறிய குறள்வடியில் இருந்த அவர் உயர்ந்தவர் உதவி யொப்ப, மூதண்ட கூட முகடு முட்ட வளர்ந்தார், அவருடைய பேருருவைக் கண்டு அதியித்தவர்கள், அஞ்சினார்கள். திருமால் ஓரடியால் விண்ணுலகத்தையும் ஓரடியால் மண்ணுலகத்தையும் அளந்து. மூன்றாவது அடிக்கு இடம் எங்கே! என்றார்.

மகாபலி, தங்கள் மூன்றாவரு அடிக்கு இடம் என் சென்னி என்றான். வாமன மூர்த்தி அவனுடைய தலையில் திருவடியை வைத்து அதல உலகத்திலேயே இருந்தினார்.

ரகுநந்தனா! இத்தகைய வித்தகரான வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார் முனிவர்.

அந்தச் சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் ஒன்றுபட்டு உறவாடின. நுலிவாரும் மெலிவாரும் பகையின்றி ஒன்றுபட்டு நின்றனர்.

மாமுனிவர், இராமா! இனி நான் யாகத்தைத் தொடங்குவேன், தாடகையின் புதல்வர்களாகிய சுபாகுவும் மாரீசனும் அவர்களுடைய சேனைகளான அரக்கர்களுகம், உதிரத்தையும் மாமிசங்களையும் யாகத்தில் சொரிந்து அசுத்தப்படுத்தி இடர் புரிவார்கள். இனி நான் மௌன நிலையில் இருந்து யாகம் புரிவேன். அரக்கர்களை வதைத்த யாகத்தை நிறைவேற்றுவாயாக என்று கூறி யாகத்தைத் தொடங்கினார்.

முனிவர்கள் பலர் வேதமந்திரங்கள் கூறியும், யாகத்துக்கு உரிய திரவியங்களைச் சேகரித்துத் தந்தும் உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது.

இராமர் யாகசாலையில் தெற்க வாசலிலும், இலட்சுமணர் வடக்க வாசலிலும் வில்லேந்தி நின்ற காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் ஆயிரம் அரக்கர்களம், உதிரத்தையும் மாமிசத்தையும் கல்லையும் மண்ணையும் சொரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருள்கள் விழாதவண்ணம் செய்தார். ஒரு சிறந்த அம்பினால் சுபாகுவை கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். மாரீசனை அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். அரக்கர்களைக் கண்டதுண்டங்களாக வதைத்து மாய்த்தார். பலர் ஓடி ஒளிந்தார்கள். தேவர்கள் பொருட்டு யாகம் ஐந்து நாள்கள் நடந்தது.

எட்டு நுதலையுடைய பிரம தேவனாலும் செய்தற்கரிய யாகம் பரம மங்களமாக நிறைவேறியபின் முனிவர்களி அவபிருது ஸ்நானம் செய்தார்கள். விசுவாமித்திரர் இராமரைக் கண்குளிரக் கண்டு, ரகுநாதா! எல்லாவுலகங்களையும் உன் உதரத்துள் வைத்துக் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியைக் காத்தருளியதில் என்ன வியப்பு ? இராகவா! உன் நாமம் வாழ்க. உன் புகழ் ஓங்குக! என்று கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 12:59 am

சீதையின் பிறப்பு

பத்மாட்சன் என்ற பார்த்திபன் இந்தப் பரத கண்டத்தை ஆட்சி புரிந்தான். அவன் மகப்பேறு வேண்டி மாதவனை வேண்டி மாதவம் புரிந்தான். திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

ஆரா அமுதம் அளித்த நாராயணா * திருமகள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.

திருமால் ஒரு மாதுளங்களியை அவனுக்கு அளித்தார. அவன் அதைப் பிறத்தபோது ஒர பாதி செழும்பிதையும், மற்ற பாதியில் இலட்சுமியும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான். மாதுளங்கனி போன்ற நிறமுடைய அம்மங்கைக்குப் பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்குச் சுயம்வரம் வைத்தான்.

சுயம்வரம் என்றால் பெண் தானே மணமகனை வரிப்பது. 56 சிற்றரசர்களும் சுயம்வரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாட்சி தந்தையைப் பார்த்து, அப்பா * நான் திருமாலை மணந்துகொள்ளத் தவம் செய்கிறேன். சுயம்வரம் எப்படி அமைத்தீர் ? என்று கேட்டாள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே * விண்ணில் தெரிகின்ற நீலநிறத்தை எவன் உடம்பில் பூசிக்கொள்வானோ * அவன் என் மகளுக்கு மாலை போட வேண்டும். இது என் மகளின் விருப்பம் என்றான்.

இது ஆகாத காரியம் என்று அரசர்கள் சீறி, பத்மாட்சன் மீது போர்தொடுத்தார்கள். போரில் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்துகொண்டிருந்தாள். வானவீதியிலே விமானத்தில் சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியைக் கண்டு காதல் கொண்டு பத்மாட்சியைத் தனக்குத் தருமாறு கேட்டான்.

பத்மாட்சன், பெண்ணைத் தரவதில் தடையில்லை. வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான்.

இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவன் மறைந்துவிட்டாள். அந்த நகரத்துக்கு இராவணன் தீ வைத்தான். அந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.

மற்றொருநாள் இராவணன் வான்வழியே செல்லும் பொழுது நகரம் எரிந்து கொண்டேயிருப்பதையும், அதன் அருகில் பத்மாட்சி தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டுத் தீயை அணைத்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தைக் கண்டு எடுத்து, அதனை வண்டோதரிக்குத் தரவேண்டுமென்று பெட்டியில் வைத்துக் கொண்டான். பல அலுவல் காரணமாக அதனை மறந்து விட்டான்.

ஒருநாள், வண்டோதரி * பெண் மாணிக்கமாகிய உனக்க ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்தேன் என்று கூறிப் பெட்டியைத் திறந்தான். அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி, மயக்கும் கள்ளி * என்ன என்ன வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, வாளை எடுத்து வெட்டுவதற்கு ஓங்கினான்.

வண்டோதரி கணவனார் கரத்தைப் பற்றித் தடுத்து, பெருமானே * இந்தக் குழந்தையை வெட்டாதீர்கள். மாறி மாறிப் பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாக மாறி உன்னைக் கொன்றுவிடுவாள். இந்தப் பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினான். பெட்டியை மூடி அரக்கர்களின் கையிலே கொடுத்து, இமயமலைச் சாரலிலே புதைத்து விடுங்கள் என்றான். அவ்வாறே அவர்கள் புதைத்து விட்டார்கள்.

சிலர் இலங்கையிலே சீதை பிறந்தாள் என்றும், சீதை பிறக்க இலங்கை அழியும் என்றும் கூற, இராவணன் பெட்டியில் குழந்தையை வைத்துக் கடலில் விட்டுவிட, மிதிலாபுரியில் கரை தட்டியது என்று கூறுவார்கள். மிதிலாபுரிக்கம், கடலுக்கும் சம்பந்தமே இல்லை. மிதிலாபுரி இப்பொழது ஜனக்பூர் என்று வழங்குகிறது. அதற்குப் பாட்னாவிலிருந்து ஜீப்பில் போகவேண்டும் நேபாளத்தின் பார்டரில் இந்த நகரம் இருக்கின்றது.

மிதிலாபுரியை அரசு புரிகின்ற சீரத்துவஜ ஜனகர் பரமஞானி மரவுரியைத் தன்கொடியில் எழுதிக் கட்டியதினால் சீரத்துவஜ ஜனகர் என்று பெயர் பெற்றார். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தார். மகாலட்சுமியே குழந்தையாக விளங்கிக் கொண்டிருந்தாள. ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார். தான தருமங்கள் செய்தார்.

பின்னர், ஆறுமாதம் கழித்து ஜனகருடைய மனைவி ஸுநயனி கருவுற்ற வேறு ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பேர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 12:59 am

ஒருநாள் இந்த நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள. சீதாதேவி வீசிய பந்து ஜனகர் பூசை செய்கின்ற சிவன் வில்லின் அடியில் சிக்கிக் கொண்டது. சீதை, ஊர்மிளை * பந்தை எடுத்துப் போடு என்றாள். ஊர்மிளை, அக்கா * பந்து சிவ தனுசின் கீழே அகப்பட்டுக் கொண்டது. அது அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள்.

என்னம்மா * ஒர பந்தை எடக்க அறுபதினாயிரம் பேரா ? என்று கூறி, அன்னம்போல் நடந்து இடக்கையில் வில்லை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்தக் கொடத்தாள். பழையபடியே வில்லை எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள்.

மறுநாள் காலையில் பூசை செய்யவந்த ஜனகர் வில் மேடையில் இல்லமல் மூலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். பாராச் சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது ? என்று கேட்டார்.

பாராச் சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை. சீதா தேவி தன் தங்கையுடன் பந்து விளையாடினார்கள் என்றான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது ? என்ற கேட்டார். அப்பா நான்தான் எடுத்து வைத்தேன. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, வில்லை இடக்கையால் எடுத்து மேடையில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி ஜனகருக்கு ஆசய்சரியத்தை அளித்தது.

அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய வில்லை. இந்த ஐந்து வயது குழந்தை அநாயாசமாக இடக்கையால் எடுத்து வைத்ததே * இந்தப் பெண்ணை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்ற சிந்தித்தார்.

வில்லை வளைத்தவனுக்கே பெண்ணைத் தருவதாகப் பிரகடன் செய்தார். பலர் வந்து வளைக்காமல் தோல்வி அடைந்தார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் பரம மங்களமாக நடைபெறும் பொரட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் குபமினார்கள. அந்த யாக அழைப்பு சித்தா சிரமத்தி;ல் இருக்க விசுவாமித்திரரை அடைந்து. விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா * உன்னால் ஒரு பெயரி காரியம் நடக்க இருக்கிறது. அதற்கிடையில் ஜனகருடைய யாகத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இராம இலட்சுமணருடன் மிதிலையை நோக்கி புறப்பட்டார். வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியைத் தரிசித்தார்கள். பகீதரன் கங்கை கொண்டு வந்த வரலாற்றை விசுவாமித்திரர் இராமருக்குக் கூறினார். வழியில் முருகப் பெருமான் திருவவதாரம் செய்த சரவணப் பொய்கையைக் கண்டு முருகப் பெருமனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.

அகலிகை வரலாறு வைகுண்டத்தில் மகாலட்சுமியை விச்சாதரை என்ற பெண்மணி வழிபாடு செய்து லட்சுமியின் மலர் மாலையை எடுத்துக்கொண்டு வந்தாள். அதனைத் துர்வாச முனிவருக்குக் கொடுத்தாள். துர்வாசர் இந்திரனுக்க அம்மாலையை அன்புன் அளித்தார். இந்திரன் அந்தப் புனிதமான மலர் மாலையைத் தான் ஆரோகணித்து வந்த ஐராவதத்தின் தலையில் வைத்தான். அந்த யானை மாலையை எடுத்துக் கீழே போட்டுக் காலால் மதித்தது. அதனால், கோபமடைந்து துர்வாசர் சாபம் கொடுத்தார். இந்திரனுடைய செல்வங்கள் அத்தனையும் அழந்துவிட்டன.

திருமாலுடைய ஆலோசனைப்படி தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். பாற்கடலிலிருந்து கற்பகம், காமதேனு. சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, இலட்சுமி, ஐராவதம், அகல்யா முதலியன தோன்றின. ஹல்யா - அழகின்மை அகல்யா - அழகில்லாத பகுதி அணுவளவும் இல்லாதவள், இந்தப் பேரழகியைக் கண்டு உல்லாரும் விரும்பினார்கள். பிரமதேவர், இரு முகங்களையுடைய பசுவை எவன் வலம் வருகின்றானோ அவனுக்க அகலிகை என்றார். இந்திரன், இமயன், வருணன், வாயு முதலிய தேவர்கள் தங்கள் வாகனங்களில் ஏறி உலகை வலஞ்செய்யலானார்கள். இந்திரன் ஐவாரவதத்தில் எல்லாருக்கும் முன்னாக வந்தான்.

நாரத முனிவர் பசு - பூலேக காமதேனு, கருவுற்ற ஒரு பசுவைக் கொணர்ந்து கௌதமருடைய ஆசிரமத்திற்க வந்தார். அப்பசு கன்று ஈன்றலாயிற்று.

அப்போது பசுவுக்கு இரு முகங்கள். கௌதமரை, அப்பசுவை வலம்புரியச் செய்து, பிரமதேவரைப் பார்த்துக் கௌதமர், இருமுகங்கள் உள்ள பசுவை வலம் வந்தார். பசு கன்று ஈனுகின்றபோது அதனை வலம் வந்தால் உலகை வலம் வந்த புண்ணியம் எய்தும். பிரம தேவர அகலிகையைக் கௌதமருக்குக் கல்யாணம் செய்து வைத்தார். கௌதமருக்குச் சதானந்தன் என்ற புதல்வர் பிறந்தார். உலகை வலம் வந்த இந்திரன் அகலிகைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதறிந்து ஏமாந்து போனான். புரங்களை வென்ற அவன் புலன்களை வெல்லவில்லை.

ஒரு நாள் நடு இரவில் சேவலாகக் கூவினான. கௌதமர் விடியற்காலை என்று கருதி நீராடச் சென்றார். இந்திரன் கௌதமருடைய வடிவில் சென்றான். அகலிகை கணவன் என்று கருதினாள். பொழுது புலரவில்லை என்ற அறிந்த கௌதமர் நடந்ததை ஞானக்கண்ணால் அறிந்து ஆசிரமத்தை அடைந்தார். இந்திரன் பூனையாகி ஓடினான். கௌதமர், இந்திரனே * விரும்பியது ஆயிரம் உண்டாகக் கடவது என்ற சபித்தார். அகலிகையைக் கற்பில் உறுதியில்லாiயால் கல்லாகுமாறு சாபம் தந்தார். அகலிகை தொழுது அழுது, நான் கல்லாக எத்தனைக் காலம் இருக்க வேண்டும் என்றாள். தசரத ராமனுடைய அடிப்பொடிபட்டால் சாபம் பாவம் இரண்டும் நீங்கும் என்றார்.

அங்குச் சென்ற இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டவுடன.; அகலிகை இளம் கன்னிகை வடிவத்தைப் பெற்றாள். எம்பெருமானுடைய பாதத் துகள் வயதையே பின்னுக்குத் தள்ளி அருள் புரிந்தது.

இந்த வரலாற்றைத் தவமுனிவர் இராமச்சந்திர மூர்த்திக்குக் கூறிப், பாதத் துகளே அகலிகையின் சாபம் பாவம் என்ற இரண்டையும் அகற்றியது என்றால் என் திருவடிப் பெருமையை யாரால் அளக்க முடியும் ? உன் திருவடி வாழ்க என்றார்.

கௌதமர் அங்கு வந்தார். இராமர் கௌதமரைப் பார்த்து, உள்ளத்தால் பிழைபடாத என் அன்னையை ஏற்றுக் கொள்ளம் என்றார். அவர் அகலிகையை அங்கீகரித்தக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:04 am

ஓடக்காரன் சந்திப்பு மூவரும் தேவரும் போற்றும் மிதிலைக்கருகிலே சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி குறுக்கிட்டது. அதற்குப் பாலம் இல்லை. அந்நதியைக் கடக்க வழி என்ன என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து வணங்கி நின்றான். நீ யாரப்பா ? உனக்கு என்ன பேரப்பா ? என்று கேட்டார்கள். அவன் நான் வீரப்பன் என்றான். அக்கரைக்குப் போகவேண்டுமென்ற அக்கறை. ஓடம் கிடைக்குமா ?

நான் ஓடக்காரன். மீனவர் மரவில் வந்தவன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன்.

இப்போ! ஓடம் தயாராக இருக்கின்றதா ? எத்தனைப் பேர் ஏறலாம் ?

அறுபது பேர் ஏறலாம். நீங்கள் மூவர்தான் வந்திருக்கின்றீர்கள்.

அப்பா! இன்னும் 57 பேர்கள் சேரும் வரையிலும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

நீங்கள் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள். உங்களைக் காக்க வைக்கமாட்டேன். உங்கள் மூவருக்கும் ஓடம் செலுத்துவேன்.

அப்படியானால் அறுபது பேருக்குரிய கட்டணத்தை நாங்களே தந்துவிடுவோம்.

நீங்கள் மூவரும் ஏறினால் மும்மூர்த்திகள் ஏறியது போலாகும். உங்களிடத்தில் காசு வாங்கமாட்டேன். உங்கள் ஆசி இருந்தால் போதும். ஏறுங்கள்.

விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறுகின்ற பொழுது அந்த மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் கால் வைக்காதே. அப்பன் ஆணை என்றான்.

இராமர் துக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்குச் சீற்றம். இவனை அறைந்துவிட்டு நாமே ஓடம் செலுத்தலாம் என்று எண்ணினார். இராமர், தம்பி! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்திக் கொண்டிருக்கிறான். தனியார் துறையில் அரசாங்கம் கை வைக்கக்கூடாது. அரசாங்கம் மேற்கொண்ட இலாக்கா ஒழுங்காக இருப்பதில்லை. பச்சையாக இருக்கின்ற என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன ? அவனுக்குச் சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டுதானே ?

அப்பா! மீனவனே! நான் ஏன் ஏறக்கூடாது ?

ஐயா! தங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன். சீறுகின்ற சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். நீங்கள் யார் ?

அப்பா! அயோத்தியை ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் மக்கள் நாங்கள்.

அம்மீனவன் உள்ளம் துடித்து, கண்ணீர் வடித்து வணங்கி, என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரமூர்த்தி! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். அமைச்சர்கள் வந்தாலே மிகப்பெரிய வரவேற்புச் செய்கிறார்கள். நீங்கள் சக்ரவர்த்தித் திருக்குமாரர். உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். தாங்கள் மட்டும் ஒடத்தில் கால் வைக்கவேண்டாம்.

ஏனப்பா! நான் ஏறக்கூடாது ?

ஐயனே! சிறிது தூரத்தில் ஒரு கருங்;கல் பாறை இருந்தது. நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை ஆடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இதில் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடனே ஓடம் பெண்ணாக மாறிவிடும். நான் வீ;;ட்டிலுள்ள பெண்ணைக் காப்பாற்றுவேனா ? இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவேனா ? தனவந்தர்கள் இரு தாரத்தடன் அல.;லல் படுகிறார்கள். நான் ஏழை. இந்த ஓடத்தை வைத்தக்கொண்டுதான் ஜீவனம் பண்ணுகிறேன்.

அப்பா! நாங்கள் கால் வைத்தால் பெண்ணாகாது. நாங்கள் அவசியம் அக்கரைக்குப் போகவேண்டும்.

அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நதியில் இறங்கிச் சுத்தமாகக் காலைக் கழுவிவிடுங்கள். கல்லைப் பெண்ணாக்குகின்ற மருந்து தண்ணீரில் கரைந்து போகட்டும் பின்னர் ஏறிக்கொள்ளலாம்.

இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால்வைத்துத் தேய்க்கக் கூடாது என்று வசிட்டர் உமக்குச் சொல்லவில்லையா ? கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய்த் தேய்த்துவிடுவேன் என்று கூறி, இராமருடைய சரணார விந்தங்களைச் செப்புத் தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை எடுத்து அர்ச்சனை செய்தான். எம்பெருமானே உன் பாத பூசைக்குச் சரபங்கர், பாரத்துவாஜர், தண்டக வனத்த மகரிஷிகள், சபரி முதலிய மகரிஷிகள் பலகாலம் காத்திருக்க தவம் செய்யாத தமியேனுக்கு முதல் பாதபூசை கிடைத்ததே என்று துதி செய்து வந்தனை வழிபாடு செய்தான்.

இராமர், தம்பி இலட்சுமணா ? இவனை அறைந்துவிடலாமா ? என்று எண்ணினாயே! நமது பாதபூசைக்காக இவ்வாறு செய்தான்.

மீனவன், இராமா! கல்லைப் பெண்ணாக்கும் மருந்து தண்ணீரில் இறங்கிவிட்டது. இதைக் கீழே விட்டால் கீழேயிருக்கிற கற்களெல்லாம் பெண்களாகிவிடும். ஏன் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி ஆசுமனம் செய்து தலையில் ஊற்றிக்கொண்டான். மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியே ஓடத்தைச் செலுத்தினான். ஓடத்தை விட்டு இறங்கியவுடன் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை இனாமாகத் தந்தார். அவன் அதை வாங்க மறுத்தவிட்டான்.

இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். தொழிலாளியிடம் தொழிலாளி இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதிக்க ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்குத் திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர். இப்பொழுது நான் இதற்க இனாம் வாங்கினால் அப்பொழுது நான் பொருள் தர எங்கே போவேன்! என்று கூறி, தொழுது அழுது இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். அவன் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்;டார்கள்.

மணிக் கோபுரத்திலுள்ள கொடிகள், இராகவ! நான் செய்த மாதவத்தால் மலர்மகள் என்னிடம் வந்து பிறந்திருக்கின்றாள். அத்திருமகள் உனக்கத்தான் என்று அசைந்து அழைப்பதுபோல இருந்தது. மலர்ச் சோலைகளும், அறச் சாலைகளும், கல்விக் கூடங்களும், செல்வ மாடங்களும் நிறைந்து அழகுடன் விளங்கும் மிதிலை மாநகரத்திற்குள் நுழைந்து, அரச வீதியில் மூவரும் சென்றார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:04 am

சீதையின் சந்திப்பு கன்னிமாடத்தில் கல்லும் புல்லும் உருகத் தாதியர்கள் சூழ ஆயிரமாற்று மெருகிட்ட தங்க விக்கிரகம் போல் சீதாதேவி நின்று கொண்டிருந்தாள். இராமர் அக்குல மகளை நோக்கினார். அத்திருமகளும் இராமனை நோக்கினாள். சீதையின் உள்ளத்தில் இராமரும், இராமர் உள்ளத்தில் சீதையும் குடி புகுந்தனர். அவர்கள் உள்ளம் ஒன்றியது. இராமர் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இவர் யாரோ! என்ன பேரோ! முபமதியைப் போன்ற முகமும், வாள் போன்ற கூரிய கண்ணும், பவளம் போன்ற அதரமும், தவளவெண் நகையும் கொண்ட இவர் என் உள்ளத்தை உருக்குகின்றார். பண்டைப் பிறப்பின் தொடர்பினால் இவருடைய சந்திப்பு ஏற்பட்டது போலும் என்று எண்ணினார்.

தெரு வளைவில் மூவரும் மறைந்தனர். சீதாதேவி இராமர் மீது காதல் கொண்டு கூறுகின்றார். இவர் மன்மதனோ! மன்மதனாக இருந்தால் கரும்பு வில் இருக்குமே* மூங்கில் வில் இருப்பதனால் இவர் மன்மதன் அல்லர். இந்த மூங்கில் இவருடைய தோளைத் தழுவுவதற்கு என்ன தவம் செய்ததோ! என் உள்ளத்தில் குடியிருந்த நாணம், மடம் முதலிய குணங்கள் போன வழி தெரியவில்லையே! இவர் என் கண்வழி நுழைந்து களவு செய்துவிட்டார். அந்த முனிவர் சிறிது மெல்லப் போயிருந்தால் இந்த சுந்தர ரூபனை இன்னும் சிறிது நேரம் பார்த்திருப்பேனே. இவர் எனக்கு மணவாளனாக வரவேண்டுமானால் அறுபதினாயிரம் பேர் தூக்கவேண்டிய சிவதனுசு குறுக்கே நிற்கின்றதே. அந்த மேருமலை போன்ற மகத்தான வில்லை இவர் வளைத்தால்தானே எனக்கக் கணவனாக வரமுடியும்! கண்களக்குத் தெரியாமல் விண்ணில் உறையும் தேவர்களே! சித்தர்களே முனிவர்களே! இந்த வீதி வழியாகச் சென்ற சுந்தர சீலன் கையில் அநதப் பெரிய வில் பூமாலைப் போல் வளையுமாறு செய்தால் நான் உங்களுக்காக 14 ஆண்டு வனவாசம் செய்வேன் என்று பிராரத்தனை செய்து கொண்டாள். பொழுது போனபடியால் ஜனக மகாராஜாவின் கட்டளைப்படி சதான்நதர் மூவரையும் வரவேற்ற விருந்தினர் மாளிகையில் தங்க வைத்த உணவு முதலியன தந்து உபசரித்தார்.

அயோத்தியிலிருந்து மிதிலாபுரி 450 மைல். 14 நாள் கடந்து வந்து சேர்ந்தார்கள். வழியில் தூங்காமல இருந்த விசுவாமித்திர முனிவர் அயர்ந்து தூங்கினார். இளைய பெருமாளும் நன்கு உறங்கிவிட்டார். படுத்த உடனே உறங்கும் இராமர் அன்ற உறக்கம் வராமல் புரண்டு புரண்மு படுத்தார். தூக்கம் வராமைக்க என்ன காரணம் ? ஏ! மனமே! இன்ற மாலை மாடிமேல் நின்ற அழகிய பெண்மணியைக் கண்டு காதல் கொண்னையே! இது முறையா ? அவள் முகம் மட்டுமே தெரிந்தது. கழுத்து தெரியவில்லையே! அவள் கழுத்தில் மங்கல நாண் இருந்தால் பிறன்மனை விழைந்த பெரும் பாவம் உனக்கு வருமே! பாவங்களில் தலையாயது பரதார கமனம் கமனத்தைக் கண்டிப்பதற்கல்லவா! நீ வில்லை வைத்திருப்பது பரதார கமனத்தைக் கண்டிப்பதற்கல்லவா! நீயே அந்தப் பாவத்தைச் செய்தால் அறநெறி பிழைக்குமா ? என்னைப் பாவக் குழியில் தள்ளிவிட்டாயே! என்று பலவாறு சிந்தித்துக் குழம்பினார். முடிவில், நான் எந்தப் பெண்களைப் பாரத்தாலும் என் தாய் கௌசலையாகவே பார்ப்பேன். இன்ற இவளைப் பார்த்த என் மனம் விரும்பிது. இதுவரை நல்வழியில் போகும் என் மனம் அல்வழியில் போனதில்லை. குற்றம் செய்யாத என் மனம் அவளை விரும்பியதால் அவள் கன்னியாகத்தான் இரக்கவேண்டும் என்று முடிவு கட்டி உறங்கினார்.

வில் வளைத்தல் மறுநாள் காலை சந்தியா வந்தனங்களைச் செய்துவிட்டு மூவரும் வேள்விச்சாலைக்கு எழுந்தருளினார்கள். ஜனகர் அவர்களை வரவேற்று ஆசனங்களில் அமர வைத்து உபசரித்தார். ஜனகர் விசுவாமித்திர முனிவருடைய இருபுறங்களிலும் இளம் சூரியனைப்போல் ஓளி செய்து கொண்டு அமர்ந்திருக்கிற இராமரையும், இலட்சுமணரையும் குறியாகப் பார்த்து, குருநாதா! இக்குமாரர்கள் யார் ? என்று வினாவினார். விசுவாமித்திரர் கூறுகின்றார்.

மன்னர் பெருமானனே! இவர்கள் தசரதச் சக்ரவர்த்தியன் குமாரர்கள். இவன் இராமன் இலக்குமணன். கூறியிருந்தாக இங்கு வந்திருக்கின்றார்கள். நீ வைத்திருக்கின்ற வில்லையும் வளைக்கும் பேராற்றல் படைத்தவர்கள். மனுவின் குலத்தில் வந்தவர்கள். இவர்கள் குலத்தின் முதல்வனாகிய இக்ஷுவாகு மன்னன் அணி அரங்கம் தந்தவன். பிருகு. குகுஸ்தன, மாந்தாதா, குசுகுந்தன. சிபிக் சக்ரவர்த்தி, சகரர், பகீரதன், இரகு, அஜமகாராஜன் இவர்கள் இந்தக் குலத்தின் பெருமையை நிலைநாட்டினவர்கள். இந்த இராமர் தாடகையைக் கொன்று நான் செய்யும் வேள்வியை முடித்துக் கொடுத்தார். தள்ளரிய பெருநீதி தங்;கும் பள்ளம் போன்ற பரதனை; கைகேயி பெற்றெடுத்தாள். மேர மலையோல் உயர்ந்த வீரனாகிய இந்த இலட்சுமணனையும், சத்ருக்கனனையும் சுமித்திரை பெற்றெடுத்தாள். வேந்தர் பெருமானே! இந்த இராகவனுடைய பெருமை அளவிட முடியாது. இவன் நற்குண நம்பி. இராமருடைய குணநலன்களை எடுத்துக்கூறினார். அறுபதினாயிரம் பேர் வில்லைச் சுமந்துகொண்டு வந்து யாக சாலையில் வைத்தார்கள். அங்குக் குழுமியிருந்த மன்னர்கள் வில்லை வளைக்கும் ஆற்றலின்றி அடங்கி மடங்கி இருந்தார்கள. ஒரு மன்னவன் வில்லைப் போய்ப் பார்த்துவிட்டுப் வந்த தன் ஆசனத்தில் அமர்ந்தான். அருகில் உள்ளவன். எங்குச் சென்றாய் ? என்று கேட்டான். அவன், நான் வில்லை துகாக்ப் போகவில்லை. பார்க்கப் போனேன் என்றான். இன்னொருவன் வில்லிடம் சென்று கரத்தை நீட்டினான். அவன் கைகளுக்கு அந்த வில் அடங்கவில்லை. வருத்தத்தோடு தன் ஆசனத்தில் வந்த அமர்ந்தான். அருகில் இருந்தவன், எங்குப் போனீர் ? என்று கேட்டான். நான் வில்லை வளைக்கப் போகவில்லை அளக்கப் போனேன் என்றான்.

இன்னொருவன் வில்லிடம் சென்ற எடுக்க முடியாமல் அவமானத்தடன் வந்த அமர்ந்தான். அருகில் இருந்தவன், எங்குப் போனீர் ? என்ற கேட்டான். நான் வில்லை வளைக்கப் போகவில்லை. நிறுக்கப் போனேன் என்றான். ஒரவன் எனக்க மூன்று நாளாகக் சாய்ச்சல் என்றான். ஒருவன் சீதை எனக்குத் தங்கை முறை என்றான். இவ்வாறு எவரும் வில்லை வளைக்க இயலாமல் பின்வாங்கிய பொழுது முனிவர் இராமனைக் கடைக்கண்ணால் நோக்கி, இந்த சிவதனுசு தட்ச யக்ஞத்தில் பழுதுபட்டது. பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்து இற்றுப் போனது. இது இராவணன் சம்காதத்திற்கு உதவாது. ஊனக்கப் பரசுராமர் கோதண்டத்தைத் தருவார். இதை வளைக்காதே, ஒடித்துவிடு என்று கூறினார். அங்குச் சூழ்ந்திருந்தவர்கள் ஜனகருக்க அறிவே கிடையாது. இந்தப் புத்திர ரத்தினத்திற்கு வலிய மகளைத் தராமல் இநதப் பெரிய வில்லை இப்பிள்ளை முன் வைத்து, இந்த வில்லை வளைத்தால்தான் பெண் தருவேன் என்பது பேதைமையாகும். இந்த வில்லை வளைக்கப் போகின்றவனும் இல்லை. சீதைக்குத் திருமணமும் ஆகாது என்று பலவாறு பேசிக் கொண்டார்கள். மனிவருடைய கடைக்கண் பார்வையை அறநித இராமர வில்லை நோக்கினார். இந்த இடத்தைத் தியாம்பிரம்மம், முனி குனசைக தெலிஸி சிவதனுசு விரிசேஸமயமு அலகலல் லாடககனி ஆராண்முனி எடு பொங்கெனோ என்று பாடுகின்றார்.

இராமர் மேருகிரி போல் நடந்து அந்தப் பெரிய வில்லை அநாயாசமாக எடுத்த நாணைப் பிடித்த இழுத்தார். வில் படார் என்று ஒடிந்தத. அண்ட சராசரங்கள் அதிர்ந்தன. எட்டுத் திசைகளிலும் அந்த ஓசை கேட்டது. தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள்.

ஜனகர் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். மிதிலாபுரியிலுள்ள அனைவரும் பெருமகிழ்ச்சியுற்றார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:15 am

சீதா கல்யாணம்

[You must be registered and logged in to see this image.]

நீலமாலை என்ற தாதி சீதையிடம் சென்று இராமர் வில்லை வளைத்த செய்தியைக் கூறினாள். தாதியின் வார்த்தையைக் கேட்டு, சீதாதேவி பெருமகிழ்ச்சியுற்றாள். இவள் சொன்ன குறிப்பினால், நேற்ற நான் கண்ட வீரன்தான் வில் வளைத்திருக்க வேண்டும். வேறு ஒருவன் வில் வளைத்திருந்தால் நான் மாண்டுவோவேன் என்று எண்ணினாள்.

சுபையில் ஒரு பெண்மணி இராமரைப் பார்க்கச் சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இன்னொருத்தி சீதையைப் பார்க்குந்தோறும் இராமருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இராமருடைய தம்பியைப் பாருங்கள் அண்ணனுக்க இவர் இளையார். குணங்களில் இளையார் என்றாள்.

இந்தப் புண்ணிய புருஷர்களை மிதிலாபுரிக்க அழைத்துக் கொண்டு வந்த விசுவாமித்திரருக்க நன்றி சொல்லுங்கள் என்றாள். ஜனகர் விசுவாமித்திர முனிவரின் ஆலோசனைப் படி அயோத்திக்குத் திருமண ஓலை அனுப்பினார்.

ஓலைக்கொண்டு வந்து கொடுத்தவரக்குத் தசரதர் ஆடையும், அணிகலனும் வழங்கினார். எல்லாரையும் மிதிலைக்கப் புறப்படுமாறு கட்டளையிட்டார். ஆன்றோர்களைச் சேர்ந்த சிறியவரும் ஆன்றோராக மாறிவிடுவார்கள். தசரதருடைய பொற்றேரில் தங்கத்தினாலாகிய சக்கரங்கள் உருண்டு உருண்டு இருண்ட கல்லையும் பொன்மயமாக்கி விட்டன. எல்லாரும் மிதிலையைச் சேர்ந்தார்கள். ஜனகர் தசரதரை வரவேற்புச் செய்து உபசரித்தார். இராமர் தந்தையாரை வணங்கினார்.

திருமண நாளன்று மணமக்களை அலங்கரித்துத் திருமண மண்டபத்தில் அமர்த்தினார்கள். சதானந்தர் புரோகிதராக இருந்து வேத மந்திரங்களைக் கூறினார். மணவறையில் சீதை வளையலைத் திருத்துவதுபோல் கடைக்கண்ணால் காகுத்தனைக் கண்டு களித்தாள்.

ஜனகர் சீதாதேவியின் கரமலரை இராமருடைய கரமலரில் வைத்து, வேத மந்திரத்துடன் தாரை வார்த்தத் தந்தார். இராமர் சீதையின் கழுத்தில் மங்கல நாண் கட்டினார்.

இராமர் சீதாதேவிக்குத் தாலிபூட்டியவுன் தாயைப் பார்க்கினும் மிக்க அன்புடன் கைகேயியை முதலில் வணங்கினார். பின்னர், கோசலையையும் சுமித்திரையையும் வணங்கினார். வசிட்டர் விசுவாமித்திரருடைய குருமார்களைப் பணிந்தார். பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில் சீதாதேவியின் திருமணம் நடைபெற்றது.

வசிட்டர் முதலிய முனிவர்களின் ஆலோசனையின்படி ஜனகருடைய தம்பி குசத்துவசருடைய புதல்வி மாண்டவியைப் பரதர் திருமணம் செய்துகொண்டார். ஜனகருடைய புதல்வி ஊர்மிளையை இலட்சமணர் திருமணம் செய்துகொண்டார். மாண்டவியின் தங்கை கீர்த்தியைச் சத்ருக்னர் திருமணம் செய்துக்கொண்டார். இவ்வாறு, நான்கு திருமணங்கள் நடை பெற்றன.

விசுவாமித்திரர் விடைபெற்றுக் கொண்டு தமது தவவனம் சென்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:15 am

தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ, ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஜனகா, 4 பெண்களுக்கும் 400 படுக்கை, 400 வெள்ளியண்டா, 400 தங்கக்குடம், 400 போர்வை, 400 பசுக்கள் இவ்வாறு நிரம்பச் சீதனந்தந்து, அறவுரை கூறி வழியனுப்பினார். இராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்

பரசுராமர் வழியில் மயில் வலமாகவும், காகம் இடமாகவும் சென்றன. இது அபசகுனம். ஏதிரில் நிறைகுடம் வந்தது. இது நல்ல சகுனம். ஆகத்திக்கீரை எதிரில் வந்தத. இது கெடுதல். சுலவைத் தொழிலாளி அழுக்குத் துணிமூட்டையுடன் வந்தான். இது நல்லது. இவ்வாறு சகுனங்கள், நல்லதும் கெட்டதும் மாறிமாறி வந்தன. தசரதர் நிமித்தங்கள் பற்றிக் கூறும் நிபுணரை அழைத்து இதுபற்றிக் கேட்டார். அவர்கள், மலைபோல ஆபத்து வரும், பனிபோல விலகி விடும் என்றார்கள்.

ஆலகால விடம் போலவும், வடவைத் தீயைப் போலவும், எட்டுத் திசைகளும் அதிர, விண்ணும் மண்ணும் அதிர்ச்சியடைய அஷ்டகுல யானைகள் அஞ்சக் கண்ணிலே நெரப்புப் பொறி சிந்த, மூக்கிலே, காதிலே புகைவர, கையில் வில் ஏந்தி பரசுராமர், அடா ராமா! அடா ராமா! என்று காது செவிடுபட, உரத்த குரலில் கூறிக்கொண்டு எதிரில் வந்தார்.

இவர் பரம பராக்கிரமசாலி கார்த்த வீரியார்ச்சுனருடைய ஆயிந் தோள்களை மபவால் துணி செய்தவர். சூரிய குலத்தை 21 தலைமுறை கருவறுத்தவர். சமந்த பஞ்சகம் என்று ஐந்து உதிர மடுவை உண்டாக்கிப் பிதிர்களக்குப் பிண்டம் தந்தவர்.

தசரத மன்னர் அஞ்சி, பரசுராமர் முன் சென்று, அவர் கால்மேல் வீழ்ந்து, முனிவரரே! இராமன் சிறிய பாலகன். அவன் ஒரு குற்றமும் செய்யாதவன். ஆறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தாலும் மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார்.

நதியின் வெள்ளத்தை உப்பு மூட்டையால் தடுக்க முடியுமா ? அதுபோல் தசரதரின் வேண்டுகோளைப் பரசுராமர் பொருட்படுத்தவில்லை. பேராற்றல் படைத்த பரசுராமன் எங்கே ? இராமன் எங்கே ? பரசுராமனுடைய கோபம் உலகத்தையே எரித்துவிடுமே! என் மகன் பிழைக்கமாட்டான் என்று எண்ணித் தசரதர் மூர்ச்சையடைந்தார்.

பரசுராமர் இராமனுக்க மன்னே நின்று, இராமா! நீ அரசன் மகன். ஆதலால், உனக்கு ஆசி என்றார். பெரிய மகான்கள் குலம் குறித்துப் பேசுவது நன்றன்று.

இராமர் பரசுராமா! உன்னைப் பார்த்தால் வேதியனைப் போல் காணப்பெறுகின்றது. அதனால், உனக்கு வணக்கம் என்றார்.

பரசுராமர், இந்த இளைஞன் நம்மைச் சொல்லம்பால் தொளைத்துவிட்டான். வேதியனைப்போல் என்ற வார்த்தை எத்தனைக் கொடுமையானது ? என்ற எண்ணி, மேலும் கோபக்கனலைச் சிந்தி, ஏ ராமா! தாடகை என்ற பெண்ணைக் கொன்றாயே அது முறையா ? நீதியா ? என்றார்.

பரசுராமா! பயிர் செய்கின்றவன் நெல்லை வளர்க்கப் புல்லைப் பிடுங்கி எறிவான். அதுபோல், அரசனாகிய நான் தூயவரைக் காக்கத் தீயவரை அழிப்பது அரச தரமம் ஆகம். பரசராமா! நீ வேதியனாயிற்றே. வேடர் ஏந்தும் வில்லை. வேதம் ஏந்தும் கையில் ஏந்தி அலைகின்றனையே ? நீ வேதியனா ? வேடனா ? என்று பதிலுக்குக் கேட்டார் இராமர்.

இராமா! நீ வில் ஏந்துவது நியாயந்தான். பெண்ணைக் கொன்றது நியாயம் ஆகாதே ? என்றார் பரசுராமர்.

பரசுராமா! பிறர் கண்ணில் உள்ள கடுகு அளவுள்ள அழுக்கைப் பூதக்கண்ணாடி போட்டுப் பெரிதாகப் பார்க்கின்றாயே. உன் கண்ணில் பூசணிப்பழமத் அளவு அழுக்கு இருக்கின்றதே. காட்டில் வசித்த கொடியவளாகிய தாடகையைக் கொல்லலாமா என்று கேட்கின்றாயே - பத்து மாதம் சுமந்து அங்கமெல்லாம் நொந்து பெற்ற தாயரைக் கொன்றனையே ? அது முறையா ?

இராமா! மானசீகக் கற்பு நிலையில் சிறிது தாழ்ந்த தாயைக் கொல்லுமாறு என் தந்தையார் கட்டளையிட்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. அதனால், நான் தாயைக் கொன்றேன். அது தாய் கொலையாகாது அத முறைதான்.

ழுரசுராமா! என் குருவாகிய விசுவாமித்திரர் தாடகையைக் கொல்லுமாற கட்டளையிட்டார். குரு வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லக்கூடாது. அதனால், தாடகையை வதைத்தேன். அது பெண் கொலையாகாது.

இராமா! நீ ஒரு பழைய கறையான் அரித்த வில்லை ஒடித்ததைப் பெரிதாக எண்ணித் துள்ளுகின்றாய். இதோ! இந்தப் பிரசண்ட் கோதண்டத்தை வளைத்தால் உன்னை உயிரோடு விடுவேன். இந்தா வில்!

இராமர்! நீ அந்தக் கோதண்டவில்லை வாங்கி ஒரு விநாடியில் வளைத்து, ஒரு பாணத்தைத் தொடுத்து, இந்த அம்புக்கு என்ன இலக்கு ? என்று கேட்டார்.

நடுங்கி ஒடுங்கி, தலைக்குமேல் கரங்களைக் கூப்பி, நான் அநதணன், என்னை மன்னித்து அருள் என்றார் பரசுராமர்.

பரசுராமா! நான் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் அம்பு மன்னிக்காது. அதற்க வழி சொல்.

என் தவ வலிமையைத் தந்தேன் என்றார் பரசுராமர்.

இராமர் தன் கணையால் பரசராமருடைய தவ வலிமையை அழித்து, பரசுராமா ? நீ அரச தருமத்தை விடுத்துஇ அந்தண தருமத்தை எடுத்து மேல் கடல் ஓரம் போய்த் தவம் செய் என்று கூறி அருள் புரிந்தார்.

அந்தக் கோதண்டத்தை வருணதேவனிடம் தந்து. தக்க தருணத்தில் என்னிடம் தருக என்றார் இராமர் பரசுராமர்.இராமரைத் தொழுது விடை பெற்றச் சென்றார்.

பிறகு, இராமர் தம் தந்தையாரை எடுத்து மூர்ச்சை தெளிவித்துப் பரசுராமர் தோல்வியடைந்ததைக் கூறினார்.

தசரதர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். எல்லாரும் அயோத்தியை அடைந்தனர்.

கைகேயின் சகோதரர் யுதாசித்து வந்து, தம் தகப்பனார், தம் பேரப்பிள்ளைகளை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். தசரதர் பரத சத்துக்னரைத் தங்கள் பாட்டன் நாட்டுக்குக், கேகய நாட்டுக்குப் போய்வரக் கட்டளையிட்டார். பரதரும், சத்ருக்னரும் இராமரை வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கேகய நாட்டுக்குப் புறப்பட்டனர்.

இராமர் சுகமே அயோத்தியில் வாழ்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:18 am

முடிசூட்டு விழா

[You must be registered and logged in to see this image.]

இராமாயணமாகிய இதிகாசத்தை நீட்டி வளரச் செய்தவர்கள் சிறிய இரு பெண் பாத்திரங்கள் ஆவார்கள். ஒருத்தி கூனி, மற்றொருத்தி சூர்ப்பணகை. இந்த இருவர்களும் இழிந்த பாத்திரங்கள் என உணர்க.

சூர்ப்பணகை இவ்வரலாற்றை வளர்த்திவிட்டாள். பத்து மாதக் கதைதான் மூன்றரைக் காண்டங்களாகும்.

சீதா தேவியின் திருமணத்துக்குப்பின் தசரதச் சக்ரவர்த்தி அயோத்தியை ஆட்சி புரிகின்றார்.

மக்கள் மனக்கவலையின்றி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். அயோத்தியில் அமைதியும் அறநௌpயும் நிறைந்து நின்றன.

இராமபிரான் அதிகாலையில் எழுந்து நீராடி. நித்திய வழிபாடுகளை முடித்துத் தாய் தந்தையரை வணங்குவார் குருநாதராகிய வசிட்டரை வணங்குவார். ஆலயம் சென்று இறைவழிபாடு புரிவார். ஏழை எளியவர்கட்கு உதவி புரிவார். சீதா தேவிக்கு வேதவேதாங்களை உபதேசிப்பார். அலையில்லாத கடலின் படகில் சென்றால் எத்தணை இன்பம் இருக்கும் ? இராமமூர்த்தி சுகமாக வாழ்ந்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:20 am

தசரதருக்கு ஓர் அதிர்ச்சியான அறிவிப்பு

ஒருநாள் காலை தசரதர் நீராடிக் கண்ணாடிக்கு எதிரே நின்று தலைமயிரைச் சிக்கெடுத்து ஒழுங்கு செய்யும் பொழுது காதின் அருகில் ஒரு மென்மையான நரைமுடியைக் கண்டார். அதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மன்னவனே! உனக்கு முதுமை வருகின்றது. முதுமை வந்தால் மரணம் வரும். மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இனியும் நீர் அரசியலில் வாழ்வது நன்றன்று. இத்தனைக் காலம் உலகுக்கு உழைத்தாய். இனி, உன் உயிருக்கு உழைப்பாய் என்று எச்சரிக்கை செய்வது போல் இருந்தது.

தசரதர் திருவருள் உணர்த்த யாக்கை நிலையாமையை உணர்ந்தார். வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு என்ற அறிஞரின் அறிவுரையை உணர்ந்தார். அதனால், அரசியலைத் தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு. ஆட்சியைத் துறந்து, கானகம் சென்று வானகம் புகுந்து, முத்தி நலம் பெறச் பெரிதும் விழைந்தார்.

இதனால்தான், இராமருடைய மகுடாபிஷேக விழாவை அதிக ஆடம்பரமாகப் புரிய விரும்பினாரில்லை.

இராமருடைய பட்டாபிஷேக விழாவுக்கு ஜனக மன்னர் வரவேண்டும். பரதர் வரவேண்டும் என்றெல்லாம் அவர் எண்ணினாரில்லை. காலை 11 மணிக்குச் செயற்குழு கூட்டி, மறுநாள் அதிகாலை பட்டாபிஷேக விழா அமைத்துவிட்டார். இடையில் 19 மணி நேரந்தான் இருந்தது. இது துறவிலே அவருக்க இருந்த அதிதீவிரத்தை உணர்த்துகின்றது.

ஒரு கோடீஸ்வரனுடைய தலைமயிர் தீப்பற்றிக் கொண்டது. அவன் என் தகுதிக்கு எற்பப் பன்னீரால்தான் இதனை அணைக்க வேண்டும். உடனே ஓடி பன்னீர் வாங்கி வாருங்கள் என்றா கூறுவான் ? இத்தகைய உணர்ச்சி உந்திய சக்கரவர்த்தி உடனே மகனுக்கு மகுடம் சூட்டித் தவநெறி மேற்கொள் விழைகின்றார் உன உணர்க.

தனி மண்டபத்தில் இருந்து அமைச்சர்களையெல்லாம் அழைத்தார். வசிட்ட முனிவரை அழைத்தார். அந்த ஆலோசனை மண்டபத்தில் இருந்து, தம் கருத்தைக் கூறுகின்றார்.

அந்த அமைச்சர்கள் அறிவின் சிகரங்கள், அறநெறி வழுவாதவர்கள். வந்ததைக் கண்டு மேல் வருபவற்றை உணர்பவர்கள். இடித்து அறங்கூறும் இயல்பினர். ஊறுதியை இயம்பும் இயல்புடையவர்கள்.

தசரதர், ஞகுருநாதா! அமைச்சர் பெருமக்களே! எனக்கு மூப்பு வந்துவிட்டது. இத்தனைக் காலம் புறப்பகையை ஒடுக்கி அரசாட்சி செய்தேன். அரசு ஆட்சியை, அர-சாட்சியாகச் செய்தேன. இனி, நான் அகப்பகையை வென்று தவத்தைச் செய்து பரகதியடைய விரும்புகிறேன்.

மற்றவர்கட்கு மருமகள் திருமகளப் போல் வருவார்கள் எனக்குத் திருமகளே மருமகளாக வந்திருக்கின்றாள்.

அன்பர்களே! இராமனுக்கு நிலமகளை இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்து வைக்க விரும்புகின்றேன். நீங்கள் இதற்க அனுமதி தரவேண்டும்ஞ என்றார்.

வசிட்டர், அரசர் பெருமானே! இராகவன் உண்ணும் நீரினும் உயர்ந்தவன். இராமனுக்கு முடி சூட்டுவதால் உலகம் உய்யும், நாடும் நகரும் மக்களும் நலம் பெறுவார்கள் என்றார்.

தசரதர் ஜோதிட வல்லாரை அழைத்து அவருடன் ஆய்ந்து மறுநாள் சூரியோதயத்தில் முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். தசரதருடைய கட்டளைப்படி, சுமந்திரர் இராமருடைய திருமாளிகைக்குப் போய் இராமரைத் தேரில் ஏற்றிக்கொண்டு அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

இராமர் வசிட்ட முனிவரை வணங்கி, தந்தையாரை வணங்கினார். வணங்கிய மைந்தனைத் தந்தையார் தோளும் மார்பும் பொருந்தத் தழுவி மகிழ்ந்தார்.

தம் தோளில் உள்ள பூபாரத்தை மகனுடைய தோளில் இட நினைக்கின்றார். ஆதலின், அவருடைய தோள்களையும் மார்பையும் தமது தோளினால் அளப்பதுபோல இருந்தது, அந்தக் காட்சி.

தசரதர், ஞஎன் அருந்தவச் செல்வமே! எனக்கு மூப்பு வந்துவிட்டது. இனி, நான் தவஞ்செய்து பரகதியடைய வேண்டும். சாகும்வரை அரசியலிலேயே உழல்வது அறிவுடையவர் செயல் ஆகாது. கண்ணா! நமது குலத்தில் தோன்றி முன்னோர்கள் தகுந்த வயதில் மூத்த மகனுக்கு முடி சூட்டிவிட்டுக் காட்டில் தவஞ்செய்து முத்தி நலம் பெற்றார்கள். இது நமது குல தருமம். நாளைக் காலை உனக்கு முடி சூட்டுவிழா நடைபெறும். இன்று நீ விரத நெறியில் இருந்து திருவருளையும் குருவருளையும் பெறுகஞ என்றார்.

அரசுச் செல்வம் நம்பால் எய்துகின்றதே என்று இராமர் மகிழ்ந்தாரில்லை. இப்போது மகிழ்ந்திருந்தால் சிறிய தாய், வனம் போ என்கிறபோது வருந்தியிருப்பார் என்பது பொதுமறை. தந்தை சொல்லே வேத வாக்காக எண்ணி இருந்தார்.

சுமந்திரே, பட்டாபிஷேக விழாவுக்கு உரிய ஏற்பாடுகள் எல்லாவற்றையும் குறைவறச் செய்யும். மன்னர்களே! நீங்கள் எல்லாரும் இருந்து இராமனுக்கு முடிசூட்டி வைப்பீர்கள் என்றார் தசரதர். அரசவை கலைந்தது.

தசரதர் கௌசலையின் மாளிகைக்குப்போய், கௌசலையைப் பார்த்துப் பெண்மணியே! நாளைக் காலை உன் மகனுக்கு முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றார்.

கௌசலை தன் அருமந்த மகனுக்குப் பட்டாபிஷேகம் என்றவுடன் மகிழ்ச்சி கடலாகப் பொங்கியது. ஆனால் உடனே அந்த மகிழ்ச்சி வற்றிவிட்டது. பட்டங்கட்டிய மறுநாளே மன்னவர் கானகம் போய்விடுவாரே ? என்ற எண்ணி உள்ளம் வருந்தினாள்.

நமது செயலில் என்ன உள்ளது ? எல்லலம் ஈசன் செயல் என்று கருதினாள். மகனுடைய முடிசூட்டு விழா இனிது நடைபெற, ஆலயஞ்சென்று இறைவனை வழிபட எண்ணிச் சுமித்திரையுடன் சென்று வழிபாடு செய்தாள். அன்னமும் ஆடையும் சொர்ணமும் வறியவர்க்கு வழங்கினாள்.

அரசருடைய ஆணையின்படி யானைமீது முரசு முழக்கி, இராமபிரானுடைய பட்டாபிஷேகத்தை எங்கும் அறிவித்தார்கள். இதனைக் கேட்டு மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். வாழை கமுகுகள் நட்டு, மலர்மாலைகளைத் தொங்கவிட்டு, களப கஸ்தூரி தெறித்து நகரை அலங்கரித்தார்கள் ஆடினார்கள், பாடினார்கள், மெலிந்தவர்கள் மகிழ்ச்சியினால் பருத்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:23 am

வசிட்டர் இராமருக்கு அரச நீதி உபதேசித்தல்

[You must be registered and logged in to see this image.]

இராமச்சந்திர், வசிட்டரிடம் சென்று வணங்கினார். வசிட்டர் ஆசி கூறி இராகவா! உனக்கு நாளை முடிசூட்டப்பெறும். நான் கூறும் அறவுரைகளைக் கேட்டு, நீ அதன்படி ஒழுகுவாயாக தணிந்த சிந்தையையுடைய அந்தணர்கள் மிகவும் சிறந்தவர்கள். நீ அவர்களை வணங்கி, அவர்களின் ஆசியைப் பெறுவாயாக. அந்தணர்களின் உள்ளம் உவக்க நடப்பாயாக.

அமைச்சர்களின் அறிவுரையை மதித்து அதன்படி நடப்பாயாக.

இராமா! இனிமையாகப் பேசவேண்டும், ஈந்து உவக்க வேண்டும். மக்களுக்கு நன்மையே புரிய வேண்டும்.

உயிரை உடம்பு தாங்குவதுபோல் மக்களை மன்னவன் தாங்கிக் காத்து நலம் புரியவேண்டும்.

ஏழை எளியவர்கட்கு உதவி செய்ய வேண்டும். மக்களின் துயரங்களையகற்றி அவர்கள் அச்சம் இன்றி வாழ வழிவகுக்க வேண்டும். அரசனுக்க ஆசையிருக்கக் கூடாது. சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு, அரச நீதிகளை உபதேசித்து, இராமரைத் தருப்பையின்மீது அமரச் செய்து, வேத மந்திரங்களைக் கூறி, சடங்குகளைச் செய்தார். இராமருடன் ஆலயம் சென்று இறைவழிபாடு நடத்தினார்.

எல்லாம் திருவருளின் திட்டப்படிதான் நடக்கும். நம் செயலால் ஒன்றும் நடைபெறாது. ஒன்றை நினை, அது ஒழிந்திட்டு ஒன்றாகும். சக்ரவர்த்தி தசரதர் தம் மூத்த மகனுக்கு முடிசூட்டுவிழா என்று சகல ஏற்பாடுகளும் செய்தார். வசிட்டாதி முனிவர்களும் இருந்து செய்த ஏற்பாடு. அது தவிடுபொடியாகிவிட்டது. பட்டாபிஷேகம் நடைபெறவில்லை. திருவருள் துணை புரிந்தாலன்றி எதுவும் நடைபெறாது என்பது இவ்வரலாற்றால் உணர்தல் வேண்டும்.

இந்தப் பட்டாபிஷேகம் 14 ஆண்டுகள் வழிந்து சக்ரவர்த்தியில்லாமல் நடந்தது. மனித முயற்சியால் எதுவும் முடிவு பெறாது என உணர்க.

Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக