புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
64 Posts - 50%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 19, 2019 8:57 pm

வாரிசு அரசியல்: ஐகோர்ட் கிளை கருத்துமதுரை:
வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரமாக தேர்தல் வாக்குறுதியை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் தராத கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன.பா.ஜ., கம்யூ., தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன எனக்கூறியது.
அப்போது, ரூ. 1லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அபராதத்தை நன்கொடையாக செலுத்த உத்தரவிட்டார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 19, 2019 9:01 pm

மதுரை: தமிழகத்தில், அனைத்து கோவில்களின் வசம் உள்ள சொத்துகள் குறித்து, அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்குச் சொந்தமாக, பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றிலும் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பிப்.,5ல் நீதிபதிகள், 'பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். கோவில் வளாகத்தில் மது, பீடி, சிகரெட்டிற்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.அறநிலையத் துறை கமிஷனர், பணீந்தர் ரெட்டி ஆஜரானார்.மனுதாரர் தரப்பில்,'அறநிலையத் துறையின் அனைத்து கோவில் சொத்து விபரங்கள், கோவில்களுக்கு வரும் வருமானங்கள், தணிக்கை அறிக்கை ஆகியவற்றை அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என கூறப்பட்டது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றிற்கு சொந்தமாக, 4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளன' என்றார்.
நீதிபதிகள்பிறப்பித்தஉத்தரவில்கூறியதாவது:தமிழகத்தில்அனைத்துகோவில்
களுக்கும் உள்ள சொத்துகள் எவ்வளவு; அவற்றிற்கு வாடகை வசூலிக்கப்படாமல் உள்ள நிலுவை; நிலுவையை வசூலிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அறநிலையத்துறை, ஏப்.,1ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கோவில் சொத்துகள் தொடர்பாக, தனிநீதிபதிகள் ஏற்கனவே சில உத்தரவுகள் பிறப்பித்
துள்ளனர். அதன் நகலை, தாக்கல் செய்ய வேண்டும். இவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 20, 2019 9:02 pm

மதுரை, பழநி கோயில் கிரிவீதி ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னை ராதாகிருஷ்ணன். இவர், 'பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை கோரி இந்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி., மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர், ''தற்காலிக நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். சில நிரந்தர கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை சர்வே செய்த பின்தான் ஆக்கிரமிப்பில் உள்ளனவா, இல்லையா என தெரியவரும்,'' என்றார்.நீதிபதிகள், 'தற்காலிக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, இன்று (மார்ச் 20) கலெக்டர், எஸ்.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 20, 2019 9:03 pm

மதுரை, பழநி கோயில் கிரிவீதி ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னை ராதாகிருஷ்ணன். இவர், 'பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை கோரி இந்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி., மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர், ''தற்காலிக நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். சில நிரந்தர கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை சர்வே செய்த பின்தான் ஆக்கிரமிப்பில் உள்ளனவா, இல்லையா என தெரியவரும்,'' என்றார்.நீதிபதிகள், 'தற்காலிக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, இன்று (மார்ச் 20) கலெக்டர், எஸ்.பி.,அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 21, 2019 9:34 pm

மதுரை: கடந்த 2007ம் ஆண்டில் மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை கோர்ட் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த கோர்ட், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 21, 2019 9:37 pm

சென்னை: தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ. 2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரம் வழங்குவது சரியல்ல. இதனை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ; வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் பலர் தங்களின் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தேர்தல் இருப்பதால், நாங்கள் இது தொடர்பான வழங்குதல் மற்றும் தகுதியானவர்கள் கணக்கெடுப்பு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 5:47 pm

சேலம், சிறுமியை பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில், ஐந்து பேருக்கு, 47 ஆண்டுகள் சிறை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, 2014, பிப்., 14, இரவு, பெற்றோருடன், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தினர், பழுதான கதவை கழற்றி வைத்து, துணியால் வாசலை மூடி வைத்திருந்தனர்.மறுநாள் காலை, அதே பகுதியில் உள்ள பெருமாள் கரடு பகுதியில், நிர்வாணமாக, சிறுமியின் சடலம், துாக்கில் தொங்கியது. உடல் மீது திருநீறு பூசப்பட்டிருந்ததால், நரபலி உள்ளிட்ட மாந்திரீக செயல்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.பிரேத பரிசோதனையில், சிறுமியை பலரும் பலாத்காரம் செய்து, கொன்றது தெரிந்தது. அதே பகுதியில் உள்ள, பா.ம.க.,வைச் சேர்ந்த பூபதி, 31, ஆனந்த்பாபு, 29, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரபாகரன், பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.போதையில் இருந்த ஐவரும், வீடு புகுந்து, துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி, பெருமாள் கரடு பகுதிக்கு துாக்கிச் சென்று, பலாத்காரம் செய்து, கொன்றதும், அதை மறைக்க, துாக்கில் தொங்க விட்டதும் தெரிந்தது.'போக்சோ' உட்பட பல்வேறு பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிந்தனர். தமிழகம் முழுவதும், பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் குற்றவாளிகள் என, 19ம் தேதி அறிவித்த, நீதிபதி விஜயகுமாரி, அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.நேற்று, தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட, ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பல்வேறு பிரிவுகளின்படி, தனித்தனியே தண்டனை விபரங்களை, நீதிபதி விஜயகுமாரி அறிவித்தார்.இதன்படி, குற்றவியல் சதிக்கு, 10 ஆண்டு சிறை, குற்ற மீறலுக்கு, 10 ஆண்டு; கடத்தலுக்கு, ஏழு ஆண்டு; கடத்தி கட்டாயப்படுத்துதலுக்கு, 10 ஆண்டு; இறந்தவர் உடலை கடத்துதலுக்காக, மூன்று ஆண்டு, பெண் வன்கொடுமைக்கு, ஏழு ஆண்டு சிறை என, மொத்தம், 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இது தவிர, கொலை செய்ததற்கு, ஆயுள் சிறை, 'போக்சோ' பிரிவில், ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து பிரிவுகளிலும், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:10 pm

மல்லையா சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சொத்துகளை, ஜூலை, 10க்குள் முடக்க, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடியவன், தொழில் அதிபர் விஜய் மல்லையா; அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, இவனுக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.வழக்கு விசாரணைக்கு, மல்லையா ஆஜராகாததால், டில்லி நீதிமன்றம், அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமினில் வெளிவர முடியாத கைது, 'வாரன்ட்'டும் பிறப்பித்தது.இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லையாவுக்கு சொந்தமான சொத்து களை முடக்கி, அறிக்கை தாக்கல் செய்ய, பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு, டில்லி நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.பெங்களூரில், மல்லையாவுக்கு சொந்தமாக, 159 சொத்துகள் இருப்பதாகவும், அவற்றை முடக்க, கூடுதல் அவகாசம் கேட்டும், பெங்களூரு போலீசார், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து, நேற்று இந்த வழக்கை விசாரித்த டில்லி தலைமை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத், பெங்களூரில் உள்ள, மல்லையாவின் சொத்துக்களை, ஜூலை, 10க்குள் முடக்க உத்தரவிட்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:12 pm

போலி பட்டா வழங்கினால் 'சஸ்பெண்ட்' உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, போலி பட்டா வழங்கிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.போலிபட்டாவழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அம்பாசமுத்திரம் சண்முகவேல், நான்குநேரி ரவிக்குமார் ஆகியோர் திருநெல்வேலி கலெக்டரிடம் புகார் அளித்தனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: பட்டா வழங்கும் போது முறையாக விசாரித்து, இடத்தை ஆய்வு செய்து, உண்மையான உரிமையாளரை அறிந்து வழங்க வேண்டும். அந்த நடைமுறை இவ்விவகாரத்தில் பின்பற்றவில்லை என தெரிகிறது. துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது போன்ற சர்ச்சைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை பின்பற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம்உத்தரவிடுகிறது.போலிபட்டாவழங்கியதுதொடர்பாகஉரியஆவணங்களுடன் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து கலெக்டர்களும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.மனுதாரர்களின் புகார் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி திருநெல்வேலி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு நிறைவேற்றியது குறித்து, அரசு ஜூலை 3ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தர விட்டனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக