புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
69 Posts - 52%
heezulia
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_m10வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 17, 2014 4:13 pm

நேற்று (16.03/14) டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற “பக்தி இலக்கியங்களில் பன்முகப் பார்வை” என்னும் தலைப்பில் நடந்த மாநிலக் கருத்தரங்கில் ”நாயன்மார்கள் அறுபத்து நால்வர்” என்று இயற்பகை நாயனாரின் துணைவியாரைப் பற்றிப் பேசிய போது என் மாணவிகள் பதிவு செய்தது. (நேரமின்மையால் கட்டுரை வாசிக்கவில்லை)

(இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்)

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் 1977145_677825272259677_100626483_n

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் 1920542_677825642259640_1474734129_n

நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.

பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,.

மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்து அவருடன் சேர்ந்து ஈசன் அடியின்கீழ் அமரும் பேறு பெற்றதாக மூன்று பாக்களில் (4194, 4195, 4196) சுருக்கமாகப் பாடப் பெற்றுள்ளது.

தலங்கள் தோறும் யாத்திரை மேற்கொண்டு சைவப் பெருமை பாடிய காரைக்காலம்மையாரின் வரலாறு 66 பாடல்களில் விரித்து உரைக்கப் பெற்றுள்ளது. இந்த மூவர் மட்டுமே பெரிய புராணத்தால் அறியப் படும் நாயன்மார்களுள் பெண்பாலர்.

இவர்களேயன்றி சைவ அடியார்களுடன் தொடர்புடைய மகளிருள் இன்னும் சிலர் மனத்தாலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் இயல்பிற்பரிய ஈகத்தைச் செய்துள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, காலச்சூழல் இடம் கொடுக்காமையினாலோ அவர்களின் அருந்தொண்டுகள் மறைக்கப் பட்டிருக்கின்றன. அப்படி மறைக்கப் பட்ட தூய தொண்டர்களுள் ஒருவர் இயற்பகை நாயனாரின் துணைவியார்.

சீர் தூக்கிப் பார்த்தால் மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ முடியாததொரு ஈகம் இவர் செய்தது. ஆனால் இவரது பெயர் கூட பெரிய புராணத்தின் வழி அறியக் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற் குரியது. பெயரும் அறியமுடியாத இவரின் தூய தொண்டு பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது..

சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக் கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர்.

இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.

அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ இசைவாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.

இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.

“உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி. “காட்டுக்குப் போ” என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.

மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.

உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை. மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.

இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,

இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே

துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி”

(பெரியபுராணம்: 439)

என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்

“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” (திருத்தொண்டத் தொகை)

என்று போற்றுகிறார்.

“கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே

மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)

எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி: 4)

என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை.

இயற்பகையார் தம் துணைவியாரைச் சற்றேறக் குறைய ஒரு சடப் பொருளாகக் கையாண்டுள்ளார்.

உன் மனைவியை விரும்பிப் பெற வந்தேன் என்று அடியாராக வந்த இறை கூறியதும். “இதுஎ னக்குமுன் புள்ளதே” (பெரிய புராணம் 411) என்று இயற்பகையார் பதில் கூறுகிறார். ‘இது’ என்று அவர் கூறும் இச்சொல்லே தம் மனையாளை ஒரு சடப் பொருளாக இயற்பகையார் கையாண்டதற்கு வலுவான ஆதாரமாகிறது.

அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பம் கேட்கப் படவில்லை. எந்த எதிர்ப்பும் காட்டாது அடியவருடன் சென்ற அந்தப் பேதையின் பெருமை இயற்பகையாரின் புராணத்தில் எங்கும் பேசப் படவில்லை. ‘திருவினும் பெரியாள்’ என்று ஓரிடத்தில் அவளைச் சொல்வதையன்றி அப்பெண்ணின் பெயர் என்ன என்று கூட அறியப் படவில்லை.

அப்படி இருக்க அப்பெண் விரும்பி அடியாருடன் செல்ல ஒப்பினாளா என்னும் வினா எழுவதைத் தடுக்க இயலாததாகிறது. தூய நீறுபொன் மேஎனியில் விளங்கத் துர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்த அடியவர், “மன்னுகாதல் உன்மனைவியை வேண்டி வந்த திங்கு” (பெரியபுராணம் 410) என்று சொன்னவுடன் உள்ளே சென்ற இயற்பகையார் அம்மையாரை அழைத்து வந்து “விதிமணக்குல மடந்தை! இன்றுனை இம்மெய்த் தவர்க்குநான் கொடுத்தனன்” (பெரியபுராணம் 411) என்று அடியாரிடம் கொடுத்து விடுகிறார். முதலில் அப்பெண் மனம் கலங்கிப் பின் தெளிவடைவதாகக் காட்டுகிறார் சேக்கிழார். முதலில் மனம் கலங்கிய அப்பெண் மனம் தெளிவது எக்காரணத்தினால்? அவர் இத்தகு செயலுக்குத் துணிவது எப்படி? என்று சிந்திக்க வேண்டுவது இங்கு அவசியமாகிறது.

இயற்பகையார் தொடக்கத்திலேயே “விதிமணக்குல மடந்தை” என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவளை எதிர்வினையாற்ற விடாது செய்து விடுகிறார்.

‘விதி மணம்’ என்பது முறைப்படி செய்து கொள்ளும் மணந்ததைச் சுட்டுகிறது. விதியோடு மணந்த கற்பறத்தின் முறைமை என்பது கணவனின் சொல்லைத் தட்டாது கேட்டல். இதனை இயற்பகையார் சொன்ன ‘விதிப்படி’ என்னும் இச்சொல் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

அடுத்ததாகக் ‘குல மடந்தை’ என்னும் சொல்லை இயற்பகையார் இங்கு பயன் படுத்தியதின் நோக்கத்தை ஆராய்தல் தேவையாகிறது. குலப்பெண்கள் கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கும் மரபு அக்காலத்தில் இல்லை. இதனைச் சுட்டிக் காட்ட இச்சொல் பயன்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்” என்று திருவள்ளுவரும், “சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகள் உள்ளன. அவற்றில் மூழ்கி காமன் கோட்டம் சென்று காமனைத் தொழுதால் கணவரோடு இன்புற்று வாழ்வர்; நாமும் தொழுவோம்” என்று கண்ணகியின் தோழி தேவந்தி கூறியவுடன் தீப்பட்டாற் போல துடித்தெழுந்து “பீடு அன்று” என்று மறுத்த இளங்கோவடிகள் போற்றிய கண்ணகியும், “கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார்” என்று கூறும் சீவக சிந்தாமணி கூறுவதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

ஆக இந்த இரு சொற்களும் அம்மையாரை இயற்பகையாரின் கட்டளைக்கு உடன்பட வைத்ததோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்புராணத்தில் ஈரிடங்களில் இயற்பகையாரின் துணைவியின் குரல் ஒலிக்கின்றது. முதலில் இயற்பகையார் “உன்னை இந்த அடியாருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறியவுடன் ஒலிக்கிறது.

“இன்று நீரெனக்கருள் செய்ததிதுவேல் என்னுயிர்க் கொடுநாத!நீர் உரைத்த

தொன்றை நான்செயும் அத்தனை யல்லால் உரிமை வேறுள தோஎனக்(கு)”

(பெரியபுராணம் 412)

என்னும் இம்மொழி உரிமையற்ற ஓர் அடிமையின் குரலாக ஒலிக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் அடிமைகளே உரிமைகளைப் பற்றி பேசக் கடமைப் பட்டவர்களாக இருப்பர். ‘கடமை வேறுளதோ’ என்று கேட்டிருந்தால் அம்மையார் இச்செயலை மனமுவந்து செய்வதாகக் கொள்ளலாம். இங்கு அம்மையார் பயன்படுத்தியுள்ள ‘உரிமை வேறுளதோ’ என்னும் சொல் அவர் அடிமையாக நடத்தப் பட்டாரோ என்று சிந்திக்க வைக்கிறது.

அடியவர் கழிபெரும் காதலுடன் அம்மையாரைத் தனியிடம் அழைத்துச் செல்கிறார். உடன் இயற்பகையார் காவலாக வருகிறார் அப்போது “எம் குலக்கொடியை விட்டுச் செல்” என்று உற்றாரும் உறவினரும் அடியவரை நோக்கிச் சூழ்ந்து வருகின்றனர். அடியவர் அச்சம் கொண்டவராக அம்மையாரைப் பார்க்கின்றார். இத்தருணத்தில், “இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும்” (பெரியபுராணம் 419) என்று அடியவரை நோக்கிக் கூறுவதாக அம்மையாரின் குரல் மறுமுறை ஒலிக்கின்றது. இச்சொல்லாடல் இயற்பகையார் இறைவனால் நடத்தப்படும் நேர்வாய்வில் வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையைக் கூறுவதாக ஒலிப்பதைக் காணலாம்.

இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. இங்கு எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா? கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது.

கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா. அவரது பெயரைக்கூட இருட்டடைப்பு செய்தது ஏன்? நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பயந்த இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாமே என்னும் வினா முறையானது என்பதை இப்புராணத்தை நுணுகி ஆராய்பவர் உணர்வர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 17, 2014 4:20 pm

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் 3838410834 வாழ்த்துகள் அக்கா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 17, 2014 4:25 pm

வாழ்த்துகள் முனைவர் அவர்களே

எனக்கு நேரமே இல்லாம ஓடிட்டு இருக்கேன் என்று போன திரியில் சொன்னதன் காரணம் எளிதில் விளங்கின்றது .

கட்டுரையை பதிவிடுங்கள் அக்கா .. கேட்கும் பாக்கியம் இல்லை , படிக்கும் பாக்கியமாவது கிடைக்கட்டும்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 17, 2014 4:37 pm

கட்டுரையைப் பதிவிட்டு விட்டேன் பாலாஜி.

(இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்)

இக்கட்டுரையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்றுள்ளேன். கருத்தர்ங்குக்கு நான்கு பக்கங்கள்தான். வரையறை உண்டு. அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Tவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Hவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Iவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Rவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 17, 2014 5:31 pm

Aathira wrote:கட்டுரையைப் பதிவிட்டு விட்டேன் பாலாஜி.

(இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்)

இக்கட்டுரையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்றுள்ளேன். கருத்தர்ங்குக்கு நான்கு பக்கங்கள்தான். வரையறை உண்டு. அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

நன்றி அக்கா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 17, 2014 6:27 pm

நல்ல கட்டுரை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 17, 2014 6:34 pm

நல்ல கட்டுரை ...

நல்ல கட்டுரை ..

இந்த கட்டுரைக்கு மறுமொழி அளிக்கும் அளவுக்கு எனக்கு தமிழ் புலமை இல்லை .

இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. இங்கு எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா? கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது. கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா wrote:

சிறப்பான கட்டுரை .. இப்படி வினா எழுவது நிச்சயம் . ஒரு வேலை கீழே உள்ள பாடலில் போல

“இதுஎ னக்குமுன் புள்ளதே” என்று அவர்களும் நினைத்துவிட்டார்கள் போல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 17, 2014 6:54 pm

ராஜா wrote:வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் 3838410834 வாழ்த்துகள் அக்கா
நன்றி ராஜா

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Tவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Hவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Iவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Rவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 18, 2014 4:02 pm

பாலாஜி wrote:நல்ல கட்டுரை ...

நல்ல கட்டுரை ..

இந்த கட்டுரைக்கு மறுமொழி அளிக்கும் அளவுக்கு எனக்கு தமிழ் புலமை இல்லை .

ரொம்பத் தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தான் அடக்கமாக இருப்பாங்களாம் பாலாஜி..

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Tவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Hவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Iவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Rவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 28, 2014 12:21 am

பாலாஜி wrote:நல்ல கட்டுரை ...

நல்ல கட்டுரை ..

இந்த கட்டுரைக்கு மறுமொழி அளிக்கும் அளவுக்கு எனக்கு தமிழ் புலமை இல்லை .

இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. இங்கு எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா? கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது. கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா wrote:

சிறப்பான கட்டுரை .. இப்படி வினா எழுவது நிச்சயம் . ஒரு வேலை கீழே உள்ள பாடலில் போல

“இதுஎ னக்குமுன் புள்ளதே” என்று அவர்களும் நினைத்துவிட்டார்கள் போல
கருத்துக்கு மிக்க நன்றி பாலாஜி.

வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Tவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Hவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Iவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Rவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Aவைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக