புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
71 Posts - 53%
heezulia
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10கம்பரின் கற்பனைக் கண்  Poll_m10கம்பரின் கற்பனைக் கண்  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பரின் கற்பனைக் கண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 6 Mar 2023 - 12:49

[You must be registered and logged in to see this image.]

இனிய கவிதைக்குச் சிறந்த கருத்தும் தகுந்த உணர்ச்சியும் ஏற்ற சொல்லும் அழகிய கற்பனையும் நல்ல உறுப்புகள். இவற்றுள் கவிஞனுடைய மேதைமையைக் காட்டுவது கற்பனைத் திறமே ஆகும். அஃது உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற அணிகளின் வாயிலாக வெளிப்படுகிறது.

அணியிலாக் கவிதை பணியிலா (அணிகலன் இல்லாத) வனிதை என்பது முதுமொழி. கற்பனை என்றால் என்ன? ஒரு பொருளில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது. அஃதாவது, ஒரு பொருளில் சாதாரண மனிதனுக்குப் புலப்படாத வேறொரு பொருளைக் கவிஞன் கண்டு காட்டுவதாகும். கவிஞனின் கற்பனைக் கண் இந்தப் பணியைச் செய்கிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கற்பனை தனித்தன்மையோடு திகழ்கிறது. அவர் ஓடுகின்ற ஆற்றில் ஒரு பொருளை மட்டும் காண்பவர் அல்லர்; பல பொருள்களைக் காண்பவர். "சரயு நதி மலையின் தலைப்பகுதியையும், நடுவிடத்தையும், அடிப்பகுதியையும் தழுவிக்கொண்டு நிலையாக ஓரிடத்தில் நில்லாது அங்குள்ள எல்லாப் பொருள்களையும் கவர்ந்து வருவதனால் விலைமகளிர் போன்றிருந்தது;

மணி, பொன், மயிற்பீலி, யானைத் தந்தம் அகில், சந்தனம் போன்றவற்றைச் சுமந்துகொண்டு வருவதால் வணிகரை ஒத்திருந்தது; ஈக்களும் வண்டுகளும் மொய்க்க எல்லையை மீறிக்கொண்டு எழுச்சியோடு தேக்கெறிந்து கொண்டு (தடையை மீறிக்கொண்டு ஏப்பமிட்டுக்கொண்டு) பெருக்கெடுத்து வருவதால் கள் குடித்தவரைப் போன்று தோன்றுகிறது;

மலையைத் தூக்கிக்கொண்டு மரங்களை முரித்துக்கொண்டு, இலை முதலிய பொருள்களை எத்திக்கொண்டு இருப்பதால் இராமன் கடலைக் கடந்து இலங்கையை அடைவதற்கு அணைகட்ட முற்பட்ட குரங்குக்கூட்டம் போலக் காட்சியளிக்கிறது' என்கிறார்.

ஒரே ஆறு! அதில் விலைமகளிர் வணிகர், கள்குடியர் குரங்குச் சேனை என்று எத்தனை காட்சிகள்!

மலைஎடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலைமுதற் பொருள் யாவையும் ஏந்தலான்
அலைகடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவிதீத்தம் அந் நீத்தமே
(பாடல்: 20)


என்று காப்பியத்தில் பின்னே நிகழும் நிகழ்ச்சியையே ஆற்றில் காண்பது புதுமையாக உள்ளது. இந்த உவமையின் வழியாகக் கம்பர் எல்லோருக்கும் தெரிந்த இராமன் திருக்கதையையே தாம் காப்பியமாக்குவதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார். ஏனெனில் தெரிந்த ஒன்றை எடுத்துக் கூறித் தெரியாததை விளக்குவதுதானே உவமை?

ஒன்றில் மற்றொன்றைக் காண்பது கற்பனை; ஒன்றுக்கொன்று ஒவ்வாத பொருள்களையும் ஓரிடத்தில் காண்பது சிறந்த கற்பனை. அதிலும் நேர்மாறாக இருப்பனவறைக் காண்பது வியப்பளிக்கும் மிகச் சிறந்த கற்பனை.

துறவியரும், விலைமகளிரும் எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள். காமச்சேறு கடந்தவர் துறவிய; காமக்கடை நடத்துபவர் விலைமகளிர். முரண்பட்ட இவர்களிடையே ஓர் ஒற்றுமையைக் காண்கிறார் கம்பர்.

இராமலக்குவரை அழைத்துக்கொண்டு விசுவாமித்திரன் சித்தாச்சிரமம் நோக்கி நடந்தான். வழியில் கடத்தற்கரிய பாலைநிலம். அஃது ஈரப்பசை அற்று வறண்டு கிடந்தது. அதனைப் பாடும்போது அவ்வொற்றுமையைப் பதிவிட்டுக் கற்போரை வியப்பில் ஆழ்த்துகிறார் கம்பர்.

இருவினையை அழித்து, காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மதில்களைத் தாண்டி, வீடுபேறு என்னும் உயர்பதம் நோக்கிச் செல்லும் துறவியரின் உள்ளத்தைப் போன்றும், பொருளுக்குத் தங்களை விற்கும் பொதுமகளிரின் மனம் போன்றும் ஈரம் இல்லாமல் இருந்தது என்கிறார்.

துறவிக்கு ஈரமின்மை உலகப்பற்றின்மை; விலைமகளிருக்கு ஈரமின்மை தம்மை நாடி வருவோரிடம் அன்பு இன்மை; பாலைக்கு ஈரமின்மை காய்ந்து கிடக்கும் தன்மை.

தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன்விலைப்
பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே
(353)

இப்போக்கின் உச்சத்தை மற்றோர் இடத்தில் காண முடிகிறது. காப்பியத்தில் கதிரவன் தோற்ற மறைவுகளைப் பாட வேண்டும் என்பது தண்டி இலக்கணம். அதனை நிறைவு செய்யும் வகையிலும் நாளின் கணக்கைக் காட்டும் வகையிலும் ஞாயிற்றைக் குறித்துப் பாடியுள்ளார்

கம்பர். அவற்றுள் ஓர் இடத்தில் இருசமயக் கடவுளரைக் காண்கிறார்.

இருட்கனி இராமன் மிதிலைத் தெருவில் நடந்து சென்ற போது, கன்னிமாடத்தில் நின்ற பெண்கனிச் சீதையைக் கண்டு நெஞ்சைப் பறிக்கொடுத்தான். அன்று இரவெல்லாம் உறக்கமின்றி அவள் நினைவாகவே இருந்தான். இதைக் காண்கிறார் கம்பர்.

"கடல் என்னும் மத்தளம் ஒலிக்கிறது;
மறைகள் ஓதப்படுகின்றன;
கின்னரர்கள் கீதம் இசைக்கிறார்கள்;
மக்கள் வழிபாடு செய்கிறார்கள்;
தேவர்களும் முனிவர்களும் அந்தணர்களும் கைகூப்பி நிற்கிறார்கள்;
வானம் என்னும் அரங்கத்தில் ஒளி வீசும் கதிரவன் என்னும் சிவபிரான் கூத்தாடுகிறான்;
அவன் பொற்சடை விரிந்தது போல் கதிர்கள் எங்கும் பரவுகின்றன'


என்கிறார்.

எண்ணரிய மறையினொடு  கின்னரர்கள்
இசைபாட, உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
கரங்குவிப்ப வேலை என்னும்
மண்ணுமணி முழவதிர வானரங்கில்
நடம்புரிவான் இரவி யான
கண்ணுதல் வானவன் கனகச் சடைவிரித்தால்
எனவிரிந்த கதிர்கள் எல்லாம்  (632)

இந்தக் கற்பனையைக் காணும்போது சேக்கிழாரைப் போன்ற பழுத்த சிவனடி போற்றும் அருளாளர் பாடியது போலத் தோன்றுகிறது. இதனைப் பெரிய புராணத்தில் சூரியன் தோற்றத்தைப் பற்றிப் பாடும் பகுதியில் செருகிவிட்டால் யாராலும் இது கம்பராமாயணப் பாடல் என்று சொல்ல முடியாது. இப்படிச் சிவசூரியனைத் தரிசிப்பித்த #கம்பர் அடுத்துச் சூரிய நாராயணனைக் காட்டி மகிழ்கிறார்.

#இராமன் திருமணத்தைக் காணப் புறப்பட்ட அயோத்தி மக்கள், முதல் நாள் இரவு சந்திரசைலம் என்னும் மலையில் தங்கியுள்ளனர். பொழுது விடிந்ததும் மக்கள் சோணையாற்றை நோக்கிச் சென்றனர். செங்கதிரின் தோற்றம் சிங்கப்பிரான் தோற்றம்போல் அமைகிறது. "இருட்டு நிற இரணியன்; அவனுக்கு ஒளிரும் விண்மீன்களாகிய பற்கள்; அவன்மீது சீற்றங்கொண்டு உதயமலை என்னும் தூணிலிருந்து கொடிய கதிர்கள் ஆகிய ஆயிரம் கைகளை ஓங்கிக்கொண்டு நரசிங்கம் தோன்றியது போல விளங்கும் கதிரவன் தோன்றினான்' என்கிறார்.

மீனுடை எயிற்றுக் கங்குல்
கனகனை வெகுண்டு வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும்
ஆயிரம் கரங்கள் ஒச்சித்
தானுடை உதயம்  என்னும்
தமனியத் தறியுள்  நின்று
மானுட மடங்கல்  என்னத்
தோன்றினன் வயங்கு வெய்யோன்  (890)

இப்படிச் சமயம் கடந்து முருகன், பிரமன் போன்றவர்களை உவமையாகக் காட்டும் போக்குத் திருத்தக்க தேவர் போன்றோரிடம் காணப்படுகிறது. ஆனால், கம்பரிடம் காணப்படும் முற்றும் வேறுபட்ட இரு பொருள்களை ஓரிடத்தில் காணும் போக்கு வியப்புக்குரியது.

[You must be registered and logged in to see this link.] தோற்றத்தில் ஆடல்வல்லானையும் ஆளரியையும் தரிசித்துக் கற்பாரையும் தரிசிக்கச் செய்யும் கம்பரின் கற்பனைத் திறம் போற்றுதற்குரியது. இது போன்ற இடங்கள், சும்பர் சமயக் காழ்ப்பு இல்லாமல் திருமாலைத் துதிப்பவராகவும் சிவனை மதிப்பவராகவும் இருந்தார் என்பதற்குச் சான்றுகள் ஆகும்.

முனைவர் தெ. ஞானசுந்தரம்  


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 6 Mar 2023 - 13:07

கம்பரின் கருஞாயிறும் அஞ்சன ஞாயிறும்


உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிய இலக்கணங்கள் தொல்காப்பியத்தில் விரிவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் மொழிநடையில் சொற்கள் அடைமொழிகளாக அமைதல் பற்றிய கருத்தாடலில் பண்புச் சொல் அடைமொழி பற்றியதை மட்டும் கீழ்க்கண்ட [You must be registered and logged in to see this link.] கூறுகிறது.

இனச்சுட் டில்லாப்
பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே
(தொல். சொல். கிள.18)

இதில் பண்பு அடைசொல் இனம் சுட்டாததாகச் செய்யுளில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இனம் சுட்டாதது என்றால் வேறொரு பொருள் இல்லாத ஒரே ஒரு பொருளுக்குரிய அடைமொழியாகும். எடுத்துக்காட்டாகச் "செஞ்ஞாயிறு' என்றால் சிவப்பு நிறத்தைத் தவிர வேறொரு சூரியன் இல்லாததால் அவ்வாறாகக் கூறுவது செய்யுள் நடை என்பது தொல்காப்பியர் கருத்து.

இந்த இலக்கணத்திற்கு மாறுபட்டவாறு கம்பர் இரண்டு செய்யுளில் இராமனைக் #கருஞாயிறு என்றும் #அஞ்சன_ஞாயிறு என்றும் கூறுகிறார். இங்ஙனம் கூறுவது இலக்கண மீறலா? அல்லது சறுக்கலா? என எண்ண வேண்டிள்ளது.

கருஞாயிறு போல்பவர் காலொடு போய்
வருநாள் அயலே வருவாய் மனனே !
பெருநாள் உடனே பிரியா துழல்வாய்
ஒருநாள் தரியா தொழிவார் உளரோ?

இப்பாடல் பாலகாண்டக் கடிமணப் படலப்பாடலாகும் . மிதிலையில் இராமன் வில்லை முறித்ததும் அவனுக்கும் சீதைக்குமான திருமணம், நாளை நடப்பதாக முடிவானது. இந்நிலையில் காதல் வேதனையால் [You must be registered and logged in to see this link.] தன் மனத்தோடு பேசுகிறாள்.

"கருநிறமுடைய சூரியனைப் போன்ற இராமன் போனபோதே அவனுடன் போய்விட்ட மனமே! நீ நாளை மணக்க வரும்போதுதான் அவனுடன் வருவாயோ? பிறந்த நாள் தொட்டுப் பிரியாதிருந்த நீ, திருமணம் என்றதும் அவனோடே என்னை விட்டுவிட்டுச் சென்றாயோ? ஒருநாள் கூடத் திருமணத்திற்குப் பிறகு பிரியாதிருக்கப் போகும் என்னை விட மனம் பொறுக்காமல் அவனுடன் பிரியாதிருக்கச் சென்ற உன்போல் ஒருவரையும் பார்த்ததில்லை' எனக் காதல் பிரேமையால் புலம்பினாள்.

வில் முறித்தபோது கண்ணில் தென்பட்ட இராமன், திருமணத்திற்கு வரப்போகும் நாளை வரை அவன் கண்ணுக்கு மறைந்தவனாகவே இருப்பதால் அவனைக் காணாதிருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் வெறுப்பில் "கருஞாயிறு' என்றாள் போலும்! ஏனெனில் வில் முறித்தபோது கண்ணில் தெரிந்தவன் மறைந்து விட்டதால் உலகியலின்படிப் பகலில் ஒளியாகத் தோன்றும் சூரியன் இருளில் மூழ்கியதால் கருப்பாகி விட்டதாகக் கற்பித்துக் கொள்வதால் கருஞாயிறு என்றாள் போலும்!

மேலும் ஒன்றைக் கருதலாம். இராமன் சூரிய குலத்தவன் என்பதாலும் அவனது நிறம் கருமை என்பதாலும் இவ்விரண்டையும் பொருத்தமுற நினைத்த நினைப்பில் கருஞாயிறு என்றாளோ? எனலாம்!

இவை எல்லாவற்றையும் கூட்டி நினைக்குமாறு கம்பர் கதாபாத்திர மனநினைப்பில் உளவியல் படிக் கதாபாத்திரக் கூற்றாகக் கருஞாயிறை உதிக்க வைத்ததால் வழுவில்லா வகையில் இலக்கண விழுமியத்தை நிலை நாட்டினார் எனலாம். மேலும், இது "ஞானத்தில் தன்பேச்சு, பிரேமையில் பெண் பேச்சு' எனும் ஆழ்வார் சாயலில் கம்பரின் கவிநயம் ஆகும். நாயக } நாயகி பாவனையில் ஆழ்வார் பாசுரத்திற்கான மதிப்பீட்டையே கம்பர் இப்படிப் பதிவு செய்தார் எனலாம்.

அடுத்துக் குகப் படலத்தில் கம்பர் கவிக்கூற்றாக இராமனை அஞ்சன ஞாயிறன்ன ஐயன் என்றது பற்றி உணரவேண்டும்.

செஞ்செவே சேற்றில் தோன்றும்
தாமரை, தேரில் தோன்றும்
செஞ்சுடர்ச் செல்வன் மேனி
நோக்கிய விரிந்த, வேறோர்
அஞ்சன ஞாயி றன்ன
ஐயனை நோக்கி செய்ய
வஞ்சிவாள் வதனம் என்னும்
தாமரை மலர்ந்த தன்றே!

குகனைச் சந்தித்த இராமன் அவனது இருப்பிடத்தில் இரவு தங்கி காலையில் புறப்படுகிறான். காலையில் சூரியனைப் பார்த்ததும் தாமரைகள் மலர்ந்தன. அவ்வாறே [You must be registered and logged in to see this link.] போன்ற இலக்குமியாம் சீதையின் ஒளிபொருந்திய முகமாகிய தாமரை, கருநிற ஞாயிறான இராமனைப் பார்த்து மலர்ந்த தாம் என்று சீதை கண்விழித்து எழுந்தாள் என்பதைக் கம்பர் கற்பனையாகக் கூறினார், இது [You must be registered and logged in to see this link.] செய்யுள்.

செஞ்ஞாயிறு எனக் கூறவேண்டியவர் அஞ்சன ஞாயிறு (அஞ்சனம் கருமை நிறம்) என்றது அணி இலக்கணப்படி இல்பொருள் உவமையாகும். இல்பொருள் என்பது இல்லாதபொருள் என்ற கருத்துக் கூறுங்கால் இராமன் இல்லாதவன் இல்லை. இருப்பவன் என்பதால் அச்சொல்லுக்கான (இல்பொருள்) பொருள் வேறொன்றாக இருத்தலாய் உணரலாம்.

இராமனுக்கு இணையாக வேறொருவர் இல்லாத நிலையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் இல்பொருள் அணி இலக்கணப் பொருள் நுட்பத்தில் கவிக்கூற்றாக "அஞ்சன ஞாயிறு' எனப்பட்டது. ஏனெனில் இராமன், "ஓவியத்தால் எழுத ஒண்ணா உருவத்தன்' எனக் கம்பரே வாலி மூலம் இராமனின் இல் பொருள் அழகை இருப்பதாக உணர வைத்தார்.

மேலும், இந்த இல்லாமையை வைத்தே முழு அழகை [You must be registered and logged in to see this link.] மிதிலைக்காட்சியில் பதிவு செய்துள்ளார். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்ற போது அவர்கள் யார் எனக் கூறும் கம்பர் "மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்' என இடையில்லாத சீதையும் குற்றமே இல்லாத குறையையுடைய இராமனுமாகிய இருவர் என்பதால் இல்லாமையைக் கற்பனையில் கண்ணேறாக கூறி அவர்களின் முழுமையை நினைவு கூர்ந்தது கம்பரின் இல்பொருள் அணி உத்தியின் உச்சம் ஆகும். ஆக இல்பொருள் என்றதன்படி அஞ்சன ஞாயிறு என்ற கவிக்கூற்று கவிகூறுலகம் போற்றும் புவிபுகழ் கூற்றாக உள்ளது எனலாம்!



T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக