புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
67 Posts - 64%
heezulia
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
3 Posts - 3%
cordiac
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 2%
prajai
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 2%
Barushree
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
194 Posts - 57%
heezulia
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
12 Posts - 4%
prajai
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
4 Posts - 1%
cordiac
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 1%
Barushree
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் கேளுங்கள்-


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Apr 21, 2010 12:22 pm

[You must be registered and logged in to see this link.]
மெலிந்த தேகம்.. மாறாத சோகம்!
‘‘எனக்கு வயது[You must be registered and logged in to see this link.] 43. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பப் பை நீக்கப்பட்டது. கேன்சர் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று டாக்டர் சொன்னாலும், குழப்பமாக உள்ளது. வெள்ளைபடுவது, வலது மார்பில் பால் போல் திரவம் வருவது என்ற பிரச்னைகளால் பயந்துகிடக்கிறேன். எனக்கு தெளிவு தாருங்கள், டாக்டர்.’’
டாக்டர் ஆர்.ஆர்.ராய் (கேன்சர் சிறப்பு நிபுணர், சென்னை):- ‘‘கர்ப்பப் பையை நீக்கியவர்களுக்கெல்லாம் கேன்சர் வரும் என்று பயப்படத் தேவை இல்லை. கர்ப்பப் பை நீக்கும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களைப் பொதுவாக மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு தடவை செக்கப்புக்கு வரச் சொல்வார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மருத்துவரிடம் தெளிவாகக் கூறி விளக்கம் பெறுங்கள்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது எல்லாமே நார்மலாக உள்ளது. பயப்படவும், குழம்பவும் அவசியமில்லை. வெள்ளைப்படுதல், மார்பகத்தில் திரவம் வருதல் போன்றவை இன்ஃபெக்ஷனால்கூட இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபயாடிக் மாத்திரை கள் எடுக்கலாம். கர்ப்பப் பை நீக்கியதும் சில பெண்களுக்கு இதுபோல் வருவதுண்டு. கவலைப் படவேண்டாம். நல்ல உணவு, ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை | இவை போதும், உங்களைத் தெளிவாக்க!’’
——————————————————————————————————–
‘‘என் வயது 53. இரண்டு ஆண்டுகளாக யானைக்கால் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளேன். இந்த நோய்
பூரணமாகக் குணமாக எந்த ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்? இதற்கான இலவச மருத்துவமனை
எங்காவது உள்ளதா? தற்போது இடது காலில் உள்ள நோய், வலது காலுக்கும் பரவுமா? மேலும்
பரவாமல் தடுக்க என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’
டாக்டர் ஏ.டி.செல்வகுமார் (இணை இயக்குநர், நோய்பரப்பி களால் உண்டாகும் நோய் தடுப்புப் பிரிவு, சென்னை): ‘‘பைலேரியா என்னும் யானைக்கால் நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க முடியாது. சிகிச்சை மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்; மேலும் பரவாமல் தடுக்கலாம். சுடுநீர் தெரபி, காற்றழுத்த தெரபி, மின்காந்த தெரபி போன்ற சிகிச்சை முறைகள் வீக்கம் அதிகமாகாமல் தடுக்கும்.நோயால் பாதிக்கப்பட்ட காலை நீங்கள் சுத்தமாக கழுவிப் பராமரித்தல் அவசியம். சாதாரண சோப்பு அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு தினந்தோறும் கழுவ வேண்டும். விரல் இடுக்குகள் மற்றும் தோலின் மடிப்பு பகுதிகளில் ஈரப்பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் புண் ஏற்பட்டால் நைட்ரோ ஃப்யூரோசான் களிம்பும், விரல் இடுக்கில் வரும் சேத்துப் புண்ணுக்கு விட்ஃபீல்டு பசையையும் தடவவேண்டும். கால், கை நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சொத்தைப்பல் இருந்தால் அகற்ற வேண்டும். கால் வீக்கம் இருந்தால், தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தவறாது எலாஸ்டிக் பேண்டேஜ் கட்டவேண்டும். தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும் காலை சற்று உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சியும் மசாஜும் அவசியம்.உணவில் கொழுப்பையும் உப்பையும் குறைத்து, கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொசுவலை, கொசுவத்தி, கொசு தடுப்பு களிம்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை இரவில் உபயோகித்து, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும். இந்நோய் உங்களிடமிருந்து பிறருக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் குடும்பத்தினர் அனைவரும் டி.இ.சி என்ற மாத்திரை எடுப்பது அவசியம். இந்த மாத்திரை, யானைக்கால் நோயை உண்டாக்கும் லார்வாக்களை அழிக்கும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற உறுப்புகளுக்கு நோய் பரவாமலும் தடுக்கும்.யானைக்கால் நோய் பரம்பரை வியாதி அல்ல. க்யூலக்ஸ் என்ற கொசுக்களால் ஏற்படுவது. இந்நோய் வந்த மனிதனின் ரத்தத்தில் மைக்ரோ பைலேரியா என்னும் லார்வாக்கள் (குட்டிப் புழுக்கள்) கலந்துள்ளன. அந்த மனிதனை கொசு கடிக்கும்போது, ரத்தத்தோடு சேர்ந்து இந்தக் குட்டி புழுக்களும் கொசுவின் உடலுக்குள் சென்று வளர்கின் றன. பிறகு, இன்னொரு
மனிதனை அந்தக் கொசு கடிக்கும்போது அவனது உடலுக்குள் லார்வாக்கள் செலுத்தப்படு கின்றன. அவை வளர்ந்து, ரத்த நாளங்களில் கலந்து நிணநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் கால் வீக்கம், விரைவீக்கம், பெண்களுக்கு மார்பகம், பிறப்புறுப்பு போன்றவை பாதிக்கப்படு கின்றன. யானைக்கால் நோய்க்கான சிகிச்சை மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் அரசு பொது மருத்துவமனை களில் செயல்படுகின்றன. இங்கே டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன..’’
———————————————————————————————————-

‘‘எனது பெண்
குழந்தைக்கு இப்போது 10 மாதம். 6.9 கிலோ எடை தான் இருக்கிறாள். இந்த வயதுக்கு இது
குறைவான எடை என்று தோன்றுகிறது. எவ்வளவு போராடினாலும் சிறிதளவுதான் சாப்பிடுகிறாள்.
அவளது இந்த ஒல்லி உடல்வாகு வாழ்நாள் முழுதும் தொடருமா (என் கணவரும் மாமியாரும்
ஒல்லி உடல்வாகு உடையவர்கள்)? எந்த உணவை, எந்த அளவு கொடுத்தால் அவள் புஷ்டியாக
ஆவாள்?’’
டாக்டர் ஜே. விஸ்வநாத்(குழந்தை மருத்துவ நிபுணர், சென்னை): ‘‘பொதுவாக 10 மாதங்களில் இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 7 கிலோதான். எனவே, எடை குறைவாக இருப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். பிறக்கும்போது குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும். இது ஆறு மாதங்களில் இரு மடங்காகும். ஒரு வருடத்தில் மூன்றரை மடங்காகும். இரு வருடத்தில் 4 மடங்காகும். பிறக்கும்போது சராசரி 51?செ.மீ. ஆக உள்ள குழந்தையின் உயரம், ஒரு வருடத்தில் 77? செ.மீ. ஆகிறது. அதேபோல், பிறக்கும்போது தலைச் சுற்றளவு சராசரியாக 35?செ.மீ. இருக்கும். ஓராண்டில் 45? செ.மீ. வரை வரும். இந்த அளவுகளுடன் ஒப்பிட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளது.மேலும், பிறந்தபோது ஒல்லியாக இருக்கும் குழந்தை எப்போதுமே அப்படி இருக்கும் என்பதில்லை. அப்பாவோ, அம்மாவோ மெலிந்த தேகம் கொண்டிருந்தால் குழந்தையும் அப்படி இருக்கும் என்று நினைப்பதும் தவறு. உங்கள் குழந்தைக்கு புரோட்டீன், கார்போஹைட் ரேட், கொழுப்பு, தாதுப்பொருள் கலந்த சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். அப்படியும் மெலிந்து கொண்டே போனால், குழந்தைநல நிபுணரின் ஆலோசனையுடன் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை இருந்தால் சிகிச்சை மேற்கொள்ளவும். 9 மாதங்கள் ஆனதுமே காலையில் இரண்டு சிறிய இட்லிகளும், மதியம் மற்றும் மாலையில் சாதம், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றோடு நெய் கலந்தும் தரவேண்டும். இவற்றுடன் தாய்ப் பால் அல்லது 500 மி.லி. பிற பாலும் தரவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை, மீன் கொடுக்க லாம்.சிறிது சிறிதாக சாதத்தின் அளவு அதிகரிக்கப்படவேண்டும். பருப்பு சோறு இருவேளை தரலாம். தாய்ப்பால் அல்லது வேறு பால் அருந்தும் குழந்தைக்கு டானிக்குகள் தேவை இல்லை..’’
————————————————————————————————————–

‘‘எனக்கு வயது 50. மூன்று குழந்தைகள். எல்லாமே சுகப்பிரசவம். கடந்த சில ஆண்டுகளாக, இருமினாலும், தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் வெளியேறிவிடுகிறது. சிலசமயம், சிறுநீர் கழிக்க டாய்லெட் செல்வதற்குள் போய்விடுகிறது. வயதானால் இப்படி ஆகுமா? இதைப்பற்றி எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டே இதுநாள் வரை இருந்துவிட்டேன். என் பிரச்னைக்கு ‘அ.வி’ ஒரு வழி சொல்லுமா?’’
டாக்டர் கார்த்திக் குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட் மற்றும் பெல்விக் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜன்): ‘‘சிறுநீர் அடக்க முடியாமல் போவது மற்றும் உங்களுக்கு இருக்கும் அடியிறக்கம் போன்றவை வயதானதால் மட்டும் வரும் பிரச்னைகள் இல்லை. இரண்டு, மூன்று குழந்தை பிறந்த பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வரும் பிரச்னைகள் இவை.பிறப்பு உறுப்பு வழியாக அடிக்கடி பிரசவம் (நார்மல் டெலிவரி) ஆகும்போது, அப்பகுதியின் தசைகளும் நரம்புகளும் பாதிக்கப்படுவதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம். நார்மல் டெலிவரியான பெண்களில், 40 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்னை உண்டு. உங்களுக்கு முதலில் ‘யூரின் – கல்ச்சர் டெஸ்ட்’ செய்ய வேண்டும். ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதில் தெரிந்துவிடும். சிறுநீரகத்தில் கல் எதுவும் இருக்கிறதா என்று அறிய ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கும் செய்துகொள்ளலாம். இவை முதல்கட்ட பரிசோதனைகள். பிறகுதான் உங்கள் பிரச்னைக்கு உரிய பிரத்யேக டெஸ்டான ‘யூரோடைனமிக்ஸ்’ என்ற பரிசோதனை செய்யவேண்டும். என்ன வகையான சிகிச்சை தேவை என்பதை அறிய இந்தப் பரிசோதனை உதவும்.அவசரமாக சிறுநீர் போகவேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளிலேயே குணப்படுத்தி விடலாம். அடியிறக்கம் இருப்பதால் சிரித்தாலும் தும்மினாலும் சிறுநீர் வந்துவிடும் பிரச்னைக்கு, ஸ்லிங் ஆபரேஷன் என்று ஒரு அறுவைசிகிச்சை செய்யலாம்..’’
—————————————————————————————————————–

‘நான்கைந்து மாதங்களுக்கு முன் என் கணவர் திடீரென, தனக்கு மயக்கமாக வருவதாகவும், இரு கண்களிலும் பார்வை தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு, காலையில் எழுந்ததும் மயக்கம் வருகிறது என்றார். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை பார்த்தது,
தூக்கமின்மை, நேரத்துக்கு சாப்பிடாதது ஆகியவை காரணங்கள் என டாக்டர் சொன்னார். அவர் வயது 37. அவருக்கு வந்திருப்பது குறைவான ரத்த அழுத்த நோயா? அப்படி இருந்தால் கண்பார்வை மங்குமா?’’
டாக்டர் தேவதாஸ் (பொது மருத்துவ நிபுணர், திருச்சி):
‘‘சாதாரணமாக நல்ல உடல்நலத்துடன் இருப்பவர் களுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் வரவே வராது. அனீமியா போன்ற அதிக ரத்தம் விரயம் ஆகும் குறை பாடு உள்ளவர்களுக்கோ, விபத்தின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கோ மற்றும் இதயத் துடிப்பு அதிகமாகத் துடிப்பவர்களுக்கோ மட்டும்தான் இது ஏற்படும்.இதனால் உடலின் வலு முழுவதும் குறைந்து, உடம்பே ஒருவித குளிர்நிலைக்கு வரலாம். உங்கள் கணவருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இல்லாததால், அவருக்கு குறைந்த அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் கண்கள் பாதிக்கப்பட்டதற்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பார்வை மங்குவதை அப்படியே விட்டுவிடாமல், தகுந்த கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். எதற்கும் கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது..’’

[You must be registered and logged in to see this link.]


avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sun May 23, 2010 7:24 pm

[You must be registered and logged in to see this link.]

‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா?’

“தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று
சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவுபடுத்துங்களேன்…”


[You must be registered and logged in to see this link.]

“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
உதவும்.


[You must be registered and logged in to see this link.]இரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’
பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.

வாரங்களுக்கிடையே (நாலரை மாதங்கள் – ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும்
முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும்.


கருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் (உங்கள் மருமகள், இந்த வகையில் இருக்கலாம்). ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.


ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை. எனினும், ஸ்கேன் பரிசோதனையில் சில கவனக்குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களது டாக்டரின் பரிந்துரை அன்றி நீங்களாக ஸ்கேன் பரிசோதனைக்கு முயலக்கூடாது. அல்ட்ரா சவுண்ட், சி.டி., எம்.ஆர்.ஐ., நியூக்ளியர் என பலவகையான ஸ்கேன்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மட்டுமே
கர்ப்பவதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட்டிலேயே நுணுக்கமாக மேற்கொள்ளப்படும் ‘டாப்ளர்’ பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை கர்ப்பவதிகள் தவிர்க்க வேண்டியவையாகும்.


கர்ப்பிணி பெண்ணுக்கு… தலைவலி, வலிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் கோளாறு, வயிற்றில் கல், எலும்பு பிரச்னை என வேறுவிதமான கோளாறுகள் இருந்து, அவற்றுக்காக பலவகைப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், கர்ப்பத்தை பாதிக்காத வகையில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளும் பொருட்டு கர்ப்பம் பற்றிய எல்லா தகவல்களையும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிப்பது நல்லது. ஒருவேளை, சம்பந்தப்பட்டவர் உடலில் உலோகத்துண்டுகள் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருப்பின், அது குறித்தான விவரங்களையும் சொல்லிவிடவேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் படுகவனமாக இருப்பது அவசியம்.”


[You must be registered and logged in to see this link.]

“எட்டு வயதாகும் என் மகளுக்கு சிறு வயது முதலே பிங்க் நிறம் என்றால் உயிர். தான் உடுத்தும் உடை, விளையாடும் பொருட்கள், சுற்றுப்புறம் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருந்தால் அவள் திருப்தியடைந்ததால், நாங்களும் அதை ஊக்குவித்தோம். ஆனால், அவளின் இந்த ஆசை வளர்ந்து இப்போது அவள் ‘பிங்க் மோகம்’ என்ற நிலையில் இருக்கிறாள். உதாரணத்துக்கு, பிங்க் நிற ஆடை அணிந்தவர்களையே நண்பர்களாக
தேர்ந்தெடுக்கிறாள். அவள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் அனைவருமே பிங்க் நிறத்தில் உடுத்த வேண்டும் என்பதுடன், சுவர் வண்ணம், வீட்டுப் பொருட்கள் என அனைத்துமே பிங்க்-ஆக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாள். இந்த பிங்க் மாயையில் இருந்து அவளை எப்படி மீட்பது?


[You must be registered and logged in to see this link.]நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது

[You must be registered and logged in to see this link.]

குழந்தையின் சந்தோஷத்துக்காக இதுவரை பிங்க் நிறத்தை ஊக்குவித்தது போதும். இனி, அந்த வலையிலிருந்து அவள் மீள்வதற்கான முயற்சிகளை எடுங்கள். குழந்தையுடன் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உரிய கவுன்சிலிங் கொடுப்பார். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து சிட்டிங்குகள் தேவைப்படும். குழந்தைக்கு மாத்திரைகள் இன்றி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு, அதன்
பிங்க் மோகத்தை படிப்படியாக குறைத்து, குணப்படுத்திவிடலாம். இரண்டு அல்லது மூன்று
மாதத்தில் குழந்தை பிங்க் நிறத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவாள்.”


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun May 23, 2010 8:22 pm

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sun Jun 27, 2010 11:17 pm

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]ள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, தலையை பாதிக்கும்
'சோரியாசிஸ்' வகையை தவறுதலாக 'பொடுகு' என்று சுயமருத்துவம் பார்த்துக்
கொண்
[You must be registered and logged in to see this link.]னால், அது மிக அதிகமாக இருந்தால் 'சோரியாஸ்' பாதிப்பு என அடையாளம் கொள்ளலாம். பரம்பரை, சுற்றுச்சூழல் போன்றவைதான் சோரியாசிசுக்கான பொதுவான காரணிகள். ரத்த அழுத்தம், மலேரியா, மனநல சிகிச்சை போன்றவற்றுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் அதுஏற்படலாம். குறிப்பாக டீன்-ஏஜில் உள்ளவர்களுக்கு மன அழுத்தமும் ஒரு
காரணமாக இருக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]

உங்கள் மகனின் பிரச்னை பொடுகுதான் என மருத்துவரால் அடையாளம் காணப்பட்டால், அதை நிவர்த்திக்கும் எளிய மருந்துகள் இருக்கின்றன.
குறிப்பாக, பருவ வயதினருக்கு எண்ணெய் சுரப்பிகள் ஓவர் டைம் வேலை
செய்வதால், தலையின் மேற்பகுதியிலிருக்கும் 'ஈஸ்ட்'டுடன் இந்த எண்ணெய்
சுரப்புகள் சேர்ந்து, பொடுகைத் தோற்றுவிக்கின்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
"நாற்பது வயதாகும் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. ஆனால், கட்டுக்குள்தான் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால் ஆடுசதையில் நரம்புகள் முடிச்சு முடிச்சாக தோன்றி பயமுறுத்துகின்றன. ஆரம்பத்தில் வலி ஏதும் இல்லாது பார்வைக்கு மட்டுமே உறுத்தலாக தெரிந்த இந்த
முடிச்சுகள், இப்போது லேசான விறுவிறு வலியுடன் தென்படுகின்றன.
டெக்ஸ்டைல்ஸ் பணிச்சூழலில் நான் நின்றபடியே இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த முடிச்சுகள் ஆபத்தானவையா... மரபு சார்ந்தவையா... இவற்றிலிருந்து குணம் பெறுவது எப்படி?"


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை மற்றும் வேலைச்சூழல்தான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்ப்பவர்களுக்கும், படுத்தபடுக்கையாக இருப்பவர்களுக்கும், 'ஒபிசிட்டி' எனப்படும் அதீத உடல்பருமன் உள்ளவர்களுக்கும், வயிற்றில் ஏதேனும் கட்டி இருப்பவர்களுக்கும்,
கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரத்தநாள முடிச்சுகள் உருவாகக்கூடும்.


இந்த முடிச்சுகள் கண்ணுக்குத் தெரியாத ஆரம்ப நிலையிலேயே காலில் சற்று பிடித்து இழுப்பது போன்ற அறிகுறிகளை காட்டும். முடிச்சுகள் புலனாகும்போது, தோலின் தன்மையும் நிறமும் மாறும். நாளாக, அரிப்பும் ரணமும் வரலாம். மருத்துவர் 'டாப்ளர்' ஸ்கேன் மூலம் உங்களது பாதிப்பின் தீவிரத்தை அடையாளம் காண்பார். கட்டிகள் தொடர்பான ஐயத்துக்கு வயிற்றையும் ஸ்கேன் பார்த்துவிடுவது நல்லது. பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், 'க்ரீப்
பாண்டேஜை' மூன்று மாதத்துக்கு அணியும்படி அறிவுறுத்தப்படுவார்கள். இரவு
படுக்கும்போது, கால்களை உயரமான இடத்தில் வைப்பது நல்லது. அதற்கு, தலையணைகளை பயன்படுத்தலாம்.


நாள்பட்ட தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி. ஏனெனில்... இந்த முடிச்சுகள் தோற்ற உறுத்தல் மட்டுமல்ல, காலின் திறன் மற்றும் காயம் ஏற்பட்டால் சுலபத்தில் ஆறாதது என பொது உடல்நலக்
கோளாறுகளையும் தந்துவிடும். அதிலும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு
கூடுதல் ஆபத்து. மேல்தொடையில் செய்யப்படும் சிறு ஆபரேஷன் மூலம் விடிவைப் பெற முடியும். தோற்றப் பொலிவுக்காக கால் தசையில் இருக்கும்
முடிச்சுகளையும் அகற்றிக் கொள்ளலாம்.


ரத்த நாள முடிச்சுகளுக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்ற போதும், உரிய தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இதைத் தவிர்த்துவிடலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், மிகை உடல் பருமன் வராது தற்காத்துக்கொள்வதும் அவசியம். முக்கியமாக நீண்ட நேரம் நின்றவாறான
பணிச்சூழலில் இருப்பவர்கள் அவ்வப்போது உட்கார்வதும் கால்களை மடிப்பதும்
அவசியம்
."
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Aug 04, 2010 8:17 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be
registered and logged in to see this image.]டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை:
[You must be registered and logged in to see this link.]கொப்பளம் இருந்த இடம் காய்ந்து பருமனாக இருந்தால், உடனே
டாக்டரிடம் காண்பித்து, பருக்களுக்கு அளிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
இதுபனிக்காலம் என்பதால் உலர்ந்த சருமம் இருப்பவர்களுக்கு, உதடுகள் கருத்துப் போகக்கூடும். உதட்டில் தினமும்
தேங்காய் எண்ணெய் (அ) ஆலீவ் எண்ணெயை தடவி வாருங்கள். கருமை மறைந்து ரோஜா இதழ்களாகப் புன்னகைக்கலாம்’’


[You must be registered and logged in to see this link.]இப்போது
வலப்பக்க மார்பகத்தில் கட்டி போல் உள்ளது. மாத விலக்கு ஆகும் முன்புவலிக்கிறது. வலது கை அக்குள் பகுதியிலும் வலி இருக்கிறது. விலக்கு முடிந்ததும் வலியில்லை. இது ஏன்?
இதேபோல்
வலது காதில் சீழ் வருகிறது. துர்நாற்றமடிக்கிறது. காய்ச்சல் வந்தாலும், சளி பிடித்தாலும், உடலில் வலி ஏற்பட்டாலும் காதில் சீழ் வருகிறது. இதற்கு என்ன காரணம்?
[You must be registered and logged in to see this link.]
‘‘உங்கள் பிரச்னைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதலாவது பத்து வருடங்களுக்கு முன் உண்டான கர்ப்பம். பொதுவாக, கு.க. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சிலருக்கு கர்ப்பம் தரிக்கலாம்.
இது, கர்ப்பப்பைக்கு முட்டையை எடுத்துச் செல்கிற குழாயில் ஏற்படுகிற கர்ப்பம். இதுதான் பரவலாக ஏற்படுவது. ஆனால், உங்களுக்கு குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாகியிருக்கிறது. இப்படி குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாவது மிக மிக அபூர்வமானது. உங்களுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது சிறந்ததே.
இரண்டாவதாக, வலப்பக்க மார்பகத்தில் கட்டிபோல் உள்ளது என்றும் மாத விலக்கின்போது மட்டும் வலிப்பதாகவும் கூறுகிறீர்கள். ஹார்மோன் கோளாறினால் இப்படிப்பட்ட
பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இதை ‘பைரோ அடினோசிஸ்’ என்பார்கள்.
இது சாதாரணமானதுதான் என்றாலும் அக்குள் பகுதியிலும் வலியுள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், உடனடியாகப்
புற்றுநோய் சிறப்பு நிபுணரை அணுகி,‘புற்றுநோய் இருக்கிறதா?’ என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது வெறும் பரிசோதனைதான். பயப்பட வேண்டாம். எந்த வியாதியையுமே ஆரம்பகட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சையை மேற்கொள்வதுதான் சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும், கேன்சர் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.
அடுத்தது,
காதில் சீழ் வரும் விஷயம்… அநேகமாக உங்களின் நடுக் காதில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் செவிப்பறையில் துவாரம் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்போது
சீழ் வரலாம். இதற்கு ஈ.என்.டி. மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது.
உங்களுக்கு
ஏற்பட்டிருக்கிற மூன்றுமே மூன்று தனித்தனிப் பிரச்னைகள்தான். அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை’’


‘‘என் வயது 20. எனக்கு சில மாதங்களாக மாத விலக்கு பிரச்னை உள்ளது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தேதிகளில் மாத விலக்கு ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நான் விலக்காகவில்லை. எங்கள் குடும்ப டாக்டர் என்னைப் பரிசோதித்து, சில மாத்திரைகளைக்
கொடுத்து, சாப்பிடச் சொன்னார். அதன்படி நானும் சாப்பிட்டு வந்தேன்.
இப்போதெல்லாம்
மாத்திரை சாப்பிட்டால்தான் மாதவிலக்கு ஏற்படுகிறது. என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் ‘குண்டாக இருக்கிறவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை வரும். நீ குண்டுதானே’ என்கிறார்கள்.எனது எடை 75 கிலோ. நிஜமாகவே குண்டாக இருப்பதால் இது போன்ற பிரச்னை வருமா?’’

[You must be registered and logged in to see this link.]
இதற்குஉணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகமிக அவசியமானவை. எண்ணெய்ப் பதார்த்தங்கள், வறுவல் போன்றவற்றுக்கு ‘குட் பை’ சொல்லுங்கள். அரிசியால் ஆன உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது வாக் செல்ல வேண்டும். அதோடு ஏரோபிக்ஸ் போன்ற பிற உடற்பயிற்சிகளையும் முயற்சிக்கலாம். பகல் தூக்கத்தையும் அதிக நேரம் தூங்குவதையும் முதலில் நிறுத்துங்கள். இவற்றோடு மருத்துவரின் அறிவுரையுடன் உடல் எடையைக் குறைக்கிற மாத்திரைகளும்
எடுக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]இந்தப்
பிரச்னைக்கு எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மூவாயிரம் ரூபாய்வரை ஆகும்.’’


‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை.
என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு
போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன்
இல்லை.

[You must be registered and logged in to see this link.]
3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும்
சில நாட்கள் காத்திருக்கலாமா?’’

[You must be registered and logged in to see this link.]30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய
வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]ஆண்களுக்கு,உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின்
எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில
மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம்.

மற்றபடி,பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள்.
தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!
’’
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Oct 25, 2010 8:43 pm

“கர்ப்பப்பையை கலங்கடிக்கும் கட்டிகள்… கரையுமா?”

“என் மருமகளுக்கு கர்ப்பப் பையில் ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் இருப்பதாகவும், இதனால் கருவுறுதல் பதிப்புக்குள்ளாகும் என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், கர்ப்பப்பையையே அகற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த விஷயத்தில் சமயோசிதமாக நாங்கள் செய்யவேண்டியது என்ன?”

டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

“பெரியளவுக்குப் பிரச்னை தராத சாதாரண கட்டிகள், கேன்சர் போன்ற அசாதாரண கட்டிகள் என்று கட்டிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஃபைப்ராய்டு கட்டிகள், இதில் முதல் ரகத்தில் அடங்கும்.

வயது வந்த எந்தப் பெண்ணும் இந்தக் கட்டிகளுக்கு இலக்காக நேரிடலாம். அதிகப்படியான அடிவயிற்று வலி, மிகையான மாதப்போக்கு, அதிக நாட்களுக்கு மாதவிடாய் நீடிப்பது போன்றவை ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள். ஸ்கேன் மூலம் இவை உறுதிபடுத்தப்படும்.

கர்ப்பப்பையை பொறுத்தவரை பொதுவாக மூன்று இடங்களில் இந்தக் கட்டிகள் தோன்றலாம். முதலாவதாக, கர்ப்பப்பை வெளி சுவரில் தோன்றும். இவை வளரும்போது கருவுறுதலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டாவதாக, கருப்பைக்குள்ளிருக்கும் ‘எண்டோமீட்ரியம்’ (Endometrium) உறைக்கும், கருப்பை உள்சுவருக்கும் இடையே இந்தக் கட்டிகள் தோன்றும். கட்டியின் வடிவத்தைப் பொறுத்து, கருவளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும். மூன்றாவதாக, ‘எண்டோமீட்ரிய’ உறைக்குள் இவை தோன்றும். இவை, அளவில் பெரிதாகும்போது கருவளர்ச்சியை ஒரு கட்டத்துக்கு மேல் வளரவிடாமல் தடுத்து, அபார்ஷன்கூட ஏற்படலாம்.

எனவே கட்டியின் அளவு, வளர்ச்சி, கருவளர்ச்சிக்கு இவை இடைஞ்சலாக இருப்பது போன்ற எல்லா விஷயங்களையும் அலசி, அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர் முடிவு செய்வார். இந்த ஆபரேஷனும் தற்போது லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுவதால் கர்ப்பப்பைக்கோ, கருவுறுதலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. கருப்பையே தாங்காத அளவுக்கு அதிகப்படியாக இதன் வளர்ச்சி அமைந்தால் மட்டுமே கருப்பை அகற்றம் செய்யலாம். அரிதாக மட்டுமே இந்தக் கருப்பை அகற்றம் பரிசீலிக்கப்படுகிறது.

எனவே, உங்கள் மருமகளின் கர்ப்பப்பைக்கு எந்த இடையூறுமின்றி லேப்ராஸ்கோப்பி மூலம் ஃபைப்ராய்டு கட்டிகளை நீக்கி, கருவளர்ச்சிக்கான தடைகளை களையலாம்… கவலை வேண்டாம்!”
----------------------------------------------------------
“எட்டு வயதாகியும் என் மகன் குளியல் என்றாலே அழுது அழிச்சாட்டியம் செய் கிறான். அதிலும் சமீபகாலமாக தலையில் தண்ணீர் ஊற்றினாலே ஓரிருமுறை மயக்கம் வந்து விழுந்துவிட்டான். அதிலிருந்து அவனை குளிப்பாட்டுவது என்றாலே பயமாக இருக்கிறது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது?”

டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

“உங்களின் மகனின் குளியல் மயக்கம், பெரும்பாலான குழந்தைகளிடம் அடையாளம் காணப்படுவது தான். குழந்தைக்கு குளியலை குதூகலமூட்டுவதாகவும், சௌகரியமானதாகவும் பழக்க வேண்டும். ஆனால், குழந்தை பொறுக்க முடியாத சூட்டில் வெந்நீரை ஊற்றுவது, வாய்க்குள் கைவிட்டு கோழை எடுப்பது, மூக்கு, கண்களை சுத்தம் செய்கிறோம் என்று விபரீதத்தில் இறங்குவது, குளிப்பாட்டும்போது தாறுமாறாக அழுத்திப் பிடிப்பது போன்றவை தவறானவை.

அதேபோல, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கும்போது, எண்ணெய்த் திவலைகள் மூச்சில் கலந்துவிடும் ஆபத்துக்கு வாய்ப்புஇருக்கிறது. குளிப்பாட்டியபின் சாம்பிராணி போடுகிறேன் என்று புகை மண்டலத்துக்குள் சின்ன நுரையீரலை திணறவைப்பதும் கூடாது. இந்த சித்ரவதைப் படலங்களால் குழந்தைகள் பிஞ்சு பருவத்திலேயே குளியலை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒழுங்காக பழக்கிவிட்டால் ஐந்து, ஆறு வயதுக்கு மேல் குழந்தை சுயமாக குளியலை மேற்கொள்ள தயாராகிவிடுவார்கள். அப்போது மேற்பார்வையை மட்டும் தந்தால் போதும்.

இதையெல்லாம் தாண்டியும் குழந்தை குளிப்பதற்கு அடம் பிடிக்கிறது என்றால், ‘ரிஃப்ளெக்ஸ் எபிலெப்ஸி’ (Reflex Epilepsy) வகையைச் சார்ந்த வலிப்பு நோய்கூட காரணமாக இருக்கலாம். உடனடியாக குழந்தை நல மருத்துவர் அல்லது மூளை மற்றும் நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள். மூளையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று ஸ்கேன் மற்றும் இ.சி.ஜி மூலம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதிலெல்லாம் பிரச்னையில்லை என்று தெரிந்தால், கவலையை விட்டுத்தள்ளலாம்.”
--------------------------------------------------------------------------------------

நன்றி:- டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

நன்றி:- டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி
===================================================
[You must be registered and logged in to see this link.]


avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jan 08, 2011 12:54 am

[You must be registered and logged in to see this link.]


”என் தோழிக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அவள் கணவருக்கு விதைப் பையில் காசநோயைக் கண்டறிந்து, அதுதான் குழந்தைப் பேறின்மைக்கு காரணம் என்றிருக்கிறார்கள். காசநோய் என்றால், நுரையீரல் மட்டுமே இலக்கு என்றிருந்த எங்களுக்கு, இத்தகவல் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மேலும் விளக்கம் கிடைக்குமா ப்ளீஸ்..?”

டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium) என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது.


இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்தத் தொற்றுக்கு உட்படுகிறார்கள். பாக்டீரியாவின் தீவிரம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அவர்களின் பாதிப்பு மட்டும் மாறுபடுகிறது.

காசநோய் உள்ளவர்கள் இருமும் போது காற்றின் மூலம் பரவி அருகிலுள்ளவர்களைத் தொற்றும் இந்த பாக்டீரியா, நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்றில்லை. அங்கிருந்து ரத்தத்தின் மூலமாக உடலெங்கும் பரவுகிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் அதிகமுள்ள உறுப்புகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதை, எலும்புகள், வயிற்றுப்பகுதி என பல இடங்களையும் பாதிக்கிறது. இவை தவிர, டி.பி. தாக்கும் மற்றொரு பிரதான அவயம்… ஆண், பெண் இருவரின் ஜனன உறுப்புகள்.

ஆண்களின் விரையின் மேல் இருக்கும் எப்பிடிடைமிஸ் Epididymis என்ற சிறு குழல்தான், விரையிலிருந்து வெளிப்படும் உயிரணுக்களை அவற்றின் இயக்கத்துக்கான தகுதியை மேம்படுத்தும் தளமாக செயல்படுகிறது. விரை, எப்பிடிடைமிஸ் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ டி.பி-யால் பாதிக்கப்படும்போது விந்தணுவின் நீந்தும் திறன் மட்டுப்பட்டு, குழந்தையின்மைக்கு காரணமாகிறது. வலியுடனோ அல்லது வலியில்லாமலோ விரையில் தோன்றும் வீக்கம் இதற்கு அறிகுறி. உங்கள் தோழியுடைய கணவரின் பிரச்னை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

பெண்களுக்கும் அவர்களின் கர்ப்ப உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்ற இடங்களில் காசநோய் தாக்கலாம். இதிலும் ஃபெலோப்பியன் அதிக இலக்காகிறது. எனவே, குழந்தையின்மைக்காக பரிசோதனை மேற்கொள்ளும் தம்பதிகள் டி.பி. பரிசோதனையிலும் தெளிவு பெறுவது நல்லது.

85% பாதிப்புக்குள்ளாகும் நுரையீரல் மட்டுமே சுலபத்தில் டி.பி-யை வெளியே அடையாளம் காட்டும். மற்ற உறுப்புகளில் பெரும்பாலும் முற்றும் வரை டி.பி. தன்னை அடையாளம் காட்டாது. நீண்ட நாட்களாக சளித் தொந்தரவு, இருமலில் ரத்தத் துளிகள் தென்படுவது, பசியில்லாத்தன்மை, மூச்சுவாங்குதல்… இவற்றோடு மாலையில் மட்டுமே வரும் ஜுரம் போன்றவை காசநோயின் அறிகுறிகள். பரிசோதனைக்குப் பின் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அதற்கான திட்டவட்ட கால எல்லை வரைக்கும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் அலட்சியம் காட்டுவது, மருந்து எடுத்துக் கொண்டதும் மட்டுப்பட்டதாக நினைத்து சிகிச்சையை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் டி.பி. மறுபடியும் தனது வேலையைக் காட்டலாம். அதேபோல ஒரு முறை டி.பி வந்தவருக்கு மறுபடியும் வராது என்ற உத்தரவாதம் கிடையாது!”

நன்றி:- டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

நன்றி:- அ.வி

===============================
[You must be registered and logged in to see this link.]




avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Thu Jan 20, 2011 1:53 pm

[You must be registered and logged in to see this link.]
முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம்… ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவற்றை
எதிர்கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”


[You must be registered and logged in to see this link.]
”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட்டும் காலம் வரை தாய்
மற்றும் சேய் நலத் துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்



[You must be registered and logged in to see this link.]
அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை
அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.

மார்பகத்தில் வலி:
முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில்
வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கையான
தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர்
அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும்
கட்டிகள் உணரப்பட்டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக
வேண்டும்.

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]லி: கர்ப்பப்பை
வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில்
வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக்
கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக
உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ
மருத்துவப் பார்வை அவசியம்.
வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட்டி
கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை
அதிகம் சுரக்கச் செய்வது… இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்கு
காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த
தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும். [You must be
registered and logged in to see this image.]
வரி விழுதல்: உடல்
எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி
வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய
வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவுக்கு உதவும்.

எடை எகிறுவது:
பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது
இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி,
பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்பவதிகளின் எடை மேலும் அதிகமாகும்.
தாய்ப்பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைகளைப்
பின்பற்றலாம்.

மேல்மூச்சு வாங்குவது:
ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை
காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது.
ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] மற்றும் பைல்ஸ்:
கர்ப்பவதிகளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச்சிதைவை தடுப்பற்காக
செயல்படும் ‘ப்ரோஜெஸ்டிரோன்’ (றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ) ஹார்மோனால்
செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து
மாத்திரைகளின் பக்கவிளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம்.
இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால
மலச்சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச்சத்து
உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மாத்திரைகள்
காரணமெனில்… அவற்றைக் குறைத்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவுகளை அதிகம்
எடுத்துக் கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை
அழுத்தத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால்
உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது,
படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொள்வது போன்றவற்றால் இதை
தவிர்க்கலாம்.

மூச்சடைப்பு: உடல்
முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம்
அதிகமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என்றே தப்பாக
அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.

முதுகுவலி மற்றும் கால்வீக்கம்: இடுப்பு
எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும்
முதுகுவலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக்
குழாய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.

போதுமான
ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை
மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா
என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 2:04 pm

மிகவும் பயனுள்ள தகவல் அஜீம்.பகிர்வுக்கு நன்றி




[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 4:30 pm

தகவலுக்கு நன்றி நண்பரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக